பட்டிமன்ற சிறப்பு இழை - 2

இது பட்டிமன்றம் பற்றி மட்டுமே தகவல் தரும் சிறப்பு இழை.

இங்கே பட்டிமன்றத்தில் இதுவரை விவாதிக்கப்பட்ட தலைப்புகள், இதுவரை பங்கு பெற்ற நடுவர்கள், இனி நடக்கப்போகும் பட்டிமன்ற தேதிகள், அதன் நடுவர்கள் போன்ற தகவல்கள் இடம்பெரும். இங்கு பதிவு போடுபவர் அடுத்ததாக நடக்க இருக்கும் எதாவது ஒரு பட்டிமன்றத்துக்கு தான் நடுவராக வர விருப்பம் தெரிவிக்க மட்டுமே இருக்க வேண்டும்.

முக்கியமான வேண்டுகோள்..... தயவு செய்து இங்கு வந்து யாரும் நலம் விசாரிக்கவோ, வாழ்த்து சொல்லவோ, தலைப்புகள் பற்றி அலோசனை நடத்தவோ கூடாது. இவை எல்லாம் இந்த இழை பல பதிவுகளாகி பார்ப்பவருக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவே.... அதனால் தோழிகள் யாரும் கோபம்கொள்ளாது ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள்:

1. ஏற்கனவே வாதாடிய தலைப்புகளை தேர்வு செய்ய கூடாது.

2. பட்டிமன்ற தலைப்புகளை "பட்டிமன்ற தலைப்புகள்" என்ற இழையில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.

http://www.arusuvai.com/tamil/node/10388
http://www.arusuvai.com/tamil/node/19107

3. அத்தலைப்பு மற்றவர்களால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்களே கொடுத்த தலைப்பாக இருக்க கூடாது.

4. சரியான தேதியில் துவக்கி, சரியான தேதியில் முடித்திட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

5. பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

6. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

7. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

8. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

9. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

10. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.

இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

வனிதா, இதற்கு முந்தைய பதிவில் சொன்னது போல யாரும் வரவில்லையென்றால் நான் நடுவராக வருவதாக சொன்னேன். இந்த முறை லேப்பி முதல் மற்ற சூழ்நிலைகள் வரை பட்டியில் நடுவராக பங்கேற்க சாதகமாக இருப்பதால் இந்த முறை நான் நடுவராக வர சம்மதிக்கிறேன். இதோ தலைப்போடு பட்டியை தொடங்கி விடுகிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஜெய்... அடடா சிஸ்டம் என்னாச்சு??? ;( பட்டிக்கு நடுவரா வர முடியாத வருத்தத்தை விட நீங்க பங்கெடுப்பீங்களான்னு தான் பயமா இருக்கு. கட்டாயம் வருவீங்க தானே வாதிட? நடுவரா வர முடியலன்னாலும் பரவாயில்லை... அதான் நம்ம ஆபத்பாண்டவன் கல்பனா வந்துட்டாங்களே ;) வாதிட அவசியம் வந்துடுங்க. இது எதுக்கு சாரிலாம்??? இது எல்லாருக்கும் வர கூடிய சூழ்நிலை தானே.... வருத்தபடவே வேண்டாம். வாதிட வந்துடுங்க போதும் :) ஆனா அடுத்த பட்டிக்கு நீங்க தான் நடுவர்.

கல்பனா... வாங்க வாங்க... அடுத்த வாரம் வருவீங்கன்னு நினைச்சா... இந்த வார ஸ்பெஷல் பட்டிமன்றமே உங்களோடதா??? ;) கலக்குங்க. எப்படியோ பட்டி தடைபடாம நடக்க உதவிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். ஆவளோடு காத்திருக்கேன்... தலைப்போடு வாங்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஜெய்... சிஸ்டம் ரெடி ஆச்சா??? உங்களை காணவே முடியலயே... பிசியா? இந்த வாரம் நீங்க வர முடியுமா?

தோழிகளே ஜெயலக்‌ஷ்மியால் வர முடியல இந்த வாரம் என்றால் யார் அடுத்த நடுவர்... யாருக்காவது விருப்பம் இருந்தா இங்க சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, தோழிகள் அடுத்த வார பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கான க்ளீனிங் வேலையில் ஈடுபட்டிருப்பார்கள். ஒரு சிலர் தொடர்ச்சியாக 5 நாள் பொங்கலையும் கொண்டாடுவதில் பிசியாக இருப்பார்கள். அதனால் இந்த பட்டி மன்றத்தை பொங்கல் கழித்து வைத்துக் கொண்டால் தோழிகள் அனைவரும் கலந்து கொள்ள வசதியாக இருக்கும். உங்கள் மற்றும் மற்ற தோழிகளின் கருத்துக்களை பொறுத்து முடிவை எடுக்கலாம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பொங்கல் 15, 16 தானே??? சரி அதனால் என்ன... பரவாயில்லை... நம்ம பட்டியை 23 - 30 வைப்போம். ஆனா ஜெய் எங்க போனாங்கன்னு சொல்லுங்க... ;) ஆளை காணோம்... தேடோ தேடுன்னு வனி தேடுறேன்னு பேசினா சொல்லுங்க ப்ளீஸ். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, பொங்கல் 15,16 தான் இருந்தாலும் அதற்குரிய அட்வான்ஸ் வேலைகளை பார்த்துட்டு இருப்பாங்களே. வெள்ளையடித்தல்,ஒட்டடை அடித்தல்,பர்ச்சேசிங் இப்படி... பொங்கலுக்கு பிறகு டயர்டா இருப்பாங்க. அதனால நீங்க சொன்னது போல 23 - 30 சரியாக இருக்கும். ஜெய், சாட்டிற்கு வந்தால் கண்டிப்பா இங்கேயும் வருவாங்க. ஜெய் (அ) வேறு தோழிகள் நடுவராக வருகிறார்களா என்று பார்ப்போம். இல்லையென்றால்...நான் இப்ப சொல்லவே மாட்டேன் பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

யாரு நடுவரா வரீங்க??? இன்னைக்கு பட்டி துவங்கி இருக்கனுமே... யாராவது விருப்பம் இருந்தா இன்னும் 1 மணி நேரத்தில் வாங்க... ஜெய் காணோம், கவிசிவா பிசின்னு நினைக்கிறேன்... யாரும் வரலன்னா நான் 1 மணி நேரம் கழிச்சு துவங்குவேன். விருப்பம் உள்ளவங்க வாங்க ப்ளீஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு தோழிகளே... பட்டியில் உள்ள் பதிவுகளை படிக்க நேரம் இல்லை, மனமும் இல்லை... மகளுக்கு நேற்று உடல் நலமில்லைன்னு சொன்னாங்க. இன்னும் ஹாஸ்பிடலில் தான் இருக்கா. இப்போ பரவாயில்லை. கொஞ்சம் மனசு சரி இல்லை. அதான் பதிவிட முடியல. கோவிக்க மாட்டீங்கன்னு தெரியும்... இருந்தாலும் சொல்லிட்டு போவோம்னு வந்தேன். நான் இங்க இருக்கேன், அவ அங்க இருக்கா... அதான் கஷ்டமா இருக்கு. நான் வரலன்னு பட்டியை விடாம, தொடருங்க. நான் நிச்சயம் முடியும்போது வந்து பதிவிடுறேன். இல்ல, இதே தலைப்பை வேறு யாராவது அப்படியே நடுவர் பொறுப்பேற்று தொடர விரும்பினால் தொடரலாம். விருப்பம் உள்ளவங்க வாங்க (இதுவரை இந்த தலைப்பில் பதிவிடாதவங்க).

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, கவலைப்படாதீங்க. குழந்தைக்கு சீக்கிரமே உடல்நிலை சரியாகும். நீங்க பொறுமையா வாங்க. என் வேண்டுதல் உங்க குழந்தைக்கு கண்டிப்பா உண்டு. பட்டிக்கு யாராவது நடுவராக வருகிறார்களா என்று பார்ப்போம். இல்லையென்றால் இந்த பட்டியை விட்டுவிடலாம். விருப்பம் இருப்பவர்கள் ஏற்று நடத்த தடையில்லை.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வனி கவலை படாதிங்க பொண்ணு நல்ல படிய வீட்டுக்கு வந்துருவா இது சொல்லுறது சுலபம் ஆனா ஒரு தாயா அது கஷ்டம்னு எனக்கும் தெரியும் குழந்தைக்கு ஒன்னுனா நம்மால தாங்க முடியாது நீங்க வேற ஊர்ல பொண்ணு வேற ஊர்ல இருக்கா அது கஷ்டம் தான் இருந்தாலும் ஒரு தோழி கவலை படும் போது நாங்க ஆறுதல் சொல்லுறோம் கடவுளை பிரார்த்தனை செய்கிறேன் எல்லாம் சரி ஆகிடும்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மேலும் சில பதிவுகள்