மெகந்தி டிசைன் - 11

தேதி: May 19, 2011

4
Average: 3.6 (8 votes)

 

மெகந்தி கோன்

 

முழங்கைக்கு கீழ் பகுதியில் ஒரு பூவும் அதை தொடர்ந்து ஒரு இலையும் வரைந்துக் கொள்ளவும்.
அந்த பூவின் மேல் ஒரு வளைவு வரைந்து அதனை சுற்றி இதழ்கள் வரையவும். இதழ் வரைய ஆரம்பித்த இடத்திற்கு சற்று தள்ளி கொடிப்போல் ஒரு வளைவு வரைந்து அதன் ஓரத்தில் சின்ன இதழ்களும், பூவொன்றையும் வரைந்துக் கொள்ளவும்.
அதன் மீது மாங்காய் டிசைன் வரைந்து உள்ளே படத்திலுள்ள டிசைனை வரைந்துக் கொள்ளவும். வெளிப்பக்கத்தில் வரிசையாக இதழ்கள் வரைந்து முடிக்கவும்.
மாங்காய் டிசைன் மேல்பக்கத்திலிருந்து வரிசையாக பூக்களை அடுத்தடுத்து வரைந்துக் கொள்ளவும்.
இந்த பூ டிசைனை ஆள்காட்டி விரல் பக்கம் கொண்டு வந்து கொடி டிசைனை வரையவும். கடைசியில் ஒரு மாங்காய் டிசைனை வரைந்து உள்ளே கோடுகள் போட்டு முடிக்கவும்.
பூக்களும், மாங்காய் டிசைனும் கொண்டு சுலபமாக வரைக்கூடிய மெகந்தி டிசைன் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

என்னுடைய படைப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி.....

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

முதல் டிசைன் ஹா?. வாழ்த்துக்கள். சிம்பிள் ஹ அழகா போட்டு காட்டி இருக்கீங்க, மேலும் பல படைப்புகள் அனுப்ப வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நான் சுகின்னு நினைச்சு வந்தா நீங்க... முதல் டிசைன்... கியூட் டிசைன்... சூப்பரா இருக்கு. மேலும் நிறைய அனுப்புங்க :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Your first design has come very well & the shape of Mango & flowers are neat & clear. keep it up

your future is created by what you do today, not tomorrow &
you must be the change you want to see in the world

சிம்பிளா ஆனா ரொம்ப அழகா இருக்கு சங்கீதா. தொடர்ந்து குறிப்பு அனுப்புங்க.

‍- இமா க்றிஸ்

உங்க முதல் குறிப்புக்கு வாழ்த்துக்கள். எளிமையான டிசைன் அழகா இருக்கு.

நான் இந்த குறிப்பு வரும்னு எதிர்பாக்கவே இல்லை..என் முதல் குறிப்பு இது,,,எனக்கு உற்சாகம் மிகுந்த கருத்துக்களை அளித்த அன்பு தோழிகளான சுகந்தி,வனிதா,சத்யா,இம்மா,வினோஜா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்......

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

சங்கீதா அழகான ஈஸியான டிசைன், நீங்க ரொம்ப அழகா போட்டு இருக்கீங்க. தொடர்ந்து நிறைய டிசைன்ஸ் கொடுங்க வாழ்த்துக்கள்.

தீபா உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி....

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

நீங்களும் எங்க கூட்டணியில சேர்ந்துட்டீங்களா?!தொடர்ந்து கலக்குங்க!

Eat healthy

என்ன கவிதையிலும் கலையிலும் கலக்குறீங்க. அழகு
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

rasia ஆமாம்,என்னையும் உங்க கூட்டணியில் சேர்த்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி!

,thanks ramya.. ஏதோ எனக்கு தெரிந்ததை அனுப்பறேன்.அவ்வளோதான்

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"