ப்ளாக் மெகந்தி டிசைன்

தேதி: May 26, 2011

4
Average: 3.2 (10 votes)

 

மெகந்தி கோன்

 

கையின் கீழ் பகுதியில் மாங்கா பிஞ்சு போன்ற டிசைன் வரையவும். அதனுள் சில கோடுகள் மற்றும் வட்டம் போட்டு அதை நிரப்பவும்.
மா பிஞ்சின் வலதுப்பக்கத்தில் மூன்று இதழ் கொண்ட பூ வரையவும். அதன் உள்ளே கோடுகள் வரைந்து, அதன் மேல் புள்ளிகள் வைக்கவும்.
பூவின் முதல் இதழில் இருந்து, மீண்டும் ஒரு மா பிஞ்சு வரைந்து அதனுள் கோடுகளும், வளைவுகளும் போட்டு நிரப்பவும்.
இரண்டாம் இதழில் இருந்து, ஒரு வளைவு போன்ற ஒரு டிசைன் வரைந்து அதன் உள்பகுதி முழுவதும் கோடுகளால் நிரப்பவும்.
அந்த வளைவின் ஓரத்தில் படத்தில் உள்ளது போல் டிசைன் வரைந்துக் கொள்ளவும்.
மா பிஞ்சில் இருந்து மீண்டும் ஒரு வளைவு டிசைன் வரைந்து, அதனை படத்தில் உள்ளது போன்று நிரப்பவும்.
வலதுப்பக்கத்தில் வரைந்த வளைவுக்கு மேல் மூன்று இதழ் கொண்ட பூ வரையவும், அதனுள் கோடுகள் போட்டு, மேலே புள்ளிகள் வைக்கவும்.
விரல் பகுதிகளுக்கு மீண்டும் மாங்காய் பிஞ்சு போன்ற டிசைன் வரையவும். இல்லையெனில் வேற எந்த டிசைன் வேண்டுமானாலும் போட்டு கொள்ளலாம்.
முதலில் வரைந்த மாங்காய் டிசைனின் இடதுப்பக்கத்தில் இலை வடிவத்தில் உள்ள டிசைனை வரைந்துக் கொள்ளவும்.
தேவைப்படும் டிசைன் கை முழுவதும் வரைந்த பிறகு, ப்ளாக் மெஹந்தி பார்டர் தரலாம். முழு டிசைன் வரைந்த பின் தரவது எனில், கொஞ்சம் இடைவெளி விட்டு அடுத்த டிசைன் போட வேண்டும். அப்போது தான் ப்ளாக் மெஹந்தி பார்டர் போடுவதற்கு வசதியாக இருக்கும். இல்லையெனில் ஒரு ஒரு டிசைன் முடிந்த பின்னும் அதனை சுற்றி ப்ளாக் மெஹந்தி வைத்து பார்டர் தரலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப சூப்பர்.... அதுவும் ஒரு பூ 3 விரலில் வருவது போல் போட்டிருக்கீங்க பாருங்க... நச்சுன்னு வந்திருக்கு. வெரி கியூட் டிசைன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மெகந்தி டிசைன் அழகா இருக்கு. எனக்கு கொஞ்சம் புரியாதது போல் இருக்கு. இரண்டு விதமாக மெகந்தி கோன் பயன்படுத்தி இருக்கீங்களா சுகி. இந்த ப்ளாக் மெகந்தி எத்தனை நாள் வரைக்கும் கையில் இருக்கும். இன்னொரு முறை மெகந்தி டிசைன் அனுப்புபோது கோனின் புகைப்படத்தையும் காண்பிங்க.

ஹாய் சுகி மெஹந்தி டிசைன் சூப்பரா இருக்கு. என் மருமகளுக்கு அழகாக போட்டு விடப் போறேன் :).

ஆனால் எனக்கு ப்ளாக் மெஹந்தியில் ஒரு சந்தேகம். ஒருவாட்டி நான் வாங்கிய கறுப்பு மெஹெந்தி கையில் போட்டதும் போட்ட இடம் முழுவதும் அரித்து தடித்து விட்டது. அதிலிருந்து எனக்கு கறுப்பு மெஹந்தின்னா கொஞ்சம் பயம். நீங்க யூஸ் பண்ணியிருக்கறது என்ன ப்ராண்டுன்னு சொல்லுங்கப்பா. எனக்கும் ஆசையா இருக்கு போட்டுக்க :))

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு சுகந்தி,

சூப்பராக இருக்கு, வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

வழக்கம் போல சூப்பரா இருக்கு..
இரண்டு காம்பினேஷனாக இருப்பதால் பளிச்சுனு இருக்கு
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

டிசைன் வெளியிட்ட அட்மின் குளுவிர்ர்க்கு மிக்க நன்றி..

வனி - முதல்ல வந்து வாழ்த்துனதுக்கு ரொம்ப நன்றி :-)
வினோ - /இரண்டு விதமாக மெகந்தி கோன் பயன்படுத்தி இருக்கீங்களா/// ஆமாம் டா, ரெண்டு கோன் பயன்படுத்தி இருக்கேன்.ஒன்னு நார்மல் கோன், இன்னும் ஒன்னு ப்ளாக் மெஹந்தி கோன் டா. அடுத்த முறை கண்டிப்பா கோன் காட்டறேன் டா

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

கவி - உங்க மருமகளுக்கு போட்டு விட்டீங்களா? ப்ளாக் மெஹந்தி எல்லாருக்கும் சேராது, எவளோ நல்ல பிராண்ட் வாங்குனாலும் கைல அரிப்பு வந்துடும். ப்ளாக் இல்லாமையே போட்டுக்கோங்க :)

சீத்தாம்மா - உங்க வாழ்த்துக்கு நன்றிமா

ரம்யா - வாழ்த்துக்கு நன்றி டா :)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ரெண்டு கலர் போட்டு இருக்கிறது அழகா இருக்கு. விரல் எல்லாம் சேர்த்தாப் போல போட்டு இருக்கிறது லவ்லி.

‍- இமா க்றிஸ்

nice