க்ரிஸ்பி மணிபேக்

தேதி: May 28, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (5 votes)

 

உள் வைக்க கலவை செய்ய:
சிக்கன் எலும்பில்லாதது - ஒரு பெரிய துண்டு
வெங்காயம் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒன்று
மல்லி தழை - சிறிது
மஞ்சள் பொடி - சிறிது
மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையானளவு
மாவு செய்ய:
மைதா - ஒரு கப்
டால்டா - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையானளவு
வெங்காயதாள் - ஒன்று (மணி பேக்கை கட்ட)


 

முதலில் மாவு செய்ய தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி உப்பு சேர்த்து கலந்து விட்டு டால்டா சேர்த்து பிசையவும். பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசையவும்.
மாவு கொஞ்சம் தளர்வாக இருக்க வேண்டும். பிசைந்து மூடி வைக்கவும்.
வெங்காயத்தை நறுக்கி வைக்கவும். சிக்கனை பொடியாக நறுக்கி வைக்கவும். கொத்தமல்லியையும் பொடிதாக நறுக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை போட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும்.
பின்னர் சிக்கனை போட்டு கொத்தமல்லி தூவி வதக்கவும். சிறிது சிக்கன் வதங்கியதும் உப்பு சேர்த்து கரம் மசாலா சேர்த்து தண்ணீர் கால் டம்ளர் விட்டு வேக விடவும்.
சிக்கன் வெந்ததும் தண்ணீர் வற்றி நன்கு திக்காக இதுபோல் இருக்கும். உள் வைக்க கலவை ரெடி..
பிசைந்து வைத்த மாவிலிருந்து சிறு எலுமிச்சை அளவு மாவு எடுத்து உருட்டி வட்டமாக தட்டி அதில் சிக்கனை வைக்கவும்.
குழந்தைகளுக்கென்றால் வட்டமாக தட்டிய மாவில் சீஸும் வைக்கலாம்.
கலவையை வைத்து மாவு வட்டத்தின் ஓரங்களை பேக் சேப்பிற்கு கைகளினால் சுருக்கவும். பின் அதை வெங்காய தாள் கொண்டு கட்டவும். எல்லாவற்றையும் இதுப் போல் தயார் செய்யவும்.
அதை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மணிபேக் ரெடி
மாலை நேர க்ரிஸ்பி ஸ்நாக்ஸ் தயார். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்த்தாலே தெரியுது சுவை எப்படி இருக்கும்னு அப்படியே எனக்கு பார்சல் போட்டு விடுங்க ப்ளீஸ் எனக்கு இந்த அளவுக்கு பண்ண தெரியாது ந இப்போ தான் ஆரம்ப நிலைல இருக்கேன் செய்து இருகிரத பார்க்கவே அவளோ ஆசையா இருக்கு sister. சூப்பர் வாழ்த்துக்கள்
by Elaya.G

ஹாய் அம்மு... நீங்க செய்திருக்கும் பேக்கிங் டிசைன் பார்க்கவே சின்ன சின்ன தஞ்சாவூர் பொம்மை மாதிரி ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு... சுவையை பற்றி சொல்லவே வேணாம்னு நினைக்கிறேன். ஏன்னா படத்திலிருக்கும் சிக்கனும், மசாலாவும் கிரேவியா அப்படியே நாக்குல ஜொள்ள உண்டு பண்ணுது... இதையே நான் முக்கோண வடிவ சமோசாவா ட்ரை பண்ணியிருக்கேன்... உங்க டிசைனை ட்ரை செய்து பார்க்கிறேன்...

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ருக்சானா நல்ல ஐடியாவா இருக்கு. இதுமாதிரி வித்தியாசமா செய்து கொடுத்தா குட்டீஸும் விரும்பி சாப்பிடுவாங்க. நல்ல குறிப்பு.

ருக்சானா வித்தியாசமான குறிப்பு வாழ்த்துக்கள்

சூப்பர். எப்படி உங்களுக்கு மட்டும் இப்படி சமையலில் ஐடியாவா வருது.. கலக்குங்க. வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நீங்கள் நல்லா குழந்தைகளின் பல்ஸை புரிந்து அவர்களுக்கு பிடித்த மாதிரி வடிவத்தில் செய்திருப்பது அருமை.

வாழ்த்துக்கள்
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!