பேபி பொடேடோ ப்ரை

தேதி: May 26, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (6 votes)

 

பேபி பொடேடோ - 1/2 kg
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 5 பல்
மிளகு - 1/2 tsp
சீரகம் - 1/2 tsp
காய்ந்த மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - சிறிது
கடலை மாவு - 1 tbsp
அரிசி மாவு - 1 tbsp
தயிர் - 1 tbsp
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் - 1/4 கப்


 

உருளையை முக்கால் பாதம் வேகவைத்துக் கொள்ளவேண்டும்.
வேகவைத்த உருளையில் ஒரு சிறிய முற்க்கரண்டி கொண்டு மூன்று இடங்களில் உடைந்துவிடாமல் குத்திவிடவும்.
மாவு தயிரை தவிர மற்ற பொருட்களை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மசாலாவில் மாவு தயிர் மற்றும் உப்பு கலந்து வைக்கவும். தேவையானால் கலர் கூட சேர்த்துக்கலாம்.
இந்த மசாலாவில் உருளை சேர்த்து நன்கு பிராட்டி ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
பாதி எண்ணையை ஊற்றி சூடானதும் பாதி உருளையை சேர்த்து சிறு தீயில் நன்கு சிவக்க விடவும். மீதியை இன்னொரு முறை அப்படியே செய்யவும்.
இதற்கு மேல் வருத்த கருவேப்பிலை சேர்த்து பரிமாறலாம்.


சாம்பார் சாதம், தயிர் சாதம், கலந்த சாதம் இல்லையென்றால் அப்படியே ஸ்நாக் போல சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

எடிட் போட்டோஸ் ப்ளீஸ். ;)))

‍- இமா க்றிஸ்

மாற்றிவிட்டேன் இமா.... பிழைக்கு வருந்துகிறேன் :(

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!