பட்டிமன்ற சிறப்பு இழை - 2

இது பட்டிமன்றம் பற்றி மட்டுமே தகவல் தரும் சிறப்பு இழை.

இங்கே பட்டிமன்றத்தில் இதுவரை விவாதிக்கப்பட்ட தலைப்புகள், இதுவரை பங்கு பெற்ற நடுவர்கள், இனி நடக்கப்போகும் பட்டிமன்ற தேதிகள், அதன் நடுவர்கள் போன்ற தகவல்கள் இடம்பெரும். இங்கு பதிவு போடுபவர் அடுத்ததாக நடக்க இருக்கும் எதாவது ஒரு பட்டிமன்றத்துக்கு தான் நடுவராக வர விருப்பம் தெரிவிக்க மட்டுமே இருக்க வேண்டும்.

முக்கியமான வேண்டுகோள்..... தயவு செய்து இங்கு வந்து யாரும் நலம் விசாரிக்கவோ, வாழ்த்து சொல்லவோ, தலைப்புகள் பற்றி அலோசனை நடத்தவோ கூடாது. இவை எல்லாம் இந்த இழை பல பதிவுகளாகி பார்ப்பவருக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவே.... அதனால் தோழிகள் யாரும் கோபம்கொள்ளாது ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள்:

1. ஏற்கனவே வாதாடிய தலைப்புகளை தேர்வு செய்ய கூடாது.

2. பட்டிமன்ற தலைப்புகளை "பட்டிமன்ற தலைப்புகள்" என்ற இழையில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.

http://www.arusuvai.com/tamil/node/10388
http://www.arusuvai.com/tamil/node/19107

3. அத்தலைப்பு மற்றவர்களால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்களே கொடுத்த தலைப்பாக இருக்க கூடாது.

4. சரியான தேதியில் துவக்கி, சரியான தேதியில் முடித்திட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

5. பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

6. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

7. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

8. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

9. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

10. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.

இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

இப்படி கூப்பிட்டாலாவது எட்டி பாருங்க இந்த பக்கம்... ;) வந்து சொல்லுங்கப்பா... அடுத்த நடுவர் முடிவானா நாங்களும் நிம்மதியா ஊருக்கு கிளம்புவோம்ல :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி,உங்கஅழைப்புக்குநன்றி.உடைஞ்சிருந்தஸ்பேஸ்பாரைசுத்தமாகழட்டிபோட்டுட்டாங்ககுட்டீஸ்.
இந்தநிலையில்நடுவராகவருவதுமிகவும்சிரமம்.தவிரஎலக்‌ஷன்ரிசல்டடுத்தவாரம்வரும்.
இங்குநிலைமைஎப்படீருக்குமெனதெரியவில்லை.
அதனால்நான்நடுவராகவரமுடியாதுஎனவருத்ததோடுதெரிவித்துக்கொள்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வனிதா,
இப்போதான் உங்க மணிபேக்ஸ் பார்த்துட்டு இருந்தேன்.திடீர்னு சமீபத்திய கருத்துக்களில் என் பேர் வந்ததும் ஷாக் ஆயிடுச்சு.போன பதிவுக்கே பதில் சொல்லல.சாரி.இப்போ திரும்பவும் கூப்பிட்டு இருக்கீங்க.அதனால் ஓடி வந்துட்டேன்.

நடுவரா வர நான் நினச்சது கூட கிடையாது.இன்னும் அந்த அளவு அனுபவம் வரல.நீங்க ஊரில் இருந்தாலாவது எனக்கு கொஞ்சம் தைரியம் இருக்கும்,நீங்களும் ஊருக்கு போவதால் நான் மாட்டேன்.இப்போதைக்கு நான் வரல.மன்னிக்கவும்.

அடடா... இருவரும் வரலயா? பரவாயில்லை... எப்ப வர முடியுமோ வாங்க. காத்திருக்கோம் :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஜெய் அடுத்த பட்டிக்கு நீங்க நடுவரா வாங்களேன். கல்பனாவால் முடியாது அதனால் நீங்கள் வரலாமா? உங்களுக்கு தான் அந்த திறமை நிறையவே இருக்கின்றது. பீளிஸ் வாம்மா. நீ வந்தால் மிக்க சந்தோஷட“

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

வரீங்களா? நீங்க நடுவரா வந்தா எனக்கும் பெரும் மகிழ்ச்சி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவர் தேவை தேவை தேவை... எத்தனை முறை கூப்பிட்டுட்டேன்... யாரையும் காணோமே... வாங்க இங்க.... விருப்பம் உள்ளவங்க சீக்கிரம் வாங்க... இல்லன்னா பென்ச் தான் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா..நீங்களே நடுவரா வாங்களேன்.நீங்களும் நிறைய பேர கூப்பிடறீங்க...யாருக்கும் வர முடியற சூழ்நிலை இல்ல போல இருக்கு.அதுனால தான் சொன்னேன்.(...இல்ல...யாராச்சும் இன்னொருத்தர் தான் பட்டி நடுவர் சிபாரிசு பண்ணனும் நு எங்கயோ படிச்சேன்.அதன் நான் உங்கள சிபாரிசு பண்றேன்).நன்றி.

வனிதா நடுவராக வர விருப்பமா???( எதாச்சும் தப்பு இருந்தா நான் தான் பட்டி விதிமுறை சரியாய் தெரியாம மூக்க nulachttennu வச்சுகோங்க ..சரியா...)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

கோமதி... ஹஹஹா... யாராவது சிபாரிசு பண்ணனும்னு யார் சொன்னா? நீங்க பட்டியில் கலந்துகிட்டிருந்தா தாராளமா நீங்களே விருப்பத்தை சொல்லலாம். நான் நடுவரா வருவதை பற்றிலாம் இல்லை... இம்முறை போன இரண்டு முறை வந்த மாதிரி புது முகங்கள் வந்தால் நல்லா இருக்கும்னு தான் காத்திருக்கேன். அவங்களுக்கே முன்னுறிமை. கூடவே நான் மாலேவில் இருக்கேன்... அடுத்த வாரம் ஒரு பார்ட்டியும் இருக்கு, அதனால் ஒழுங்கா வந்து பதிவிட முடியுமான்றது சந்தேகம். யாராவது வராங்களான்னு தான் காத்திருக்கேன். :) வரலன்னா வேற வழி எனக்கும் இல்லை.... உங்களுக்கும் இல்லை... பட்டி நிக்காம நடக்க நானே தான் வருவேன். அழைத்தமைக்கு மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடடா! ரே ;) ரொம்ப சந்தோசம் எப்படி கூப்பிட்டு மாட்டி விடறீங்க பாருங்க;-) கொஞ்சம் இங்க குளீர் போகட்டும் பட்டி நடுவர் குளிரும்தான்;-) முடிஞ்சா ஒரு பட்டிக்கு கூப்பிடாமயே வருவேன்;-)

வனி.,

இங்க வீக்கெண்ட் வியாழன், வெள்ளி, சனி ல வரதால போனதடவையே சரியா வரமுடியாமப்போயி ஒரே உருத்தலா இருந்துச்சு... உங்களைமாதிரியேதான் யாருக்கும் வரமுடியாமப் போகும்போது கண்டிப்பா கைகொடுக்க வரேன்;-) என்னோட ஆதரவு எப்போதும் பட்டிக்கு உண்டு;-) மொதல்லேயே பேர் கொடுத்து வர அளவுக்கு என்னோட சிச்சுவேசன் இல்லை;(

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்