fashion jewellery

சென்னை இல் fashion jewellery எங்கு வாங்கலாம்.எப்படி select செய்யலாம்?இது us இல் இருந்து வரும் என் sister க்கு உபயோகப்படும்?

ஹலோ மகி,

நல்ல கேள்விதான் கேட்டிருக்கிங்க!. நான் போனமுறை, ட்ரை பண்ணியது பாண்டி பஜாரில் உள்ள 'நாராயணா பியர்ல்ஸ்'. நல்ல கலெக்ஷ‌ன்ஸ், எனக்கு பிடிச்சிருந்தது. நிமிஷமா கோர்த்து, கழுத்தில் வைத்து பிடிச்சிருக்கா என்று கேட்டு செய்கிறார்கள். அடுத்தது, மயிலாப்பூரில் உள்ள 'சுக்ரா ஜீவல்லர்ஸ்' பார்த்தேன். அங்கேயும் நல்ல அழகான கலெக்ஷன்ஸ்! இவ்வளவுதான் எனக்கு தெரிந்தது. தோழிகள் வந்து மேலும் சொன்னால் எனக்கும் ரொம்ப உபயோகமா இருக்கும்! :) காத்திருப்போம்!

அன்புடன்
சுஸ்ரீ

சென்னையில் நாய்டு ஹால், க்ளோபஸ், ஜில் மில், GRT போன்ற இடங்களில் பேஷன் ஜுவல்லரி கிடைக்கும். என் சாய்ஸ் எப்போவுமே ஜில் மில் தான். விலை அதிகமானாலும் நல்ல கலெக்ஷன் இருக்கும். அப்படி உங்களுக்கு ரொம்பவும் பணம் செலவழிக்க வேண்டாம் என்றால் இருக்கவே இருக்கிறது நம்ப பாண்டி பஜார். அங்கே தேடினால் நல்லது குறைந்த விலைக்கே கிடக்கும். பேரம் கூட பேசி வாங்கலாம். வேறு எங்கெல்லாம் இருக்கிறது என்று நம் தோழிகள் வந்து சொல்வார்கள்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பேஷன் ஜூவல்ஸ் நம்மளே செய்ய தேவையான பொருட்கள் எல்லாம் எங்க கிடைக்கும். சென்னையில் இது போன்ற பொருட்கள் எங்க இருக்கும் தோழிகள் சொல்லுங்களேன்.

ஹை நாங்க இந்தியாக்கு போகும் போது சென்னையில் 3 நாட்கள் தங்க உள்ளோம்.மைலப்புரில். அங்கு ஷாப்பிங் செய்யும் இடங்களை கூற்வும் பிலிஸ் தீபா

டி நகர், அடையார் போன்ற இடங்களில் நீங்க கேட்கும் பொருட்கள் கிடைக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா டி. நகர், அடையாரில் எந்த கடை எதுவும் குறிப்பிட்ட பெயர் இருக்கா அப்படியில்லை என்றால் அங்கு நிறைய கடைகள் இருக்குமா? எனக்கு நிறைய மொத்தமாக வேண்டும். அதற்கு தான் கேட்கிறேன். இதைப் போல் மொத்தமாக வாங்கி இந்த பேஷன் ஜூவல்ஸ் செய்து கொண்டிருப்பவர்கள் தயவு செய்து எனக்காக பதில் சொல்லவும். எப்படி வாங்கனும் எங்கு கிடைக்கும் எந்த கடையில் குறைந்த விலை இது போன்ற சில விவரங்களை

அடையார் என்றால் R.S. Shopping Centre. டி. நகர் என்றால் ரங்கனாதன் தெருல இருக்கு. அங்க போய் கேட்டாலே கடை பெயர் சொல்வாங்க, எனக்கு பெயர் நினைவில்லை. சாரிங்க. :( ஆனா அங்க இருந்து தான் அடையார் கடையில் எல்லாம் வாங்குவாங்க. பாரீஸ் கார்னர்ல கூட இதுக்கு நிறைய கடை இருக்கு. போலீஸ் ஸ்டேஷன் பின் பக்கம் உள்ள தெரு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனிதா நான் சென்னை கிடையாது அதனால் நீங்க சொல்லும் அடையாளங்களை வைத்துக் கொண்டு தான் சென்னை போகும் போது வாங்கி வர வேண்டும் அதற்கு தான் கேட்டேன்.

பதில் அளித்த அனைவருக்கும் என் நன்றி.

மேலும் சில பதிவுகள்