கோழி குழம்பு

தேதி: May 26, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (34 votes)

 

கோழிக்கறி - அரைக் கிலோ
பெரிய வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பச்சை மிளகாய் - இரண்டு
மிளகாய் தூள் - மூன்று தேக்கரண்டி (விருப்பத்திற்கு ஏற்ப )
இஞ்சி பூண்டு விழுது - மூன்று தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் - பாதி மூடி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - அரை தேக்கரண்டி
லவங்கம், ஏலக்காய் - தலா இரண்டு
பிரிஞ்சி இலை, பட்டை - விருப்பத்திற்கு ஏற்ப
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது


 

கறியை சுத்தம் செய்து வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து அதனுடன் வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கிளறவும்.
பின் கறியை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.அதனுடன் அரைத்த விழுது மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்.
ஐந்து நிமிடம் வதக்கிய பின் மூன்று டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
15 நிமிடம் குழம்பை கொதிக்க வைக்கவும்.(மிளகாய் தூள் காரம் போகும் வரை)
குழம்பு சுண்டி வந்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொத்தமல்லி இலை தூவி சூடான சாதத்துடன் சாப்பிட சூடான சுவையான கோழி குழம்பு ரெடி.

கோழி கறி எளிதில் வெந்துவிடும் அதனால் அவரவர் விருப்பத்திற்கு குழம்பை தண்ணியாகவோ திக்காகவோ வைக்கலாம். குழம்பு மிளகாய் தூள் மட்டும் சேர்த்துள்ளேன் காரம் வேண்டியவர்கள் ஒரு தேக்கரண்டி தனி மிளகாய்தூள் சேர்த்து செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப சுலபமான சுவையான குறிப்பு. கண்டிப்பா செய்துடுட்டு வரேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பார்க்கவே சாப்பிடனும் போல உள்ளது ...நல்லா இருக்கும்னு நினைக்கிறன் செய்து பார்கிறேன்.வாழ்த்துக்கள் குமாரி

apadiye gramathu koli kulambu vasam

குமாரி மேடம்,

கோழி குழம்பு பார்க்கும் போதே சாப்பிடனும் போலே இருக்கு கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவை குழுவினருக்கு நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் வனி செய்து பாருங்க நல்லா இருக்கும்.செய்து பார்த்துட்டு சொல்லுங்க எப்படி இருந்ததுன்னு..நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் தேவி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. செய்து பாருங்க பிடிக்கும் .

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

கிராமத்து விருந்துதான் என் அம்மாவிடம் கத்துகிட்டதுதான் .உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி லலிதா.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

நன்றி கவி செய்து பாருங்க நல்லா இருக்கும்.என்ன உங்களை ரொம்ப நாளா ஆளே காண முடியல?

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சூப்பர் குறிப்பு. பார்த்தாலே சூப்பர்.
கண்டிபாக மாடி பாக்கறேன்..;)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

குமாரி,வித விதமா செய்து அசத்துறிங்க.உங்க குறிப்புகள் அனைத்தும் அருமை.சிக்கிரமே gold star வாங்கிட வாழ்த்துக்கள்.

செய்து பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க ரம்யா வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி ..

ரம்யா சின்ன வயசுல இருந்தே எனக்கு கத்திரிக்காய் பிடிக்காது ஏன் என்றே தெரியாது.அனால் சாம்பார் , இட்லி சாம்பார் இதில் கத்திரிக்காய் சேர்ப்பேன் ..:)

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

என்ன ரேணு உங்களை பார்க்கவே முடியல.கண்டிப்பா நீங்க ஒரு கோல்ட் ஸ்டார் வாங்கி குடுத்துடுங்க ..முடிந்தால் இன்னைக்கு பேசலாம்.நீயே கூப்பிடு

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சிக்கன் குழம்பு பார்க்க எளிமையான குறிப்பு போல உள்ளது வாழ்த்துக்கள் சண்டே செய்துபார்துட்டு வரேன்

ஒரு வார்த்தை கவிதை "நீ"

ஹாய் லக்ஷ்மி உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

very nice receipe

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி kowsalyameena

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

Madam,
மசாலா ஒன்ரும் குரிப்பிடவில்லை; என் இஷ்டத்துக்கு கொஜ்சம் போட்டுவிட்டேன் -
Thanks.
shajahan-kuwait

மசலா என்று தனியாக எதும் சேர்க்கவில்லை.மிளகாய் தூள் மட்டும் தான் சேர்த்து உள்ளேன்.எப்படி இருந்தது என்று சொல்லவே இல்லயே shajahan

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி நேற்று உங்கள் குறிப்புதான் செய்தேன் நன்றாக இருந்தது.

ஒரு வார்த்தை கவிதை "நீ"

செய்து பார்த்து பின்னூட்டம் தந்ததற்கு நன்றி லக்ஷ்மி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

நான் இன்னைக்கு உங்க ரெசிப்பி தான் செய்தேன்.ரொம்ப நல்லா இருந்துச்சு. கடைசி ஆ மிளகு தூள் சேர்த்தா இன்னும் சுவை அதிகமா இருக்கு.

"விடா முயற்சி வெற்றி தரும்"
......திவ்யாலோகேஷ்

ஹாய் திவ்யா செய்து பார்த்துவிட்டு பின்னூட்ட்டம் தந்ததற்கு நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

kulamu migavum super manathara paratukiren Rgowsi

super madam

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி மா..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪