ஓட்ஸ் குக்கீஸ்

தேதி: May 28, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

ஓட்ஸ் - ஒரு கப்
மைதா மாவு - கால் கப்
உப்பு - அரை தேக்கரண்டி
பேக்கிங் பௌடர் - 1 1/2 தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு கப்
வெண்ணெய் - அரை கப்
முட்டை - ஒன்று
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
பார்ச்மன்ட் பேப்பர் (அ) பாயில் + பேக்கிங் ஸ்ப்ரே


 

எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும். எப்பொழுதும் கேக் அல்லது குக்கி செய்யும் போது அளவு சரியாக இருத்தல் அவசியம். வெண்ணெய், முட்டை குளிர்ந்திருக்க கூடாது.
வெண்ணெயையும், சர்க்கரையும் சேர்த்து ப்ளெண்டர் கொண்டு அடிக்கவும். இந்த கலவை கொஞ்சம் கொரகொரப்பாக இருக்கும் போதே நிறுத்தி விட வேண்டும்.
வேறு ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், மைதா, உப்பு, பேக்கிங் பௌடர் எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் முட்டை மற்றும் எசன்ஸ் சேர்த்து நுரை வரும் வரை அடித்து வைக்கவும்.
இப்பொழுது இந்த முட்டையை எடுத்து ஓட்ஸ் கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த கலவையை இப்பொழுது வெண்ணெயில் சேர்த்து நன்கு கலக்கவும்.
அவனை 325 F முற்சூடு செய்யவும். பேக்கிங் ட்ரேயில் பார்ச்மன்ட் பேப்பர் வைக்கவும். இப்பொழுது ஒரு தேக்கரண்டி கலவையை எடுத்து தட்டி வைக்கவும். அதே போல் எல்லா மாவிலும் செய்து இடைவெளி விட்டு அடுக்கி ஓவனில் வைக்கவும். குக்கி வேகும் போது இலகும் அதனால் இடுக்கி இடுக்கி வைக்க கூடாது. 10-15 நிமிடம் பேக் செய்யவும்.
மாலை நேர காபியுடன் சாப்பிடக்கூடிய அருமையான ஓட்ஸ் குக்கீஸ் ரெடி.

பார்ச்மன்ட் பேப்பர் இல்லையென்றால் பாயில் போட்டு குக்கிங் ஸ்ப்ரே அடிக்கவும். எதுவுமே இல்லையென்றால் ட்ரேயில் சிறிதளவு வெண்ணெய் தேய்த்து பிறகு மைதா தூவவும். அதிகப்படியான மைதாவை கீழே தட்டி விடவும். ப்ளெண்டர் இல்லையென்றால் மிக்ஸியில் போட்டு சுத்தவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

helthy cookies, i will try it very soon, goodv work keep it up dear........

ஹாய் லாவன்யா....ரொம்ப சிம்ப்பிள், டேஸ்ட்டான ரெசிபியா சொல்லியிருக்கீங்க...... பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு... சூப்பெர் ஆ இருக்கு... கண்டிப்பா சீக்கிரம் ட்ரை செய்து பார்த்துவிட்டு சொல்றேன்...

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

எனக்கு ஓவன் எப்படி பயன்படுதுரதுனே தெரியாது ஆனா எல்லா குறிப்பையும் நோட் பண்ணி வைக்றேன் சீக்கிரமே கத்துகிட்டு பண்ணிட்வேன்ற நம்பிக்கைல ஓட்ஸ் பிஸ்கட் எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பரா செய்து காட்டி இருக்கீங்க வாழ்த்துக்கள் லாவண்யா sister

சூப்பர் லாவி. நானும் செய்து படம் எடுத்து வைத்திருக்கிறேன்.
சிறிய வித்தியாசம் தான்.. வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

லாவண்யா ஓட்ஸ் குக்கீஸ் நல்லா செஞ்சு இருக்கீங்க. குக்கீஸ்க்கு ஜோடி டீ வேற இரண்டுத்தையும் எடுத்துக்கலாம் போல இருக்கு.

லாவண்யா,

எனக்கு கூட baking ஆசை வந்துட்டது..கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கிறேன்

வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பு லாவண்யா,

ஓட்ஸில் செய்து பார்க்க இன்னுமொரு நல்ல குறிப்பு.

வாழ்த்துக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

Farsa
உங்களின் அன்பான பின்னூட்டதிற்கு மிக்க நன்றி. கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

ஆனந்தப்ரியா
நான் பதில் போதும் இந்த சமயத்தில் நீங்களே செய்து சாப்பிட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் பன்ரூட்டியிலா இருக்கீங்கன்னு சொல்லுங்க....பார்சல் அனுப்பிடலாம்....

இளையா
உங்களுக்கெல்லாம் ஓவன் ஒரு பெரிய விஷயமாகவே இருக்காது. அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை....சீக்கிரமே கத்துகிட்டு பல ரெசிபி எங்களுக்கு கொடுங்கள்.

ரம்மி
இது பேர் தான் "லைக் பீபுள் தின்க் அலைக்" நு சொன்னாலோ.....அனுபிட்டீங்களா...சரி வரட்டும் என்ன வித்தியாசம் என்று அதையும் செய்து சுவைத்திட வேண்டியது தான்.

வினோஜா
உங்களுக்கு இல்லாததா.....இது இன்னாங்க வீட்டுக்கு வாங்க உங்களுக்கு ஒரு விருந்தே வைத்திடலாம்.

உமா
பேகிங் ஆசை வந்துவிட்டதா.....அப்போ நிறைய பேகிங் குறிப்புகளை எதிர்ப்பார்க்கலாம் :)

சீதாலக்ஷ்மி
கண்டிப்பாக ஊருக்கு போவதற்குள் செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க....சரியா

நன்றி
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அருமையான சுவையான ஆரோக்கியமான குறிப்பு. பார்க்கவே அழகா இருக்கு. வாழ்த்துக்கள். மாலே போனா தான் செய்ய முடியும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லாவண்யா,
ஓட்ஸ் குக்கீஸ் சுவையா இருக்கும் போல இருக்கே...அதுவும்,காபியுடன் ப்ரெசன்ட் பண்ணி இருப்பது அருமை.வாழ்த்துக்கள்.

வனி, மாலே போனதும் கண்டிப்பாக செய்துப் பாருங்கள். நன்றி.

வாழ்த்துக்களுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அன்பரசி.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அன்பரசி

வாழ்த்துக்களுக்கு நன்றி. நீங்களும் ட்ரை பண்ணி பார்த்துட்டு எப்படியிருந்ததுன்னு சொல்லுங்க.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

hai,
i'm so sorry...i tried your recipe but its flop ...
i don't know i cook your same method but its become watery..
and its came out like watery spread...
can you help me?

நீங்கள் வெண்ணையையும் சர்க்கரையும் சேர்த்து அடிக்கும் போது நன்றாக அடிக்க வேண்டும். சர்க்கரையில் ஈரப்பதம் இல்லாமல் இருக்க வேண்டும். நீங்கள் பௌடர்ட் சுகரில் ட்ரை பண்ணி பாருங்க. அதை சேர்க்கும் போது குறைவாகவே சேர்க்க வேண்டும். நீங்க ஸ்டேப் பை ஸ்டெப்பாக செய்யும் போது எந்த ஸ்டேப்பில் நீர்த்து விட்டு என்று சொல்லுங்கள் நான் என்னாவாக இருக்கும் என்று சொல்கிறேன்....தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா ஓட்ஸ் குக்கீஸ் நல்லா வந்ததுப்பா,கொஞ்சம் தளர்ந்து வந்தது. 2 ,3 ஒட்டி வந்தது.மீதியெல்லாம் நல்லா வந்துச்சு.கிறிஸ்பி குக்கீஸ்.

Kalai