பட்டிமன்ற சிறப்பு இழை - 2

இது பட்டிமன்றம் பற்றி மட்டுமே தகவல் தரும் சிறப்பு இழை.

இங்கே பட்டிமன்றத்தில் இதுவரை விவாதிக்கப்பட்ட தலைப்புகள், இதுவரை பங்கு பெற்ற நடுவர்கள், இனி நடக்கப்போகும் பட்டிமன்ற தேதிகள், அதன் நடுவர்கள் போன்ற தகவல்கள் இடம்பெரும். இங்கு பதிவு போடுபவர் அடுத்ததாக நடக்க இருக்கும் எதாவது ஒரு பட்டிமன்றத்துக்கு தான் நடுவராக வர விருப்பம் தெரிவிக்க மட்டுமே இருக்க வேண்டும்.

முக்கியமான வேண்டுகோள்..... தயவு செய்து இங்கு வந்து யாரும் நலம் விசாரிக்கவோ, வாழ்த்து சொல்லவோ, தலைப்புகள் பற்றி அலோசனை நடத்தவோ கூடாது. இவை எல்லாம் இந்த இழை பல பதிவுகளாகி பார்ப்பவருக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவே.... அதனால் தோழிகள் யாரும் கோபம்கொள்ளாது ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள்:

1. ஏற்கனவே வாதாடிய தலைப்புகளை தேர்வு செய்ய கூடாது.

2. பட்டிமன்ற தலைப்புகளை "பட்டிமன்ற தலைப்புகள்" என்ற இழையில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.

http://www.arusuvai.com/tamil/node/10388
http://www.arusuvai.com/tamil/node/19107

3. அத்தலைப்பு மற்றவர்களால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்களே கொடுத்த தலைப்பாக இருக்க கூடாது.

4. சரியான தேதியில் துவக்கி, சரியான தேதியில் முடித்திட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

5. பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

6. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

7. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

8. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

9. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

10. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.

இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி துவங்கும் பட்டிமன்றத்துக்கு நடுவர் தேவை. விருப்பம் உள்ளவர்கள் இங்கே தெரிவிக்கவும்.. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்னிக்கு வெள்ளிக் கிழமை ஆயாச்சு இன்னும் அடுத்த நடுவர் யாருனு சொல்லவே இல்லை. டூ பேட் தோழிஸ் :). சீக்கிரமா வாங்க பட்டியை கவுந்துடாம பார்த்துக்கோங்க தோழீஸ். சீக்கிரம் வாங்கோ

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா சொன்னதை வழி மொழிகிறேன்.

சீக்கிரம் வந்து சொல்லுங்க. யார் அடுத்த நடுவர்? என்ன தலைப்பு?

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாம்மா நீங்க நடுவராக இருந்து நாங்கள் வாதாடி ரொம்ப நாளாச்சே! நீங்களே வந்துடுங்களேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு கவிசிவா,

எனக்கும் ஆசைதான் நடுவராக வர்றதுக்கு, ஆனா, நேரம் கிடைக்கிறது கஷ்டம்.
பட்டியில் வாதாடறது, எனக்கு டைம் கிடைக்கிற அன்னிக்கு, மடமடன்னு ரெண்டு, மூணு பதிவு கூட ஒரே நாளில் போட்டுடுவேன்.

நடுவராக இருக்கறதுன்னா, தினமும் நேரம் ஒதுக்கணும், கொஞ்சம் சிரமம். கொஞ்ச நாளாகும் நான் ஃப்ரீயாகறதுக்கு. இப்போதைக்கு வேற நடுவர் தேடுவோம்.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாம்மா பரவாயில்லைம்மா. நேரம் கூடி வரும் போது நடுவரா இருந்து ஜமாய்ச்சிடுங்க. இப்போ நாம் சேர்ந்து நடுவரைத் தேடுவோம் :).

தோழீஸ் நடுவர் தேவை தேவை தேவைன்னு கூவ விட்டுடாதீங்க. சமத்தா நீங்களே வந்து விருப்பத்தை சொல்லி நடுவராகிடுங்க. இந்த வாரம் என்னாலும் நடுவராக வர முடியாத சூழல் :(. வார இறுதியில் மூன்று நாட்கள் என்னால் அறுசுவைக்கு வரமுடியாது. பட்டிமன்ற தோழிகள் வந்து கைகொடுங்க ப்ளீஸ்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கண்ணுங்களா இப்படி கூவ விடுறீங்களே இது நியாயமா?!!! அடுத்த பட்டி வரும் திங்கள் கிழமை (02/04/2012) ஆரம்பிக்கணும். இன்னும் யாரும் நடுவரா வர ஒத்துக்கலை :(. சீக்கிரமா வாங்க நடுவர் பொறுப்பை ஏத்துக்கோங்க. நாட்டுல அவனவன் நாற்காலி கிடைக்காதான்னு பறக்கறான். வலிய கூப்பிட்டு நாற்காலி கொடுத்தா கூட வேணாங்கறீங்களே :). ஹி ஹி இந்த நாற்காலியில் துட்டு பார்க்க முடியாதுதான் ஆனால் நல்ல அனுபவங்கள் கிடைக்கும். நல்ல பிள்ளைங்களா நீங்களாவே முன் வந்து பொறுப்பை ஏத்துக்கோங்க.

தமிழில் பதிவுகள் போடணும். ஏற்கெனவே ஒரு பட்டியிலாவது வாதாடி இருக்கணும். இது மட்டும்தாங்கோ நடுவரா வரதுக்கு தகுதி. வந்திடுங்கோ ப்ளீஸ். பட்டி தோழிகள் சாந்தினி, உதிரா, கோமதி, தனாகுமார், பூர்ணிமா சங்கர் இன்னும் பெயர் விடுபட்ட தோழிகளும் கோவிக்காம வந்து விருப்பத்தை சொல்லுங்கோ.

மீண்டும் கூவ விட்டுடாதீங்கோ! வனி எங்கிருந்தாலும் வாங்கோ வந்து குரல் கொடுங்கோ

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா..

ரொம்ப சாரி... என்னால நடுவராக வர முடியாதே :( வீட்டிலேயே எனக்கு சில கமிட்மெண்ட்ஸ் மண்டையை குடைந்து கொண்டு உள்ளது.. நடுவராக எடுத்துச் செல்லும் அளவு முழுமையாக என்னைப் பட்டியில் ஈடுபடுத்திக் கொள்ள முடியாது.. மன்னிக்கவும் தோழிகளே! :( வேறு தோழிகள் யாரேனும் கை கொடுத்து உதவுங்கள் ப்ளீஸ்..

கவி சிவா அவர்களே சாரி சாரி என்னால் பட்டியில் நடுவராக வர முடியாது நான் ஓன்று இரண்டு பட்டியில் தான் கலந்து கொண்டு ஓன்று இரண்டு பதிவு தான் போட்டு உள்ளேன் எனக்கு அந்த அளவுக்கு அனுபவம் இல்லை (என் பையனை வைத்து கொண்டு என்னால் முழுதாக பட்டியில் கலந்து கொள்ள முடியாது )

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

தோழி கவிசிவா!! ஒரே ஒரு பட்டியில் பேசிய என்னையும் மதித்து நடுவராக அழைத்த உங்க நம்பிக்கைக்கு என் நன்றிகள்.
ஆனால் எனக்கு அந்த அளவு அனுபவம் போதாது என நினைக்கிறேன். இன்னும் சில பட்டிமன்றங்கள் கடந்த பின் நடுவராகிறேன் கவிசிவா. தவறாக நினைக்க வேண்டாம்.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

மேலும் சில பதிவுகள்