சுரைக்காய் கூட்டு

தேதி: May 27, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (5 votes)

 

சுரைக்காய் - கால் கிலோ
பாசிப்பருப்பு - 50 கிராம்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
மல்லி இலை - சிறிது
நெய் - ஒரு தேக்கரண்டி


 

சுரைக்காயை தோல் எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நறுக்கிய சுரைக்காயை போட்டு சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து வேக விடவும்.
பருப்பை கழுவி குக்கரில் போட்டு ஒரு விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
காய் வெந்ததும் வேக வைத்த பருப்பை போட்டு ஒரு கொதி வந்ததும் நெய் விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
மல்லி இலை தூவி பரிமாறவும். சுரைக்காய் கூட்டு ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆரோக்கியமான குறிப்பா செய்து காமிச்சு இருக்கீங்க வாழ்த்துக்கள் by elaya.G

ஹமீதா அம்மா,

நானும் இதே முறையில் தான் செய்வேன் இப்போ தான் சுரைக்காய் மார்க்கெட்டில் வரும்
கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

இளையா முதல் ஆளாய் வந்து வாழ்த்தி இருக்கிங்க நன்றி
வருகைக்கு நன்றி

கவி நீங்களும் இதேமுறையில் செய்வீங்களா? ரொம்ப சந்தோசம் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

அன்பு ஹமீத் ஃபாத்திமா,

கூட்டு வகைகள் செய்ய மிகவும் பிடிக்கும். அவசியம் செய்து பார்க்கிறேன்

அன்புடன்

சீதாலஷ்மி

நல்ல சுவையான குறிப்பு. இன்று செய்தோம், எல்லாருக்கும் பிடிச்சுது... மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா