பவுண்ட் கேக்

தேதி: May 19, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.3 (4 votes)

 

வெண்ணை - 225 g
பொடித்த சர்க்கரை - 2 கப்
முட்டை - 3
மைதா மாவு - 1 2/3 கப்
வெண்ணிலா அல்லது எலுமிச்சை எக்ஸ்ட்ராக்ட் - 1 tsp


 

மிக்சி அல்லது ப்லேன்டரில் போட்டு வெண்ணை மற்றும் சர்க்கரையை ஐந்து நிமிடம் சுற்ற வேண்டும்.
பிறகு ஒரு முட்டை மற்றும் சிறிதளவு மாவு (சுமார் ஒரு கைபுடி மாவு) இரண்டு நிமிடம் சுற்றவும்.
இரண்டாவது முட்டை மற்றும் பாதி மாவு சேர்த்து இரண்டு நிமிடம் சுற்றவும்.
மீதமுள்ள முட்டை, எக்ஸ்ட்ராக்ட் மற்றும் மாவை சேர்த்து இரண்டு நிமிடம் சுற்றவும்.
ஓவனை 325 F டிகிரி முற்சூடு செய்யவும்.
பேக் செய்யும் பாத்திரத்தில் பேகிங் ஸ்ப்ரே அடித்து வைக்கவும் இல்லையென்றால் பார்ச்மென்ட் பேப்பர் போடவும். அதுவும் இல்லையென்றால் அதில் வெண்ணை தடவி சிறிதளவு மாவை எல்லா இடத்திலும் படுமாறு தூவி பாத்திரதுள்ள அதிகமான மாவை தட்டி விடவும்.
கலவையை இதில் கொட்டி 65 நிமிடம் பேக் செய்யவும். அல்லது நீங்கள் ஒரு சிறு பல் குத்தும் குச்சியை தண்ணீரில் நனைத்து கேக் நடுவில் குத்தி பார்த்தால் ஓட்டக் கூடாது. அது தான் பதம் அப்பொழுது எடுத்து விட வேண்டும்.
30 நிமிடம் கழித்து துண்டுகள் போடவும்.
சுவையான பவுண்ட் கேக் ரெடி.
இதை நீங்கள் அரை இன்ச் துண்டுகளாக வெட்டி பிரீசரில் வைத்து ஆறு மாதம் வரை கூட உபயோகப் படுத்தலாம்.


மேலும் சில குறிப்புகள்