பட்டிமன்ற சிறப்பு இழை - 2

இது பட்டிமன்றம் பற்றி மட்டுமே தகவல் தரும் சிறப்பு இழை.

இங்கே பட்டிமன்றத்தில் இதுவரை விவாதிக்கப்பட்ட தலைப்புகள், இதுவரை பங்கு பெற்ற நடுவர்கள், இனி நடக்கப்போகும் பட்டிமன்ற தேதிகள், அதன் நடுவர்கள் போன்ற தகவல்கள் இடம்பெரும். இங்கு பதிவு போடுபவர் அடுத்ததாக நடக்க இருக்கும் எதாவது ஒரு பட்டிமன்றத்துக்கு தான் நடுவராக வர விருப்பம் தெரிவிக்க மட்டுமே இருக்க வேண்டும்.

முக்கியமான வேண்டுகோள்..... தயவு செய்து இங்கு வந்து யாரும் நலம் விசாரிக்கவோ, வாழ்த்து சொல்லவோ, தலைப்புகள் பற்றி அலோசனை நடத்தவோ கூடாது. இவை எல்லாம் இந்த இழை பல பதிவுகளாகி பார்ப்பவருக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவே.... அதனால் தோழிகள் யாரும் கோபம்கொள்ளாது ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள்:

1. ஏற்கனவே வாதாடிய தலைப்புகளை தேர்வு செய்ய கூடாது.

2. பட்டிமன்ற தலைப்புகளை "பட்டிமன்ற தலைப்புகள்" என்ற இழையில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.

http://www.arusuvai.com/tamil/node/10388
http://www.arusuvai.com/tamil/node/19107

3. அத்தலைப்பு மற்றவர்களால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்களே கொடுத்த தலைப்பாக இருக்க கூடாது.

4. சரியான தேதியில் துவக்கி, சரியான தேதியில் முடித்திட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

5. பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

6. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

7. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

8. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

9. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

10. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.

இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

ஷேக் அண்ணாவை கேட்க என்ன இருக்கிறது?ரேனுகா தங்கையாகிய நீங்களே நடுவராக இருப்பதே இந்த அண்ணனின் விருப்பம்..

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

பட்டி தலைப்பு
இன்றைய பட்டி - 52 க்கான தலைப்பு இன்னும் சிறிது நேரத்தில் கொடுக்கப்படும்........அனைவரும் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்........

ஹேமா,
பட்டி எப்போதும் திங்கள் அன்று காலை தலைப்பு கொடுத்து அன்றைய நடுவர் துவங்குவார்.அந்த பட்டி ஒருவாரம் நடக்கும்.அடுத்த திங்கள் மாலையில் நடுவர் தனது தீர்ப்பை வெளியிடுவார்....

இந்த பட்டி - 52 சென்ற திங்கள்(31) துவங்கப்பட்டது.நாளை மாலை தீர்ப்பு வழங்கப்படும்.இதுவே பட்டியின் நிபந்தனை.

மீண்டும் அடுத்த பட்டி அடுத்த திங்கள்(14)துவங்கும்ப்பா.......

நாளை மாலை இந்திய நேரப்படி மாலை 5.00மணிவரை நடுவர் பட்டியின் பங்கேற்பாளர்களின் கருத்துகளை,வாதங்களை கேட்க காத்திருப்பார்.......அதன் பின்தான் தீர்ப்புவரும்........இன்னும் நேரம் இருக்கிறது..உங்கள் பதிவுகளை இடுங்கள்........:)

வரும் வாரம் பட்டிமன்றத்தை நடத்த ஸ்பெஷலான நடுவர் வராங்க தோழிகளே... ;) இதுவரை வந்திராத புது முகம், ஆனால் அனுபவத்திலும் பேச்சிலும் எழுத்திலும் வல்லவர்!!! நம்ம தோழி... சீதாலஷ்மி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவர் எங்கே.....
நடுவர் எங்கே எங்கே என தேடுகின்றோம்,,,,,வாங்க வந்து நல்ல தலைப்பைக் கொடுங்க.தோழிகள் வாதாட தயார்நிலையில் உள்ளார்கள்.....

gokilavenkat

நீங்க கண்டிப்பா பட்டியில் கலந்துக்கலாம்.... எந்த தடையும் இல்லை. விதிமுறைகளைப் படித்து அதன்படி நாகரீகமான பேச்சும் தமிழ் பதிவும் அவசியம்....:)
நடுவர் சீதாம்மா உடனுக்குடன் பதில் கொடுக்க முடியாத சூழலில் இருப்பதால் நான் இதைச் சொல்ல நேர்ந்தது.....சரியா.... தாராளமா வந்து உங்கள் கருத்துகளை மென்மையான பதிவுகளா இடுங்கள் பட்டியில்,.....

தோழிகளே... நடுவர் தேவை!! அடுத்த இரண்டு பட்டிக்கும் இப்பவே நடுவரை தேர்வு செய்ய விரும்புகிறேன்... ஓடி வாங்க. இம்முறை இதுவரை நடுவராகாத புதுமுகம் (நடுவர் பொறுப்புக்கு மட்டுமே... பட்டிமன்றத்துக்கே அல்ல) யாராவது வர விரும்பினால் மகிழ்ச்சி.

ஹர்ஷா... பல நாட்களாக பட்டியில் வாதிடுறீங்க, நடுவரா வர விருப்பம் இருக்கா? ப்ளீஸ்... சொல்லுங்க.

ராதா பாலு... நீங்களும் அனுபவம் உள்ளவர். நீங்களும் பட்டியில் தொடர்ந்து பங்கெடுக்கறீங்க... வந்தால் மகிழ்வோம். சொல்லுங்க ப்ளீஸ்.

தளிகா... சில பட்டிகளில் உங்களை தொடர்ந்து காண முடியுது... மிகுந்த மகிழ்ச்சி. நடுவரா வர முடியுமா? வந்தா எங்களூக்கு பெரிய மகிழ்ச்சி. :) யோசிச்சு சொல்லுங்க.

இங்கே நான் பெயர் சொல்லாத மற்றவர்களும் வர விரும்பினா நாமினேட் பண்ணுங்க... புது முகங்களுக்கு முன்னுரிமை நிச்சயம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ வனிதா....என்னை நடுவராக இருக்கும்படி கூப்பிட்டிருக்கீங்க....ரொம்ப நன்றி...இந்த வாரம் நான் ஃப்ரீ....அதனால நான் நடுவராக இருக்கிறேன்... சரியா? தலைப்பை தேர்ந்தெடுத்த பின்பு சொல்கிறேன்...

நடுவர் பொறுப்பை ஏற்க முன் வந்தமைக்கு மிக்க நன்றி. தலைப்பை இங்கே சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை... நீங்க சஸ்பன்ஸா வெச்சிருந்து ஞாயிறு இரவு அல்லது திங்கள் காலை பட்டி துவங்கி சொன்னாலே போதும். தலைப்பை எங்கே தேர்வு செய்ய வேண்டும், அதன் கட்டுப்பாடுகள் என்ன, ஆரம்பிக்க வேண்டிய தேதி, முடிக்க வேண்டிய தேதி போன்ற விவரங்கள் உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கும், இருப்பினும் ஒருமுறை தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த இழையின் முதல் பக்கத்தை பாருங்கள்... சந்தேகம் இருப்பின் கேளுங்கள், சொல்ல காத்திருக்கிறேன். :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த பட்டிக்கு அடுத்த பட்டி தேதி கொடுத்திருக்கேன்... யார் நடுவரா வர விரும்பறீங்க??? இப்பவே சொல்லிடுங்க ப்ளீஸ்.... :)

கல்பனா, ஆமினா... நீங்களும் சொல்லுங்க... நடுவரா வரீங்களா?? :)

தளிகா, ஹர்ஷா... இன்னும் ஒன்னுமே சொல்லலயே.... ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்