பட்டிமன்ற சிறப்பு இழை - 2

இது பட்டிமன்றம் பற்றி மட்டுமே தகவல் தரும் சிறப்பு இழை.

இங்கே பட்டிமன்றத்தில் இதுவரை விவாதிக்கப்பட்ட தலைப்புகள், இதுவரை பங்கு பெற்ற நடுவர்கள், இனி நடக்கப்போகும் பட்டிமன்ற தேதிகள், அதன் நடுவர்கள் போன்ற தகவல்கள் இடம்பெரும். இங்கு பதிவு போடுபவர் அடுத்ததாக நடக்க இருக்கும் எதாவது ஒரு பட்டிமன்றத்துக்கு தான் நடுவராக வர விருப்பம் தெரிவிக்க மட்டுமே இருக்க வேண்டும்.

முக்கியமான வேண்டுகோள்..... தயவு செய்து இங்கு வந்து யாரும் நலம் விசாரிக்கவோ, வாழ்த்து சொல்லவோ, தலைப்புகள் பற்றி அலோசனை நடத்தவோ கூடாது. இவை எல்லாம் இந்த இழை பல பதிவுகளாகி பார்ப்பவருக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவே.... அதனால் தோழிகள் யாரும் கோபம்கொள்ளாது ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள்:

1. ஏற்கனவே வாதாடிய தலைப்புகளை தேர்வு செய்ய கூடாது.

2. பட்டிமன்ற தலைப்புகளை "பட்டிமன்ற தலைப்புகள்" என்ற இழையில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.

http://www.arusuvai.com/tamil/node/10388
http://www.arusuvai.com/tamil/node/19107

3. அத்தலைப்பு மற்றவர்களால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்களே கொடுத்த தலைப்பாக இருக்க கூடாது.

4. சரியான தேதியில் துவக்கி, சரியான தேதியில் முடித்திட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

5. பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

6. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

7. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

8. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

9. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

10. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.

இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

நடுவருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
ஏற்கனவே உங்க தலைமையில் நான் வாதிட்டுருக்கேன் (மனித மனம் அடிமையாவது அன்புக்கா?புகழுக்கா) கல்ப்ஸ் நீங்களும்தான் :)

இம்முறையும் அருமையான தலைப்போடு வாங்க இளவரசி(நல்லா சண்டை போடுற தலைப்போட :-) )

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வரும் 19 - 26 நடக்க இருக்கும் பட்டிமன்றத்துக்கு நடுவர் தேவை தேவை தேவை!!! ;)

ஏற்கனவே ஒரு லிஸ்ட் நம்ம சீதாலஷ்மி சொல்லி கூப்பிட்டாங்க... வாங்க எல்லாரும். நாமும் கூவிடுறேன்...

ஜெய்... பல நாட்களுக்கு பின் வந்திருக்கீங்க... நடுவரா வரீங்களா??? ஓடியாங்கோ இங்க.

சீதாலஷ்மி (மற்றவர்கள் பெயரை கூவிட்டா விட்டுடுவோமா???) நடுவரா வரலாமே... ரொம்ப இடைவெளி வந்துருச்சே ;)

ராதா (பட்டிக்கே வர நேரமில்லைன்னு சொல்வது கேட்குது)... நடுவரா வரீங்களா???

புது மக்கள்... ஹர்ஷா, உத்ரா, சாந்தினி, லாவி, சுவர்ணா... யாருப்பா அந்தப்பக்கம்??? வாங்க எல்லாரும் இங்க. நான் இங்க சொல்லாம விட்ட மக்கள் யாரும் இருந்தாலும் வாங்க. உங்க எல்லார் மேலையும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கு... நீங்களும் அந்த நம்பிக்கையை உங்க மேல வெச்சு வாங்க. :) கை கொடுக்க நாங்க இருக்கோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மன்னிக்கணும் வனிதா......உண்மையாகவே என்னால் இந்த முறை முடியாது....கொஞ்சம் வெளியூர் போகும் வேலை இருக்கு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்தப் பட்டியில் கட்டாயம் பதிவிடுகிறேன்.

நான் உத்ராவை நடுவராக வழிமொழிகிறேன். .தானாக வரத் தயங்குபவர்களை நாம்தானே அழைக்க வேண்டும். புதிதாக நடுவர்கள் வரும்போது பட்டிக்கே ஒரு தனித்தன்மை, எதிர்பார்ப்பு, ஸ்வாரசியம் எல்லாம் வருமில்லயா? அவர்களின் திறமையும் வெளிப்படும். (ஏற்கெனவே நாம் அறிந்ததுதான்...)

ஸோ ஊசிப் பட்டாசு போன்ற வாதங்களால் எங்களின் உள்ளம்கவர்ந்த உத்ரா அவர்களே.....உங்களை நடுவர் பொறுப்புக்கு உற்சாகமாக வரவேற்கிறேன்! நடுவர் பொறுப்பை ஏற்று விரைவில் ஒரு நல்ல பட்டி தலைப்பை வெளியிட வேண்டுகிறேன்.

எப்பவுமே என் கை பட்டிக்கு உண்டு;) ஆனால் என்னமோ தெரியலை நான் பட்டிக்கு நடுவராக வர முதலேயே சொன்னா அது நடக்காமயே போயிருது;( அதனால எமர்ஜென்சி நடுவராக வர சம்மதிக்கிறேன். யாருமே வரலைன்னா கரக்ட்டா திங்கள் ஆரம்பிச்சுடுவேன் உங்களை மாதிரின்னு வைச்சுக்கோங்களேன்;-)

Don't Worry Be Happy.

வனி என்னையா நடுவரா கூப்பீட்டீங்க உங்கள் நம்பிக்கைக்கைக்கு மிக்க நன்றிங்க

நான் இப்பதான் பார்வையாளரிலிருந்து பங்கேற்பாளர் நிலைக்கு வந்துருக்கேன் இதில் முழுமை அடைகிறேன் முதலில், கொஞ்ச காலம் போகட்டும் நடுவர் பதவியை பற்றி யோசிக்கிறேன் மன்னிக்கவும் வனி.

எமர்ஜென்சி நடுவர் அவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மன்னிக்கனும்... ரொம்ப தாமதமா பதில் போடுறேன். ஏதோ கவனத்தில் இந்த பக்கத்தை நான் மிஸ் பண்ணிட்டேன்.

ராதா... சரிங்க... எப்போ முடியுதோ அப்போ வாங்க :) நன்றி.

சுவர்ணா... புதுசா வந்த மாதிரியா இருக்கு வாதமெல்லாம்??? பட்டய கிளப்புனீங்களே... ;) வாங்க சீக்கிரமே. நன்றி சுவர்ணா.

ஜெய்... முடிவு பண்ணிட்டோம்ல... இன்னைக்கு சனிக்கிழமை, நாளை ஞாயிறு... பட்டி துவங்கனும்... அப்படின்னா எமர்ஜன்சி தானே ;) நடுவர் பொறுப்ப்ஐ ஏற்கவிருக்கும் அன்பு தோழியே... வாழ்க வாழ்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி;-)பட்டிக்காக என்னை நீங்க கூப்பிடனும்னு அவசியமே இல்லை எப்பவுமே என் ஆதரவு பட்டிக்கு உண்டு;-)

இன்னிக்கும் நாளைக்கும் டைம் இருக்கு, நடுவர் பொறுப்புக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்;) அவர்களுக்கே முன்னுரிமை..

Don't Worry Be Happy.

அன்பு நடுவர் ஜெய்... :) வருக வருக !!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வந்துட்டோம்ல....;-)

Don't Worry Be Happy.

அப்பா... இப்போ நிம்மதியா உட்கார்ந்துருப்போம்ல... பட்டி தலைப்பை காண காத்திருக்கேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்