பட்டிமன்ற சிறப்பு இழை - 2

இது பட்டிமன்றம் பற்றி மட்டுமே தகவல் தரும் சிறப்பு இழை.

இங்கே பட்டிமன்றத்தில் இதுவரை விவாதிக்கப்பட்ட தலைப்புகள், இதுவரை பங்கு பெற்ற நடுவர்கள், இனி நடக்கப்போகும் பட்டிமன்ற தேதிகள், அதன் நடுவர்கள் போன்ற தகவல்கள் இடம்பெரும். இங்கு பதிவு போடுபவர் அடுத்ததாக நடக்க இருக்கும் எதாவது ஒரு பட்டிமன்றத்துக்கு தான் நடுவராக வர விருப்பம் தெரிவிக்க மட்டுமே இருக்க வேண்டும்.

முக்கியமான வேண்டுகோள்..... தயவு செய்து இங்கு வந்து யாரும் நலம் விசாரிக்கவோ, வாழ்த்து சொல்லவோ, தலைப்புகள் பற்றி அலோசனை நடத்தவோ கூடாது. இவை எல்லாம் இந்த இழை பல பதிவுகளாகி பார்ப்பவருக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவே.... அதனால் தோழிகள் யாரும் கோபம்கொள்ளாது ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள்:

1. ஏற்கனவே வாதாடிய தலைப்புகளை தேர்வு செய்ய கூடாது.

2. பட்டிமன்ற தலைப்புகளை "பட்டிமன்ற தலைப்புகள்" என்ற இழையில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.

http://www.arusuvai.com/tamil/node/10388
http://www.arusuvai.com/tamil/node/19107

3. அத்தலைப்பு மற்றவர்களால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்களே கொடுத்த தலைப்பாக இருக்க கூடாது.

4. சரியான தேதியில் துவக்கி, சரியான தேதியில் முடித்திட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

5. பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

6. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

7. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

8. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

9. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

10. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.

இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

தோழிகளே.... இம்முறை விடுமுறை நேரமாக இருக்கே.. கிருஸ்த்மஸ் மற்றும் புது வருட பிறப்பு சேர்ந்து வருதே... பட்டியை இந்த வாரம் வைக்கலாமா? இல்லை jan 02nd துவங்கும் விதமா வைக்கலாமா? எதுவா இருந்தாலும் முதல்ல நடுவர் வேண்டும்... நடுவரா வருபவர் Jan 02nd சரி என்றால் அன்றே துவங்கலாம்.

தயவு செய்து இம்முறை யாராவது நடுவர் பதவிக்கு வாங்க... ;) தொடர்ந்து வனியே இருக்க முடியாதே, அது விதிமுறையை மீறியதாகிடும். ப்ளீஸ்.... யாராவது வாங்கப்பா.... அம்போன்னு விடாதீங்க, வனி எத்தனைவாட்டி கூப்பிடுறேன்... அதுக்காக வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா.....பட்டிமன்றத்துக்கு வரச் சொல்லி உங்க அறைகூவலைப் பார்த்தேன்.....ஆனால் நான் ஜனவரி முழுக்க பிஸி....அதற்கு மேலதான் நான் வர முடியும்... யாரும் வர முடியாவிட்டால் பட்டியை விடுமுறைக்கு அப்பறம் தள்ளி வெச்சுடுங்களேன்.....அதுதான் சரினு எனக்கு தோணுது....முடிவு எடுக்க வேண்டியது நீங்கதான்!

கூப்பிட்டதும் வந்து பதிலளித்தமைக்கு மிக்க நன்றி. என்ன பண்றது நீங்க அரட்டைக்கு கூவி கூவி கூப்பிடுறீங்க... நான் பட்டிக்கு கூவிகிட்டிருக்கேன். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்னு இண்ட்ரஸ்ட் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு தோழிகளே... இத்துடன் இந்த வருடத்தைய பட்டிமன்றங்கள் முடிவடைகிறது. :)

வரும் வாரம் விடுமுறை காலம் என்பதால் இப்போது பட்டி நடத்தி ஈ ஓட்டப்புடாதுன்னு இந்த வாரம் லீவ் விட்டுட்டேன். அதனால் புது வருடத்தின் முதல் பட்டிமன்றம் Jan 02nd - Jan 09th நடக்க இருக்கிறது. இந்த பட்டி முடிந்து மீண்டும் ஒரு வாரம் பொங்கல் விடுமுறை... அப்போதும் பட்டிக்கு விடுமுறை தான். அதனால் இந்த புது வருட முதல் பட்டிமன்ற நடுவரா வர விரும்பும் அதிர்ஷ்டகாறர் யாருன்னு முடிவு பண்ணி சொல்லுங்க. :)

காத்திருக்கேன்... காத்திருக்கேன்... சீக்கிரம் வரணும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வரும் வாரம் ஏன் லீவ் விடனும்;)

அடுத்த பட்டிக்கு கல்ப்ஸ் ரெடியா இருக்காங்க., போன பட்டிக்கே கல்ப்ஸ் வரதா இருந்தது ஸ்பேஸ் பார் சரியில்லாததால அப்ப அவங்களால வர முடியலை இந்த தடவை எந்த மறுப்பும் சொல்லாம வந்துடுவாங்க;-)

அவங்களால வர முடியலைனாலும் பரவாயில்லை பட்டிக்கு லீவு வேண்டாம் நான் வரேன் வனி இங்க பதினைஞ்சு நாள் ஸ்கூல் லிவு சோ நான் ஃபிரியோ ஃபிரி;-)

Don't Worry Be Happy.

நீங்க வந்தாலும் சரி, கல்பனா வருவதாக இருந்தாலும் சரி (அவங்க வரதா சொன்னதே நீங்க சொல்லி தான் தெரியுது ;() யார் வருவதாக இருந்தாலும் எனக்கு பெரும் மகிழ்ச்சியே. :) லீவ் வேண்டாம் நடத்தலாம்னு தோனுச்சுன்னா தாராளமா தேதி மாத்திடுறேன். Dec 26th - Jan 02nd நடத்தலாம்.

ஒரே காரணம் தான் யோசிச்சேன்... இப்பவே போன ஒரு வாரமா பார்த்தீங்கன்னா பட்டி பக்கம் யாரும் ஆளை காணோம். அரட்டை பக்கம் இருக்க தான் செய்யறாங்க எல்லாரும்... அது ஏனோ பட்டிக்கு நேரம் கிடைப்பதில்லை. ;) இந்த முறையும் பட்டி துவங்கிட்டு ஈ ஓட்டிட கூடாது, போன முறை நான் ரொம்பவே வருத்தப்பட்டேன். ரிஸார்ட் போனாலும் பட்டி பதிவு போடாம போயிட கூடாதுன்னு, லேப்டாப்பை தூக்கிட்டு போய் 2 பதிவுக்கு மேலே 2 நாளில் வராமா ஏமாற்றமா இருந்தது. அதனால் தான் லீவ் நாட்கள்ன்னு தெரிஞ்சே இம்முறை ரிஸ்க் தேவையான்னு யோசிச்சேன்.

நீங்க வாங்க... ஆரம்பிங்க பட்டியை... கல்பனா வந்தாலும் சரி, நீங்க வந்தாலும் சரி.. பட்டியில் வனிதா பதிவு நிச்சயம் இருக்கும். :) நீங்க இருவரில் யார் வரீங்கன்னு சொல்லுங்க... வழக்கம் போல ஞாயிறு இரவே தலைப்பை போடுங்க. வாழ்த்துக்கள் :) ஆக இந்த வருடத்தின் கடைசி பட்டியும், புது வருடத்தின் முதல் பட்டிக்கும் ஒரே நடுவர்!!! குட் குட்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, என்னை இங்கே கோர்த்து விடும் பணி மும்முரமா நடந்துட்டு இருக்கு. ஸ்பேஸ் பார் சரியானதும் நான் வாதத்திற்கு வர்றேன்னு சொன்னதை இந்த ஜெய் தப்பா புரிஞ்சுண்டாங்க. அடுத்த வாரம் யாரும் நடுவரா வரலன்னா நான் கண்டிப்பா அபயக்கரம் நீட்டுவேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹஹஹா... கல்பனா பாருங்க ஜெய் உங்களை மாட்டிவிட திட்டம் போட்டுட்டாங்க ;) யார் யாரை மாட்டி விட்டாலும் எனக்கு நல்ல நடுவர்கள் கிடைச்சா போதும்பா.... சரி அப்படின்னா ஒரு தீர்மானத்துக்கு வருவோம்.. இந்த் அவார்ம் பட்டி நடுவர் நம்ம ஜெய் (எல்லாரும் சோக்கா ஒருவாட்டி கைய தட்டுங்கப்பா... ஸ்பெஷல் பட்டியாச்சே) அடுத்த பட்டி நடுவர் நிச்சயமா நம்ம கல்ப்ஸ் (இன்னொருக்கா சோக்கா கைய தட்டுங்க)

வாங்க ஜெய்.... நகைச்சுவை தென்றல் நடத்த இருக்கும் நகைச்சுவை பட்டிமன்றமா?? ;) கலக்குங்க.

தோழிகளே... வர போகும் இரண்டு பட்டியும் இரண்டு நகைச்சுவை தலைவிகள் நடத்த போகும் ஸ்எஷல் பட்டிமன்றங்கள்... அதனால் எல்லாரும் லீவ் போடாம கலந்துக்கனும்னு அன்போட கேட்டுகறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா...."போன ஒரு வாரமா பார்த்தீங்கன்னா பட்டி பக்கம் யாரும் ஆளை காணோம். அரட்டை பக்கம் இருக்க தான் செய்யறாங்க எல்லாரும்... அது ஏனோ பட்டிக்கு நேரம் கிடைப்பதில்லை."
"நீங்க அரட்டைக்கு கூவி கூவி கூப்பிடுறீங்க... நான் பட்டிக்கு கூவிகிட்டிருக்கேன்."
புரிஞ்சுது நீங்க யாரை சொல்றீங்கன்னு...
போன பட்டி தலைப்பு....ஹ்ம்ம்...மன்னிச்சுக்கோங்க....எனக்கு வாதம் செய்ய இஷ்டமிலாததால வரல.....நான் எப்பவுமே அரட்டை அடிப்பது கிடையாது....அப்பப்பதான் அரட்டை.....
பட்டி தலைப்பு பொறுத்துதான் வாதம் செய்யவும் ஆசை வரும்....அடுத்த தலைப்பு (நகைச்சுவையா?) எனக்கு பிடித்திருந்தால், வாதம் செய்ய ஏற்றதாக இருந்தால் கண்டிப்பாக பங்கு கொள்வேன்....
புதுவருட நடுவர் ஜெயலக்ஷ்மிக்கு ஓ....போட்டாச்சு...வாங்க.... வந்து பட்டியைத் துவக்குங்க!! ஒரு நல்ல தலைப்பை கொடுங்க!!

சிஸ்டம் பழுதடைந்து உள்ளதால் இந்தவாரம் பட்டிக்கு நடுவராக வர இயலவில்லை மன்னிக்கவும்.

சாரி வனி;(

அறுசுவை தோழிகள் அனைவரும் மன்னிக்கவும்;(

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்