பட்டிமன்ற சிறப்பு இழை - 2

இது பட்டிமன்றம் பற்றி மட்டுமே தகவல் தரும் சிறப்பு இழை.

இங்கே பட்டிமன்றத்தில் இதுவரை விவாதிக்கப்பட்ட தலைப்புகள், இதுவரை பங்கு பெற்ற நடுவர்கள், இனி நடக்கப்போகும் பட்டிமன்ற தேதிகள், அதன் நடுவர்கள் போன்ற தகவல்கள் இடம்பெரும். இங்கு பதிவு போடுபவர் அடுத்ததாக நடக்க இருக்கும் எதாவது ஒரு பட்டிமன்றத்துக்கு தான் நடுவராக வர விருப்பம் தெரிவிக்க மட்டுமே இருக்க வேண்டும்.

முக்கியமான வேண்டுகோள்..... தயவு செய்து இங்கு வந்து யாரும் நலம் விசாரிக்கவோ, வாழ்த்து சொல்லவோ, தலைப்புகள் பற்றி அலோசனை நடத்தவோ கூடாது. இவை எல்லாம் இந்த இழை பல பதிவுகளாகி பார்ப்பவருக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவே.... அதனால் தோழிகள் யாரும் கோபம்கொள்ளாது ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள்:

1. ஏற்கனவே வாதாடிய தலைப்புகளை தேர்வு செய்ய கூடாது.

2. பட்டிமன்ற தலைப்புகளை "பட்டிமன்ற தலைப்புகள்" என்ற இழையில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.

http://www.arusuvai.com/tamil/node/10388
http://www.arusuvai.com/tamil/node/19107

3. அத்தலைப்பு மற்றவர்களால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்களே கொடுத்த தலைப்பாக இருக்க கூடாது.

4. சரியான தேதியில் துவக்கி, சரியான தேதியில் முடித்திட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

5. பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

6. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

7. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

8. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

9. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

10. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.

இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

அடுத்த பட்டிமன்றம் வரும் திங்கள் கிழமை(05/03/2012)ஆரம்பிக்கணும். யார் நடுவராக வரப் போறீங்க? சமத்தா வந்துடுங்க கண்ணுகளா?! கூவ விட்டுட்டாதீங்க தோழிகளா ப்ளீஸ்! நடுவரா இருக்க நிபந்தனை எல்லாம் பெருசா ஒனும் கிடையாது. ஏற்கெனவே ஏதாவது ஒரு பட்டிமன்றத்துலயாவது கலந்துக்கிட்டு இருக்கணும். தமிழில் பதிவு போடணும். அம்புட்டுதான். நடுவரா வர விருப்பம் உள்ள தோழிகள் வாங்க வந்து உங்க விருப்பத்தை தெரிவிச்சிடுங்க.

யாராவது வந்து கூப்பிடணும் யாராவது நம்ப பெயரை முன்மொழியணும்னு எல்லாம் எதிர்ப்பார்க்கக் கூடாது. நம்ப வீட்டு விஷேஷத்துக்கு நம்மளையே யாராவது வெற்றிலை பாக்கு வச்சி அழைக்கணுமா என்ன! சீக்கிரம் வந்து என் காதுல தேனை ஊற்றுங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா... கூவினா தான் சில நேரம் வேலை ஆகும் ;)

இளவரசி... சுகி... ஹர்ஷா... லாவண்யா... ராதா... தனா... தான்யா... சாந்தினி... உத்ரா... கோமதி... யாராவது ரெடியா இருக்கீங்களா??? மற்றவர்கள் யாரும் ரெடியா இருந்தாலும் சொல்லுங்கோ... சீக்கிரம் ஓடியாங்கோ!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரா வர போவது யாருங்க... ??? வாங்க வாங்க... வாங்க இங்க... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னைய வெச்சி காமடி கீமடி எதுவும் பண்ணலியே!என்ன சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு.....நான் மொத்தமே நாலே நாலு பதிவு தான் பட்டியிலே போட்டிருப்பேன்.....என்னையெல்லாம் இந்த லிஸ்ட்டில் சேர்க்கப் புடாது....சரியா....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வனிதா...கோமதின்னு என்னையா சொல்றீங்க?????? ...நான் இன்னும் நாலஞ்சு pattila யாவது கலந்துகிட்டு appurama varen .ஆனா கண்டிப்பா வருவேன்.கொஞ்சமாவது அனுபவம் வேணும்ல...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

வனி,கவி...தோழிஸ்....இம்முறை முடியுமென நினைக்கிறேன்...வேறு யாருக்கும் விருப்பம் இருந்தாலும் சொல்லுங்கள்....அதுவரை நான் ஆப்சனல் சாய்ஸ்..வேறு யாருக்கும் வர சூழ்நிலை இல்லன்னா நான் இம்முறை
இருக்கிறேன்..

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

லாவி... காமெடிலாம் ஒன்னுமில்லைங்க. ஒரு பதிவுலையே உங்க திறமையை நாங்க புரிஞ்சுக்குட்டோம்ல :) சீக்கிரம் நடுவரா வரனும்னு அன்போட ரூல்ஸ் போடுறேன்.

கோமதி... நீங்கலாம் எக்ஸ்பீரியன்ஸ் இல்லாமலே பதிவுல எங்களை தோக்க அடிச்சவங்களாச்சே ;) அதனால் நீங்களும் சீக்கிரமே நடுவரா வாங்க. ஓக்கே???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இளவரசி... ஆகா... எத்தனை நாட்களுக்கு பின் நீங்க நடுவரா வர ஒத்துக்கிட்டு வரீங்க... ஆப்ஷனாலாம் விடுவோமா??? நோ வே... இம்முறை எங்கள் அன்புக்குறிய இளவரசி தான் நடுவர். முன்வந்தமைக்கு மிக்க நன்றி இளவரசி. உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியா இருக்கு. :) கவிசிவாவும் பார்த்தா மகிழ்ச்சியடைவாங்க... எங்க காணோம்... நானும் 3 நாளா வரல, அவங்களூம் வரல போல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வருங்கால நடுவருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள். பவர் போயிருந்தது இப்பதான் வந்தது, அறுசுவையை ஓபன் பண்ணி இந்த இழையை பார்த்தேன். ஆஹா.. இங்கேயும் பவர் வந்தாச்சே.. இளவரசி ரூபத்தில் :) இளவரசி, நீங்கள் நடுவராக தலைமையேற்கும் முதல் பட்டியில் வாதிடும் அதிர்ஷ்டத்தை எனக்கு தந்தமைக்கு மகிழ்ச்சி. நல்ல தலைப்பு.. நல்ல நடுவர்.. சந்தோஷம் பா. திங்களை ஆவலோடு எதிர்பார்த்திருப்பேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அடுத்த நடுவர் இளவரசியா? வாவ் வாழ்த்துக்கள் இளவரசி! ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. உங்கள் தலைமையில் வாதாட டிஷ்யூம் டிஷ்யூம் போட ரொம்ப ஆவலா காத்துக்கிட்டு இருக்கோம். ஆனா உங்கள் நச் நச் வாதங்களை மிஸ் பண்ணுவோமே :(. ஆனால் அந்த மிஸ்ஸிங் கை தீர்ப்பில் சரி கட்டிடுவீங்கன்னு எங்களுக்கு தெரியுமே :)

தலைப்பைக் கொடுங்க. நான் சிங்கை போயிட்டு வந்ததும் வாதங்களோட வந்துடுவேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்