பட்டிமன்ற சிறப்பு இழை - 2

இது பட்டிமன்றம் பற்றி மட்டுமே தகவல் தரும் சிறப்பு இழை.

இங்கே பட்டிமன்றத்தில் இதுவரை விவாதிக்கப்பட்ட தலைப்புகள், இதுவரை பங்கு பெற்ற நடுவர்கள், இனி நடக்கப்போகும் பட்டிமன்ற தேதிகள், அதன் நடுவர்கள் போன்ற தகவல்கள் இடம்பெரும். இங்கு பதிவு போடுபவர் அடுத்ததாக நடக்க இருக்கும் எதாவது ஒரு பட்டிமன்றத்துக்கு தான் நடுவராக வர விருப்பம் தெரிவிக்க மட்டுமே இருக்க வேண்டும்.

முக்கியமான வேண்டுகோள்..... தயவு செய்து இங்கு வந்து யாரும் நலம் விசாரிக்கவோ, வாழ்த்து சொல்லவோ, தலைப்புகள் பற்றி அலோசனை நடத்தவோ கூடாது. இவை எல்லாம் இந்த இழை பல பதிவுகளாகி பார்ப்பவருக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவே.... அதனால் தோழிகள் யாரும் கோபம்கொள்ளாது ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள்:

1. ஏற்கனவே வாதாடிய தலைப்புகளை தேர்வு செய்ய கூடாது.

2. பட்டிமன்ற தலைப்புகளை "பட்டிமன்ற தலைப்புகள்" என்ற இழையில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.

http://www.arusuvai.com/tamil/node/10388
http://www.arusuvai.com/tamil/node/19107

3. அத்தலைப்பு மற்றவர்களால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்களே கொடுத்த தலைப்பாக இருக்க கூடாது.

4. சரியான தேதியில் துவக்கி, சரியான தேதியில் முடித்திட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

5. பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

6. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

7. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

8. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

9. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

10. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.

இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

குறிப்பு:

யாரும் இந்த பதிவுக்கு கீழே இருக்கும் "பதிலளி" பயன்படுத்த வேண்டாம். இனி நடக்க இருக்கும் பட்டிமன்ற தலைப்புகளையும் இங்கே மீண்டும் வந்து சேர்க்க விரும்புகிறேன். பதிலளி யாரும் பயன்படுத்தினால் எனக்கு இதே பதிவை மாற்ற இயலாது.

இதுவரை நடந்த தலைப்புகள், அதன் நடுவர்கள் பற்றிய தகவல் கீழே காணலாம்:

பட்டிமன்றம் - 1

தலைப்பு: வாழ்க்கையில் எது முக்கியம்? நிம்மதியா? நிதியா?
நடுவர்: வனிதா வில்வாரணிமுருகன்

பட்டிமன்றம் - 2

தலைப்பு: இன்றைய வாழ்வில் சந்தோசத்தை அதிகம் அனுபவிப்பது - ஆண்களா? பெண்களா?
நடுவர்: இளவரசி

பட்டிமன்றம் - 3

தலைப்பு: செல்போன் நமக்கு அவசியமா? அவசியமற்றதா?
நடுவர்: வின்னி

பட்டிமன்றம் - 4

தலைப்பு: கணவனும் மனைவியும் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வது நல்லதா? இல்லையா?
நடுவர்: தனிஷா

பட்டிமன்றம் - 5

தலைப்பு: வெளி நாட்டு வாழ்க்கையால் நாம் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?
நடுவர்: அதிரா

பட்டிமன்றம் - 6

தலைப்பு: மனிதர்கள் தங்கள் வாழ்வில் குறிக்கோள்களை அடைய முக்கிய காரணமென்ன - முயற்சியா இல்லை அதிர்ஷ்டமா??
நடுவர்: சந்தனா (மிசஸ் சேகர்)

பட்டிமன்றம் - 7

தலைப்பு: நம் நாட்டில் மக்களுக்கு உடல் நலம் குறித்த விழிப்புணர்வு இருக்கா இல்லயா ?
நடுவர்: இலா

பட்டிமன்றம் - 8

தலைப்பு: உலக திரைப்படங்கள் மக்களிடத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் நன்மை பயக்குவையா? தீமை பயக்குவையா?
நடுவர்: பாப்ஸ் உமா

பட்டிமன்றம் - 9

தலைப்பு: வரலாறு என்னும் பாடம் குழந்தைகளுக்கு தேவையா? இல்லையா?
நடுவர்: தாமரை (சந்தோ)

பட்டிமன்றம் - 10

தலைப்பு: நகர வாழ்க்கையா? கிராம வாழ்க்கையா? சிறந்தது எது?
நடுவர்: வனிதா வில்வாரணிமுருகன்

பட்டிமன்றம் - 11

தலைப்பு: கேட்க இனிமை பழைய பாடலா? புதிய பாடலா?
நடுவர்: ஆயிஸ்ரீ

பட்டிமன்றம் - 13

தலைப்பு: கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீட்டு முறை இந்த காலத்திலும் அவசியமா இல்லையா
நடுவர்: கவிசிவா

பட்டிமன்றம் - 14

தலைப்பு: பெற்றோர்கள் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா?
நடுவர்: வனிதா வில்வாரணிமுருகன்

பட்டிமன்றம் - 15

தலைப்பு: இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சிக்கு கோடிக் கணக்கில் செலவழிப்பது சரியா தவறா?
நடுவர்: வின்னி

பட்டிமன்றம் - 16

தலைப்பு: உணவில் ருசியானது சைவமா?அசைவமா?
நடுவர்: சுபத்ரா

பட்டிமன்றம் - 17

தலைப்பு: அன்றைய காதல்,நவீன காதல்-சிறந்தது எது?
நடுவர்: ஷேக்

பட்டிமன்றம் - 18

தலைப்பு: தனிவீடா? அடுக்கு மாடி கட்டிடங்களா?
நடுவர்: வனிதா

பட்டிமன்றம் - 19

தலைப்பு: லஞ்சம் வளர்ந்ததா?இல்லை திணிக்கப்பட்டதா?
நடுவர்: ஷேக்

பட்டிமன்றம் - 20

தலைப்பு: பெண்சுதந்திரம்
நடுவர்: கவிசிவா

பட்டிமன்றம் - 21

தலைப்பு: சுயதொழிலா? வேலைக்கு செல்வதா?
நடுவர்: ஆமினா

பட்டிமன்றம் - 22

தலைப்பு: உயர்ந்தது எது? உறவா? நட்பா?
நடுவர்: ரம்யா

பட்டிமன்றம் - 23

தலைப்பு: நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?
நடுவர்: ராதா ஹரி

பட்டிமன்றம் - 24

தலைப்பு: குடும்பத்தில் பொறுப்பு அதிகம் யாருக்கு? கணவனுக்கா? மனைவிக்கா?
நடுவர்: ஹேமா

பட்டிமன்றம் - 25

தலைப்பு: இளைஞர்கள் சீரழிவுக்கு காரணம், குடும்பமா? சமுதாயமா?
நடுவர்: பவித்ரா

பட்டிமன்றம் - 26

தலைப்பு: எந்தக்காலப் பண்டிகையில் மகிழ்ச்சி அதிகம் ?!
நடுவர்: ஜெயலக்ஷ்மி

பட்டிமன்றம் - 27

தலைப்பு: ஏட்டு கல்வியா? அனுபவ கல்வியா?
நடுவர்: யோகலக்ஷ்மி

பட்டிமன்றம் - 28

தலைப்பு: உலகில் சிறந்தது கல்வியா? செல்வமா?
நடுவர்: கல்பனா

பட்டிமன்றம் - 29

தலைப்பு: நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்?
நடுவர்: கவிசிவா

பட்டிமன்றம் - 30

தலைப்பு: ஜோதிடம்,வாஸ்து பார்க்கலாமா-கூடாதா?
நடுவர்: சாந்தினி

பட்டிமன்றம் - 31

தலைப்பு: மனித மனம் அடிமையாவது அன்புக்கா?புகழுக்கா?
நடுவர்: இளவரசி

பட்டிமன்றம் - 32

தலைப்பு: அழகு என்பது உடலா?? உள்ளமா?
நடுவர்: வனிதா

பட்டிமன்றம் - 33

தலைப்பு: சிக்கனம் அதிகம் கடைபிடிப்போர் ஆண்களா? பெண்களா?
நடுவர்: கல்பனா

பட்டிமன்றம் - 34

தலைப்பு: தொடர்கதையா?சிறுகதையா?
நடுவர்: வனிதா

பட்டிமன்றம் - 35

தலைப்பு: பெற்றோர்களின் உறுதுணை
நடுவர்: ரம்யா

பட்டிமன்றம் - 36

தலைப்பு: இந்தியாவின் சுய அடையாளம்
நடுவர்: யோகலக்‌ஷ்மி

பட்டிமன்றம் - 37

தலைப்பு: விருந்தாளிகளால் சந்தோஷமா? சங்கடமா?
நடுவர்: வனிதா

பட்டிமன்றம் - 38

தலைப்பு: காதலை பெற்றோர் மறுப்பதற்கு காரணம் - ஈகோ??சமூகம்?? பாசமா??
நடுவர்: பவித்ரா

பட்டிமன்றம் - 39

தலைப்பு: ருசிக்காகவா (அ) ஆரோக்கியத்திற்காகவா?
நடுவர்: ரம்யா

பட்டிமன்றம் - 40

தலைப்பு: முக்கனிகளில் சிறந்தது எது? மாவா?பலாவா?வாழையா?
நடுவர்: ரேணுகா ராஜசேகரன்

பட்டிமன்றம் - 41

தலைப்பு: திருமணம் முடிந்ததும் சுதந்திரம் அதிகம் பறிக்கப்பட்டது ஆண்களுக்கா?பெண்களுக்கா?
நடுவர்: ஷேக்

பட்டிமன்றம் - 42

தலைப்பு: என்றும் இனிமையாக நினைக்கும் பருவம் எது? பள்ளி பருவமா?கல்லூரி பருவமா?
நடுவர்: சுகந்தி

பட்டிமன்றம் - 43

தலைப்பு: பொசசிவ்னஸ் எண்ணம் அதிகமாயிருப்பது ஆணுக்கா? பெண்ணுக்கா?!
நடுவர்: இளவரசி

பட்டிமன்றம் - 44

தலைப்பு: தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அறிவை பலப்படுத்துகின்றனவா? பலவீனப்படுத்துகின்றனவா?
நடுவர்: ரேணுகா

பட்டிமன்றம் - 45

தலைப்பு: பெண்சிசுவை மறுக்க காரணம் என்ன? சமூகம்? குடும்பம்?
நடுவர்: வனிதா

பட்டிமன்றம் - 46

தலைப்பு: பெண்ணுக்கு சுதந்திரம் பிறந்த வீட்டிலா?? புகுந்த வீட்டிலா?
நடுவர்: பவித்ரா

பட்டிமன்றம் - 47

தலைப்பு: ஆண்கள் சாதித்த துறைகளில் அனைத்திலும் பெண்களும் சாதிக்கமுடியுமா?முடியாதா?
நடுவர்: ரெங்க ராஜி

பட்டிமன்றம் - 48

தலைப்பு: இன்றைக்கு மனிதாபிமானம் வளர்ந்து வருகிறதா? தேய்ந்து வருகிறதா?
நடுவர்: ரேணுகா

பட்டிமன்றம் - 49

தலைப்பு: பிச்சையிடுவதால் சமூகத்தை வாழவைக்கிறோமா? சீரழிக்கிறோமா?
நடுவர்: வனிதா

பட்டிமன்றம் - 50

தலைப்பு: திருமணங்கள் அதிகம் தோற்கப்படுவது காதல் திருமணத்திலா?பெரியவர்கள் பார்த்து வைக்கும் திருமணத்திலா?
நடுவர்: அஸ்வினி தியாகு

பட்டிமன்றம் - 51

தலைப்பு: பட்டாசுகள் பண்டிகைக்கு அவசியமா? அவசியமில்லையா?
நடுவர்: ஜெயலக்‌ஷ்மி

பட்டிமன்றம் - 52

தலைப்பு: உணவு முறையில் சிறந்தது எது?நம்நாட்டு உணவா? அயல்நாட்டு உணவா?
நடுவர்: ரேணுகா ராஜசேகரன்

பட்டிமன்றம் - 53

தலைப்பு: இன்றைய பெண்களுக்கு ஏற்ற ஆடை புடவையா? சுடியா?
நடுவர்: சீதாலஷ்மி

பட்டிமன்றம் - 54

தலைப்பு: ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா? ஒப்பனை அவசியமா?
நடுவர்: ராதா பாலு

பட்டிமன்றம் - 55

தலைப்பு: இந்த கால ஆண்கள் ராமனா? ராவணனா?
நடுவர்: வனிதா

பட்டிமன்றம் - 56

தலைப்பு: வீட்டில் வேலைக்காரர்கள் உதவியா? உபத்திரவமா?
நடுவர்: கல்பனா

பட்டிமன்றம் - 57

தலைப்பு: பட்டிமன்றங்கள் பயனுள்ளதா? பொழுதுபோக்கா?
நடுவர்: வனிதா

பட்டிமன்றம் - 58

தலைப்பு: வேலன்டைன்ஸ் டே அவசியமானதா? இல்லையா?
நடுவர்: கவிசிவா

பட்டிமன்றம் - 59

தலைப்பு: அதிக மனஅழுத்தம் யாருக்கு? இல்லத்தரசிகளுக்கா? வேலைக்கு செல்லும் பெண்களுக்கா?
நடுவர்: கல்பனா

பட்டிமன்றம் - 60

தலைப்பு: பேஸ்புக் அவசியமா?இல்லையா?
நடுவர்: இளவரசி

பட்டிமன்றம் - 61

தலைப்பு: விடுமுறைக் கால பயணங்களால் வருவது ஆனந்தமே! வருத்தமே!
நடுவர்: ஜெயலக்‌ஷ்மி

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பு:

யாரும் இந்த பதிவுக்கு கீழே இருக்கும் "பதிலளி" பயன்படுத்த வேண்டாம். இனி நடக்க இருக்கும் பட்டிமன்ற தலைப்புகளையும் இங்கே மீண்டும் வந்து சேர்க்க விரும்புகிறேன். பதிலளி யாரும் பயன்படுத்தினால் எனக்கு இதே பதிவை மாற்ற இயலாது.

இனி வரப்போகும் பட்டிமன்றங்களின் தேதிகள் அதன் நடுவர்கள் பற்றிய தகவல்கள்:

பட்டிமன்றம் - 62

நடுவர்: தேவை
தேதி: Apr 2nd - Apr 9th

1. இனி நடக்க இருக்கும் பட்டிமன்றத்தின் தேதிகள் இங்கே கொடுக்கபட்டிருக்கின்றது. உங்களுக்கு வசதியான தேதியில் நீங்கள் நடுவராக வர விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இங்கே பதிவு போட்டு தெரியபடுத்தலாம்.

2. நடுவராக வருபவர்கள் முன்பே அறுசுவையில் பலரால் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் இருந்து மட்டுமே ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

3. தலைப்புகள் காண / சேர்க்க:

http://www.arusuvai.com/tamil/node/10388
http://www.arusuvai.com/tamil/node/19107

பழைய “பட்டிமன்ற சிறப்பு இழை” காண...

http://www.arusuvai.com/tamil/node/13676

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நம் தோழி சீதாலக்ஷ்மி அவர்கள் சுரேஜினி அவர்கள் கொடுத்திருந்த முன்பு நடந்த பட்டிமன்றங்களில் விவாதிக்கப்பட்ட தலைப்புகளை தேடி நமக்காக தந்திருக்கிறார். மிக்க நன்றி சீதாலக்ஷ்மி மற்றும் சுரேஜினி. :)

பட்டிமன்றம் 1: பார்த்தவுடன் சாப்பிடத்தூண்டுவது இனிப்பு வகைகளா? காரமா?

பட்டிமன்றம் 2: இரவில் குழந்தைகளை பெற்றோருடன் உறங்கச் செய்வது ஆரோக்கியமான முறையா? இதனால் பெற்றொரின் தனிமை பாதிக்கப்படுகின்றதா, இல்லையா?

பட்டிமன்றம் 3
பட்டிமன்றம் 4

பட்டிமன்றம் 5: இன்றைய இளம் தலைமுறையினர் தெளிவான சிந்தனையுடன் இருக்கிறார்களா அல்லது மன முதிர்ச்சியின்றி சுயநலமாக செயல்படுகிறார்களா?

பட்டிமன்றம் 6: அன்றும், இன்றும், என்றும், இனிக்கும் இல்லறத்துக்கு காதல் திருமணம் சிறந்ததா அல்லது பெரியோர்களால் பார்த்து, நிச்சயக்கப்பட்ட திருமணம் சிறந்ததா?

பட்டிமன்றம் 7: ஒரு குடும்பம் சிறப்படைய பெரிதும் காரணம் இல்லத்தரசிகளா? வேலைக்கு செல்லும் அரசிகளா?

பட்டிமன்றம் 8: வாடகைத்தாய்... நம் தமிழ் கலாச்சாரத்திற்கு ஒத்து வருமா? வராதா?

பட்டிமன்றம் 9: மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ சிறந்தது எது?கூட்டுக்குடும்பமா? தனிக் குடித்தனமா?

பட்டிமன்றம் 10: இன்ன்றைய ஊடகங்கள் இளைஞர்களை சீரழிக்கிறதா? சீர்படுத்துகிறதா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பதிலளி ஆப்ஷன் க்ளிக் பண்ணாம்லிருக்க இந்த பதிவு. ஹி ஹி பொதுவா கடைசியா அல்லது முதல்ல இருக்கற பதிலளி ஆப்ஷனைத்தான் நிறையபேர் க்ளிக் பண்ணுவாங்க. அதான் நான் க்ளிக் பண்ணாம கீழே ஒரு பதிவை கொண்டு வந்துட்டேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வனி : சிறப்பு இழை - 2
நான் கேட்கனும்னு இருந்தேன்.....நீங்களே ஆரம்பித்து விட்டீர்கள்......
அடுத்த வாரம் எனக்கு தோதுப்படுமா என எனக்குத் தெரியவில்லை......ஜீன் 6க்கு மேல் நான் நடுவராக வரத் தயாராக இருக்கேன்....
ஷேக் அண்ணா முடித்ததும் சமயம் நல்லாயிருந்தால் நான் வருகின்றேன் சரியா...........

பட்டிக்குத் தலைப்புகள்:

1.சமச்சீர் கல்வித்திட்டம் அவசியமா?அநாவசியமா?
2.அரசுத் தேர்வுகள் தேவையா?தேவையில்லையா?
3.அரசுத் தேர்வுகள் வேளைக்கு ஆட்கள் எடுக்கிறதா?அரசுக்கு பணம் ஈட்டுகிறதா?
4.நவீன மருத்துவ முறைகளால் பயனுள்ளதா?இல்லை அவற்றால் வீண் செலவுகளா?
5.வெளிநாடுவாழ் தமிழ் மக்கள் பிள்ளைகள் எப்படி வளர விரும்புகின்றனர்? வெளிநாட்டுப் பண்பாட்டிலா?இல்லை நமது பண்பாட்டிலா?

கவிசிவா... ஹிஹிஹீ... தேன்க்யூ தேன்க்யூ.

ரேணு... நானும் பல நாளா போட நினிஅத்தேன் அப்படியே இருந்தது. இன்று தான் ஓய்வா உட்கார்ந்து போட முடிந்தது. தலைப்புகளை தலைப்புகள் இருக்க இழைக்கு மாற்றுங்க. இங்க இருந்தா யாரும் பார்க்க மாட்டாங்க. இருங்க, தலைப்புகளுக்கும் புது இழி போட்டுடுறேன், அதில் போடுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடுத்து யாரு நடுவர் பதவியை ஏற்க்கறீங்க?
சீக்கரம் வாங்க. வனி, கவி,கல்ப்ஸ், ரேணு, பவி, ரம்யா,ஜெய், இளவரசி இன்னும் விருப்பம் இருக்கவங்க, வந்து சொல்லுங்க பா

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

போன முறை ரம்யா, ரேணு, இளவரசி, சுகி ;) 4 பேர் தயார்ன்னு சொன்னாங்க... இம்முறை அவங்களில் ஒருவர் தான்... அது யார்ன்னு நம்ம சீட்டு போட்டு பார்க்கலாமா??? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இங்கி பிங்கி பாங்கி போடலாமா? யார் பேரு வருதுன்னு பாக்கலாம் :)

அப்பறம் நீங்க
*****பட்டிமன்றம் - 42
நடுவர்: தேவை
தேதி: May 30th - Jun 06th****

இப்படி சொல்லி இருந்தீங்களா, நான் தப்பா போட்டுடேனொன்னு பயந்தேன். இந்த வாரம் பட்டி இருக்கா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்