ட்ரெண்டி ஹென்னா டிசைன் - 5

தேதி: May 16, 2011

5
Average: 4.4 (13 votes)

 

கருப்பு ஹென்னா கோன்

 

கையின் முன்பக்கத்தின் நடுவிரலில் துவங்கி ஒரு கொடியும், அதன் கீழே இலை போன்ற டிசைனும் வரைந்து கொள்ளவும்.
அதன் கீழே மீண்டும் ஒரு கொடி வரைந்து அதில் ஒரு பூ வரையவும். பூவின் கீழே மீண்டும் இலை வடிவம் வரையவும்.
இதே போல் தேவையான அளவு கொடி, பூ, இலை என்று வரைந்து முடிக்கவும்.
இப்போது மேலே வரைந்த கொடிகளில் சிறு சிறு கோடுகளும், பூக்களின் நடுவே சிறு கோடுகளும் வரையவும்.
இதே போல் கீழே வரை வரைந்த எல்லா பூக்களிலும், கொடிகளிலும் கோடுகள் வரையவும்.
ஆங்காங்கே சிறு பூக்கள் வரைந்து முடிக்கவும். பார்ட்டிக்களுக்கு போட ஏற்ற டிசைன்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி ரொம்ப ஈஸியான டிசைன். இந்த மெகந்தி டிசைனல சில போட்டோ பெயிண்டால வரைஞ்ச மாதிரி இருக்கு. டிசைன் போட்டு முடித்ததும் கருப்பு ஹென்னா கோன் இப்படி தான் இருக்குமா? காய்ந்ததும் சிவக்குமா? ஆனந்தபிரியா போன மெகந்தி டிசைனல சொல்லி இருந்தாங்க. கருப்பு, சிவப்பு இருக்கறமாதிரி. அந்த மாடல ஒரு டிசைன் போட்டு காண்பிக்கிறீங்களா?.

மிக்க நன்றி. ஆனந்த பிரியா கேட்டாங்கன்னு தான் இதை போட்டே அனுப்பினேன். போட்டு முடிச்சதும் இப்படி தான் இருக்கும். அப்படியே எனாமல் மாதிரி பிடிக்கும். எடுத்தா சிவக்கும் ஆனா சீக்கிரமே போயிடும். இதை போட்டு முடிக்கிறதுக்குள்ள இரிடேஷன் வந்துடுச்சு. அதனால் வெறும் கருப்போட முடிச்சுட்டேன், உடனே எடுத்துட்டேன்.

கருப்பு சிவப்பு ஆனந்த பிரியாவே போட்டு அனுப்புறேன்னு சொன்னாங்க... கொஞ்சம் காத்திருப்போம் :) நம்ம கைக்கு இது ஒத்துவரல. ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பதிலுக்கு நன்றி வனி. இங்க கருப்பு ஹென்னா வாங்கி தந்தாங்க. கையில் போட்டதும் நாம சாதாரணமா போடுகிற மெகந்தி மாதிரியே இருந்துச்சு. எனாமல் மாதிரி பிடிக்கல. காய்ந்ததும் உதிர ஆரம்பிச்சுடுச்சு. 2 மணி நேரம் வைச்சு இருந்தாலே நல்லா சிவந்து இருந்தது. ஒரு சந்தேகத்துல தான் கேட்டேன். ஆனந்த பிரியா டிசைனுக்காக காத்திருக்கிறேன்.

கருப்பில் விதம் இருக்கு வினோ. சிலது இப்படி இருக்கும், சிலது சாதா மருதாணி போலவே இருக்கும். இன்னும் கலர்ஸ், க்லிட்டர்ஸ்ன்னு நிறைய இருக்கு. இது வைத்த 1/2 மணி நேரத்தில் நல்லா பிடிச்சுது, ஆனா 1 நாளில் போயே போச்சு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பரோ சுப்பர்.. இதை நீங்க எனக்கு அனுப்பலையே ;(
அழகோ அழகு. சிம்பிள் அண்ட் க்யூட்..
வாழ்த்துக்கள் சகலகலாவல்லி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சுப்ப்...பர் @}->--

‍- இமா க்றிஸ்

அடடே... மறந்துட்டேன் ரம்யா... அடுத்ததை மறக்காம அனுப்பிடுவேன். மிக்க நன்றி ரம்யா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கைவலியோட எனக்கு பதிவா??? பார்க்கவே மகிழ்ச்சியா இருக்கு இமா. ரொம்ப ரொம்ப நன்றி. நலமா இருக்கீங்களா? செபா ஆன்ட்டி நலமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி, டிசைன் ரொம்ப அழகா இருக்கு. வாழ்த்துக்கள்.....

உன்னை போல பிறரையும் நேசி.

மிக்க நன்றி தேவி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தூள், சிம்பிள் கியூட் ஹா இருக்கு, வாழ்த்துக்கள்.
நானும் ப்ளாக் மெஹந்தி ட்ரை பண்ணினேன். இன்னைக்கு தான் அண்ணாக்கு அனுப்பனும். எப்படி இருக்குன்னு பாத்துட்டு சொல்லுங்க.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மிக்க நன்றி. வெரி குட் அனுப்பிட்டீங்களா??? வரட்டும் அறுசுவையில்... தனியா பெரிய மெயிலா போட்டு பீட் பேக் அனுப்பறேன்... ;) சுகிக்கு இல்லாததா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி ரியலி சூப்பர்பா, பார்க்கவே பொறாமையா இருக்கு . ராதா சுவாமினாதன்

டிசைன் சூப்பர், உங்கள் கை சூப்பர் (உங்கள் தங்கை கையை பார்கலையே??!!), நகப்பூச்சு சூப்பர்.....
இந்த அரபிக் மேஹந்திக்கும் அந்த நகபூச்சுக்கும் ஏக பொருத்தம்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மிக்க நன்றி :) நீங்க அறுசுவை பக்கம் வந்து வெகு நாட்கள் ஆயிடுச்சுன்னு நினைகிறேன்... பிசியா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. தங்கை கை கிடைப்பது ரேர். அவர் கணவருக்கு மருதாணி போட்ட கையால் சாப்பாடு போட்டா பிடிக்காதுன்னு போட்டுக்க மாட்டா... ஆனா பாவம் அவளுக்கு ஹென்னா போட ரொம்ப விருப்பம் ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

vani
design romba easy & very attractive

மிக்க நன்றி தோழி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அக்கா ரொம்ப அழகான டிசைன் போட்டு காமிசுருகிங்க ந ட்ரை பண்ணி பாக்றேன் . இன்னும் நெறைய டிசைன் சொல்லித்தாங்க நானும் உங்கள மாதிரி மெகந்தி போடணும் நு ஆசையா இருக்கு . by elaya.G

மிக்க நன்றி. அதென்ன என்னை மாதிரின்னு சொல்லிட்டீங்க.... என்னை விட பல மடங்கு அழகா போடுவீங்க... பழக பழக வந்துடும். போட்டு பாருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் அருசுவைக்கு புதியவள். உங்க மெஹந்தி டிசைன் அழகா இருக்கு. கருப்பு கோன் நீங்க செய்ததா? எப்படி செய்ரதீர்கள்?

உழைப்பால் கிடைக்காத வெற்றியும் இல்லை!
உழைப்பால் கிடைக்காதது வெற்றியும் இல்லை!!

தேன்மொழி பாலா..

அன்புத்தோழி வனிதா... அருமை... அருமை... அருமை... ரொம்ப ரொம்ப லேட்டா வந்து பார்க்கிறேன்னு நினைக்கிறேன்...சூப்பரா இருக்குங்க... அவ்வாமையையும் பொருட்படுத்தாது நம் அருசுவைக்காக நீங்கள் பிளாக் மெஹந்தி போடிருக்கீங்க... ரொம்ப அழகாக இருக்கு. பாராட்டுக்கள்...{{ தப்பா எடுத்துக்காதீங்க... என் அண்ணனின் திருமண வாழ்வு முறியும் தருவாயில் பிரச்சனைகளுடன்கூடிய அமைதியற்ற சூழல் நிலவுகிறது. தர்மசங்கடத்தில் இருக்கிறேன்... கண்டிப்பா கூடிய விரைவில் பிளாக் அன்ட் ரெட் மெஹந்தியோடு வருகிறேன் தோழி...(வாக்கு தவறியதாக நினைச்சுக்காதீங்க ப்ளீஸ்...)}}

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

கோன் வாங்கினதுங்க, செய்ததில்லை. எனக்கு செய்யவும் தெரியாது :(

ரொம்ப ரொம்ப நன்றிங்க. இங்க பாப்ஸ் உமா அல்லது தேவா மேடம்கிட்ட கேட்டா கருப்பு ஹென்னா கோன் செய்ய குறிப்பு கிடைக்கலாம்... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப நன்றிங்க... நீங்க ஏற்கனவே சொன்னிங்க.. இன்னும் பிரெச்சனை சரி ஆகலயா??? கவலைப்படாதீங்க, நிச்சயம் சரி ஆகும். நான் கூட அறுசுவைக்கு ரொம்ப நாளா பல விஷயங்கள் அனுப்பறேன்னு சொல்லிகிட்டிருக்கேன்... முடிவதில்லை... இதுல தப்பா நினைக்க ஏதும் இல்லை... நீங்க கவலை இல்லாம இருந்தா போதும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா