Bald head வருமுன் காக்க

தோழிகளே
என் கணவருக்கு Bald head. இது பரம்பரையாக உள்ளது, அவருடைய அப்பாவுக்கும் முடி கிடையாது. எனக்கு இரண்டு பையன்கள். முதல் பையன் வயது 8, இரண்டாவது பையன் வயது 3.
என் பயம் என்னவென்றால் என் முதல் பையனுக்கும் முன் தலை வழுக்கை ஆகிவிடுமோ என்று. ஏனென்றால் என் கணவர் தலையில் வரும் ஒருவிதமான smell என் பையன் தலையிலும் வருகிறது.
வருமுன் காப்பதுபோல் ஏதாவது செய்து முடி கொட்டாமல் தடுக்க முடியுமா? யாராவது தயவு செய்து பதில் கொடுங்கள். நன்றி.

please someone give me some ideas?

ஹாய் ராஜி,
கருவேப்பிள்ளை உணவில் அதிகம் சேர்த்தால் முடி கரு கருவென்று நிறைய வளரும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்

ஹலோ வினயா,
தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. அவன் முடி நல்ல அடர்த்தியாக தான் இருக்கின்றது. நன்றாக கரு கருவென்றும் இருக்கிறது. நான் தினமும் எண்ணெய் தடவி விடுகிறேன். இருந்தும் அந்த ஒருவிதமான smell அவன் தலையிலிருந்து வருகின்றது. அதனால் தான் கொஞ்சம் கவலையாக இருக்கிறது.
thank you

மேலும் சில பதிவுகள்