பட்டிமன்ற சிறப்பு இழை - 2

இது பட்டிமன்றம் பற்றி மட்டுமே தகவல் தரும் சிறப்பு இழை.

இங்கே பட்டிமன்றத்தில் இதுவரை விவாதிக்கப்பட்ட தலைப்புகள், இதுவரை பங்கு பெற்ற நடுவர்கள், இனி நடக்கப்போகும் பட்டிமன்ற தேதிகள், அதன் நடுவர்கள் போன்ற தகவல்கள் இடம்பெரும். இங்கு பதிவு போடுபவர் அடுத்ததாக நடக்க இருக்கும் எதாவது ஒரு பட்டிமன்றத்துக்கு தான் நடுவராக வர விருப்பம் தெரிவிக்க மட்டுமே இருக்க வேண்டும்.

முக்கியமான வேண்டுகோள்..... தயவு செய்து இங்கு வந்து யாரும் நலம் விசாரிக்கவோ, வாழ்த்து சொல்லவோ, தலைப்புகள் பற்றி அலோசனை நடத்தவோ கூடாது. இவை எல்லாம் இந்த இழை பல பதிவுகளாகி பார்ப்பவருக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவே.... அதனால் தோழிகள் யாரும் கோபம்கொள்ளாது ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள்:

1. ஏற்கனவே வாதாடிய தலைப்புகளை தேர்வு செய்ய கூடாது.

2. பட்டிமன்ற தலைப்புகளை "பட்டிமன்ற தலைப்புகள்" என்ற இழையில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.

http://www.arusuvai.com/tamil/node/10388
http://www.arusuvai.com/tamil/node/19107

3. அத்தலைப்பு மற்றவர்களால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்களே கொடுத்த தலைப்பாக இருக்க கூடாது.

4. சரியான தேதியில் துவக்கி, சரியான தேதியில் முடித்திட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

5. பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

6. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

7. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

8. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

9. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

10. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.

இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

வனிதா...கவலைப் படாதீங்க....உங்க பெண்ணுக்கு சரியாகி விடும்...நீங்க அங்க இருப்பதால உங்க மனசு ரொம்பவே கஷ்டமாதான் இருக்கும்...மனதைத் தளர விடாதீங்க...கடவுளை பிரார்த்தனை பண்ணிக்கோங்க....நானும் உங்க பெண்ணுக்காக வேண்டிக்கறேன்.

வனி கவலைபடாதீங்க யாழினி சீக்கிரமே குணமாகி வீட்டுக்கு நல்லபடியா வர கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.
நீங்க வரலன்னு யாரும் கோவிக்க மாட்டாங்க அதனால நீங்க கவலைபடாம இருங்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

உங்க மகளுக்கு சரியாகி விடும், இஷ்ட தெய்வமோ , இல்லை உங்க முன்னோர்களுக்கோ ஒரு ரூபாய் பணம் எடுத்து வைங்க .. வேண்டிக்கோங்க..
நாங்க எல்லாரும் தனித்தனியா அவங்க அவங்க வீட்ல கூட்டு பிரார்த்தனை பண்றோம் பா..

என்ன தோழிகளே இதை பார்க்கும் அனைவரும் ஒரு நிமிடம் வனியின் பிரச்சினை தீர்க்க எல்லாம் வல்ல பரம்பொருளிடம் வேண்டுவோமா

வனிதா,

என்ன ஆச்சு?
கவலை படாதீங்க
கண்டிப்பா உங்க பொண்ணுக்கு சரி ஆகிடும் .

We all ll pray for ur daughter.Dont worry.

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

நசீம், தனா, கல்பனா, ராதா, சுவர்ணா, உத்ரா, வெண்ணிலா, பூங்காற்று, மற்றும் தோழிகள்.... அனைவருக்கும் மிக்க நன்றி. குழந்தை நலமாகி வீட்டுக்கு வந்துட்டா. உண்மை தான்... நாம் அருகில் இருந்தால் கொஞ்சம் தைரியம் இருக்கும், கண்ணில் படாதப்போ இன்னும் பயம் அதிகமாயிடுது. அவளிடமும் பேசினேன், அதன் பின் தான் நிம்மதியா இருக்கு. பிராத்தனை செய்த அனைத்து அன்பு உள்ளங்களூக்கும் மனமார்ந்த நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி கவலைவேண்டாம்,கடவுளை நம்பினா கைவிடமாட்டாங்க.இன்று பாப்பாவிற்காக பிராத்தனை செய்கிறென்.விரைவில் வீட்டிற்கு வருவாள்.மன்னிக்கவும் பதில் போடுவதை மறந்துவிட்டேன்.

வ‌னி,
இப்ப‌தான் இந்த இழையை ஏதேச்சையா பார்த்தேன்... யாழினிக்கு முடியலைன்னு ப‌டிச்ச‌தும் மனசு ரொம்ப கஷ்டமாகிடுச்சு :( உடனே வேண்டிக்கிட்டேன். அப்புற‌ம், அடுத்த‌ ப‌க்க‌த்தில், இப்ப‌ ப‌ர‌வாயில்லை வீட்டுக்கு வந்திட்டா என்று பார்த்ததும்தான் ம‌ன‌சுக்கு நிம்ம‌தியா இருக்கு. க‌வ‌லைப்ப‌டாதீங்க‌ வ‌னி... குழந்தையைவிட்டு தூர‌மா இருக்க‌ற‌தால‌ கொஞ்ச‌ க‌ஷ்டமாதான் இருக்கும். ஆனா, அம்மா ந‌ல்ல‌ப‌டியா பார்த்துப்பாங்க‌... ம‌லைபோல‌ வந்த க‌ஷ்டம் பனி போல‌ விலகிட என் பிராத்தனைகள். Take care.

அன்புடன்
சுஸ்ரீ

மிக்க நன்றி இருவருக்கும். நேற்று மாலை வீட்டுக்கு வந்துட்டா. கொஞ்சம் மருந்து எஃபக்ட் இன்னும் இருக்கு போல.. ரெஸ்ட்லஸா அழுதுட்டே இருக்கா. மற்றபடி நலம். போன் பண்ணும்போதெல்லாம் அழறதை கேட்க தான் கஷ்டமா இருக்கு. அம்மா பாவம் தனியா தவிக்கறாங்க. இருந்தாலும் பார்த்துக்கறேன்டா, ஒன்னும் பயப்படாதன்னு சொல்றாங்க. ஆண்டவனை வேண்டிகிட்டு கொஞ்சம் நிம்மதியா இருக்கேன். உங்க எல்லார் பிராத்தனையும் துணை இருக்கும் போது கொஞ்சம் தைரியம் வருது. நன்றி தோழிகளே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிக்கா கவலைப்படாதீங்க. நைட்டுக்குள்ள உங்ககிட்ட சரியாகி பேசிருவா. தைரியமா இருங்க. நல்லாயிருச்சு கேக்கவே சந்தோஷமா இருக்கு. அம்மா பார்த்துகிறாங்கன்னு சொல்லிட்டாங்கள்ள. கொஞ்சம் ரிலாக்சா இருங்க. அம்மா 2 குழந்தைக்கும் ஆறுதல் சொல்றாங்களா. நல்லா பார்த்துப்பாங்க.பாப்பாகிட்ட பேசுறப்போ இந்த சித்தி விசாரிச்சேன்னு சொல்லுங்க.

மிக்க நன்றி. மகள் நலமா இருக்கா இப்போ. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்