லவ்பேர்ட்ஸ் வளர்ப்பது

லவ்பேர்ட்ஸ் வளர்ப்பது பற்றி கொஞ்சம் சொல்லுங்க..... ப்ளிஸ்

வளர்க்கப் போறீங்களா மாதவன்?

எப்பவும் ஆக்டிவா இருக்கிற இந்தப் பறைவைகளைப் பார்த்தாலே மனசுக்கு சந்தோஷமா இருக்கும்.

பறைவைகள் எங்கேயிருந்து எடுக்கப் போறீங்களோ அவங்கள்ட்டயே கேளுங்க. ஒரு முறை அங்க இருக்கிற கூட்டைப் பாருங்க. வளர்க்க ஆரம்பிங்க. பிறகு மீதி எல்லாம் அனுபவத்துல வந்துரும்.

நான் வளர்த்தது 40 வருடங்கள் முன்பு. இப்போ நிறைய விடயங்கள் யோசிக்கிறோம். எங்கள் வீட்டில் ஒரு கூடு, ஒரு சோடிப் பறவைகள், தானியம் வைக்க ஒரு கிண்ணம், தண்ணீர்ப் பாத்திரம் இத்தனையோடு ஆரம்பித்தோம்.
தண்ணீர்ப் பாத்திரம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். சமயத்தில் உள்ளே விழுந்துருவாங்க. வெளிய வரத் தெரியாது - ரொம்பவும் பயப்படுவாங்க.

தேவையானது பெட் ஷாப்ல கிடைக்கும். கும்பகோணத்தைப் பற்றித் தெரியல. இல்லாட்டா கோழிக்குஞ்சு வளர்க்கிறதுக்கு வைக்கிற தண்ணீர்ப் போத்தல் வைக்கலாம். சுத்தமான தண்ணீர் எப்பவும் இருக்கணும். எப்பவாவது ஒரு முறை தண்ணில வைட்டமின் B போட்டுவிடுவோம்.

உணவு... நாங்க தினை கொடுப்போம். அதுக்கும் கோழித்தீன் பாத்திரம் போல இருந்தால் அதிகம் வீணாகாது. கீரை... இந்தியால என்ன பேர் சொல்வீங்க என்று தெரியல... சீமைப்பொன்னாங்காணி (இது கார்டின்ல பார்டருக்கு வச்சு இருந்தோம்.) & பசளிக்கீரை நல்லா சாப்பிடுவாங்க. புளிப்பசளி - இது சாதாரணமா தரைல படர்ந்து இருக்கும். அதுவும் கொடுப்போம். ஒரு கணவா ஓடு போட்டு வைப்போம், சாப்பிடுவாங்க.

கூட்டில எறும்பு ஏறாமப் பார்த்துக்கங்க, தினைக்கு வரலாம்.

கூட்டின் உள்ளே தேங்காய் மட்டை அல்லது வட்டமான துளையோட ஒரு சின்ன மண்பானை வைச்சா உள்ளே போய்த் தூங்குவாங்க. முட்டை போடுறதுக்கு இது சரியா இருக்கும்.

இப்போ எதை எழுதினா உங்களுக்குப் பிரயோசனமாக இருக்கும் என்று தெரியல. நான் சும்மா எய்ம்லெஸ் ஆக பாரதம் எழுதி வைக்கப் போறேன். ;) வளர்க்க ஆரம்பிங்க. இடைல என்ன சந்தேகம் என்றாலும் வந்து கேளுங்க. அது அப்பப்ப நிறைய வரும். ;)

இங்க லவ் பேர்ட்ஸ் வளர்த்த ஆட்கள், இப்ப வளர்க்கிற ஆட்கள் சிலர் இருக்காங்க... ;) இப்ப பிஸியா இருக்கிறாங்க மாதிரி இருக்கு.

நான் சொல்லிப் பார்க்கிறேன். ஃப்ரீயா இருந்தா கட்டாயம் வருவாங்க. இல்லாட்டா முடிஞ்ச வரைக்கும் நான் ஹெல்ப் பண்றேன். என்ன, என் ஐடியால்லாம் புராதன காலத்ததா இருக்கும். ;)

‍- இமா க்றிஸ்

எல்லா பறவைகளுமே சுதந்திரமாக வானத்தில் பறக்கும் போது அதன் அழகே தனிதான். கூண்டில் அடைத்து வளர்ப்பதை மறு பரிசீலனை செய்யுங்களேன்

அன்புடன்
THAVAM

;) நான் தவமணியை உதவிக்குக் கூப்பிடலாமா என்று நினைக்க... ஏற்கனவே இங்க வந்து பதிவு போட்டாச்சா!!

உண்மைதான், எனக்கும் இதே கருத்து இருக்கிறது.

ஆனால்... கூண்டிலேயே பிறந்து வளர்ந்தவற்றுக்கு வெளி உலகம் புரிவதில்லை. தற்காப்பு தெரிவதில்லை. அவற்றுக்குக் கூண்டைப் போல் பாதுகாப்பு வெளியே கிடைப்பதில்லையே. நாம்தான் உதவ வேண்டி இருக்கிறது. திறந்து விட்டால் ஒருநாள் கூடத் தாங்க மாட்டார்கள். வெளியே விடுமுன்... அதற்கெனப் பழக்க வேண்டும்.

ஒரு உறவினரிடமிருந்து எங்களிடம் வந்த கிளி ஜூலியை கொய்யா மரத்தில் வந்து அமர்ந்த கிளிகளோடு சேர்ந்து பறந்து விடுவார் என்று நினைத்து விடுவிக்க... ;) கீச்சிடல் தெரியாமல் பயந்து திரும்ப வீட்டிற்குள் ஓடி வந்துவிட்டார். ;) பிறகு பதினாறு வருடங்களுக்கு மேல் சந்தோஷமாக எங்களோடு இருந்தார்.

கூட்டை விட்டு வெளியே பறந்த லவ் பேர்ட்ஸ் அரை மணி நேரத்துக்குள்ளாக எங்கள் கண் முன்னே நாய்க்கும் காக்கைகளுக்கும் இரையானதையும் பார்த்து இருக்கிறேன். ;(

அந்தப் பறவைகள் எத்தனை சந்ததிகளாக கூண்டிலே இனம்பெருக்கிற்றோ. இதுதான் அவற்றின் இயல்புநிலை என்று ஆனதன் பின் வெளியே விடுவது.....என்ன சொல்லவென்று தெரியவில்லை.

நாம் வளர்க்க வேண்டாம் என்று நினைத்து விட்டாலும் நிச்சயம் அவற்றை வேறு யாராவது வளர்ப்பார்கள். நன்கு பராமரிக்கக் கூடிய ஒருவர் கைகளுக்குப் போய்ச் சேர்வது நல்லது.

‍- இமா க்றிஸ்

hi.. imma madam.
how are you? first of all i have to tell THANK YOU for your reply about love birds, it is very nice and interesting to me,

இயற்கையாய் வளர்ந்த உயிரினங்களை தமது சொந்த விருப்பங்களுக்காக கட்டுப் பாட்டில் கொண்டு வந்தது மனித இனம். நாளடைவில் மனிதனின் உதவியின்றி வாழமுடியாத நிலைக்கு பழகிவிட்டன அவைகள். பாரதி கூட மீன் தொட்டியில் மீன் வளர்க்கலாம் என்று ஆசைப்பட்டாள். நான் எடுத்து சொன்ன பின் புரிந்து கொண்டு வேண்டாம் என்று கூறியுள்ளாள்.

அன்புடன்
THAVAM

இமா அவர்களுக்கு என் மனபூர்வமான நன்றிகள்

என் உயிரினிம் மேலான தமிழ் சொந்தங்ககளே..........உஙகளுக்கு உளுந்து அப்பளம் தயாரிக்க தெரியுமா........மொத்தமா செய்து விற்பனை செய்ய நீங்கள் விரும்புகிறீர்களா....நாங்கள் வாங்கி கொள்கிறோம்.....தொடர்பு கொள்ள ..... dennisond027@gmail.com

பத்தாவது முறை விழுந்தவனுக்கு பூமி முத்தமிட்டு சொன்னது....ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா நீ என்று.......

நான் வீட்டில் இரண்டு @ஜாடி லவ் @பட்ஸ் வளர்க்கி@றன். அதனை பாதுகாக்கும் வகையில் இரவில் உள் வீட்டிலும் (பூனைக்கு பயந்து) பகலில் முதல் அறையிலும் வைக்கி@றன். ஆனால் எனது நண்பர்கள் இப்படி தினமும் இடம் மாற்றி வைத்தால் முட்டையிடாது என்கிறார்கள் உண்மையா ? விளக்கம் அளிக்கவும்.
Imma

ஆமாம்... ஒரே இடத்தில் வைப்பதுதான் நல்லது. மனிதரைப் போல்தானே அவையும். எதற்கும் மனது குழப்பமில்லாமல் நல்ல நிலையில் இருக்க வேண்டும் இல்லையா! ;) பூனை வராமல் வேறு ஏதாவது செய்ய இயலாதா!

//பகலில் முதல் அறை// டீவீ, பாட்டுன்னு சப்தமா இருந்தா பாவம் அவங்க. பகல்லதான் அவங்களுக்கு ப்ரைவசி வேணும். இரவுல தூங்கிருவாங்க. ஷோகேஸ் பொம்மை மாதிரி ஆக்கிட்டம்னா இனம் பெருகவேணும்னு எதிர்பார்க்க முடியாது.

ஏற்கனவே முட்டை இட்டு இருந்தால்... கூட்டை அசைக்க அசைக்க முட்டை கெட்டுப் போகும் வாய்ப்பு இருக்கிறது. பெரிய பறைவகளே கூட இடமாற்றம் சலித்துப் போய் தூக்கி எறிந்துவிடும், பத்திரம்.

பி.கு
ஜோ - joo / jO
பே - bee / bE / pee / pE
றே - RE /Ree ட்ரை பண்ணிப் பாருங்க. ;)

‍- இமா க்றிஸ்

மன்னிக்கவும் மிகவும் தாமதமாக கடிதம் எழுதுகி@றன். தாங்கள் தந்த பதிலுக்கு மிகவும் நன்றி. நான் அப்படி@யா öŒ#கி@றன். நன்றி

மேலும் சில பதிவுகள்