காளான் ஈஸி வறுவல்

தேதி: May 27, 2011

பரிமாறும் அளவு: 2 - 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (6 votes)

 

பட்டன் காளான் - 10 எண்ணம்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ் ஸ்பூன்
சிக்கன் 65 தூள் - 2 டீஸ் ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு
உப்பு - தேவைப்பட்டால்


 

காளானை சுத்தமாக கழுவி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

கொதிக்கும் நீரில் காளான் துண்டுகளை போட்டு 3 - 5 நிமிடம் மஞ்சள்த்தூள் போட்டு வேகவைக்கவும் தேவைப்பட்டால் சிறிது உப்பும் சேர்த்துக்கொள்ளலாம்.

வேகவைத்துள்ள காளானை தண்ணீர் வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிக்கன் 65 தூள் போட்டு நன்றாக பிரட்டி 10 நிமிடம் வைக்கவும்

ஒரு வாணலியில் பொரிக்க சிறிது எண்ணெய் விட்டு 4, 5 துண்டுகளாக போட்டு பொரித்துக்கொள்ளவும்

காளான் ஈஸி வறுவல் ரெடி


சாப்பிடும் முன்பு பொரித்து சூடாக சாப்பிட நன்றாக இருக்கும்,
சிக்கன் 65 பொடி எந்த பிரண்ட் என்றாலும் சரிதான் , ஆச்சி, சக்தி எதுவாக இருந்தாலும் ஓகேதான்

மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று உங்கள் காளான் ஈஸி வறுவல் செய்தேன்... ரொம்பவே சிம்பிளாக இருந்தது... நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

காளான் செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியமைக்கு மிக்க நன்றி

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China