சிக்கன் கிரேவி

தேதி: May 17, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (24 votes)

 

எலும்பில்லா கோழிக்கறி - கால் கிலோ
சின்ன வெங்காயம் - நூறு கிராம் (பொடியாக நறுக்கியது)
தக்காளி - இரண்டு (பொடியாக நறுக்கியது)
இஞ்சி,பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி
தனிமிளகாய்த்தூள் - மூன்று தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு ஆர்க்கு
கொத்தமல்லி இலை - அலங்கரிக்க
உப்பு - தேவையான அளவு
அரைக்க :
துருவிய தேங்காய் - அரை மூடி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பட்டை, லவங்கம் - தேவையான அளவு
ஏலக்காய், பிரிஞ்சி இலை - ஒன்று


 

வெறும் வாணலியில் கோழிக்கறியை போட்டு சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு சேர்த்து மூன்று நிமிடம் வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம், தக்காளி வதங்கியதும் வதக்கி வைத்துள்ள கோழிக்கறியை சேர்க்கவும். ஐந்து நிமிடம் நன்றாக கலந்துவிட்டு வேகவைக்கவும்.
அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கலந்து விடவும்.
பின் சிக்கன் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதில் அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு மூடி வேகவைக்க வேண்டும்.
தண்ணீர் வற்றியதும் எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொத்தமல்லி இலை தூவவும். சூடான சுவையான சிக்கன் கிரேவி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... கண்டிப்பா செய்து பார்த்துட்டு வரேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நல்லா இருக்கும் என்று படங்களை பார்க்கும் போதே தெரியுது.வாழ்த்துக்கள்

சிக்கன் கிரேவி பார்க்கும்போதே சாப்பிட தூண்டுது வாழ்த்துக்கள்.....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பார்க்கும் போதே சாப்பிட தோணுது குமாரி வாழ்த்துக்கள்.படங்கள் மிக தெளிவாக உள்ளது

ஒரு வார்த்தை கவிதை "நீ"

Hi kumari sis.very nice .my fev food.thankyou.i wl try and comment you.vaathukkal

ஐ........ சிக்கன் கிரேவி எனக்கு பிடிச்சது பார்க்கும் போதே தெரியுது சூப்பனு வாழ்த்துக்கள்...

உன்னை போல பிறரையும் நேசி.

எனக்கு பிடிச்ச சிக்கன் குறிப்பு குடுதுருகிங்க ரொம்ப சூப்பர் சீக்கிரமே செய்து பார்த்துட்டு வரேன் வாழ்த்துக்கள் by elaya.G

சூப்பரான சிக்கன் கிரேவி. பார்க்கவே அழகு
கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்
வாழ்த்துகள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

குமாரி சிக்கன் கிரேவி பார்க்கும்பொழுதே அழ்கா இருக்கு வாழ்த்துக்கள்

Hi kumari netru unga dishthan seithen ellorukkum pidithu irunthathu.thanks .

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவை குழுவினருக்கு நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் வனி கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க எதிர்பார்ப்பேன்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் ரீம் கிரேவி சுவையாக இருக்கும்... உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் ஸ்வர்ணா உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் லக்ஷ்மி உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் தேவி உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி செய்து பார்த்துட்டு சொல்லுங்க

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் தேவி உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் இளையா செய்து பார்த்துட்டு சொல்லுங்க வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் ரம்யா செய்து பார்த்துட்டு சொல்லுங்க வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் பாத்திமா செய்து பார்த்துட்டு சொல்லுங்க வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் தேவி செய்து பார்த்துட்டு பின்னூட்டம் தந்ததற்கு நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

SO CUTE;;;;;;;;; 10Q;;;;;;;

nice

ஹாய் சாந்தி தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

I tried this.taste is quite well..and u r giving superb Dishes always..continue your good job for the sake of Gulf's Indains..
thank u
Abdul Azeez

செய்து பார்த்து மறக்காம பின்னூட்டம் தந்ததற்க்கு மிக்க நன்றி அப்துல்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪