கொத்தமல்லிச் சட்னி

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கொத்தமல்லி - 2 கட்டு
தேங்காய் - 1 மூடி
பச்சைமிளகாய் - 4
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
பொட்டுக்கடலை - ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி


 

தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். துருவி எடுத்துக் கொள்வதால் அரைப்பதற்கு எளிதாக இருக்கும்.
துருவிய தேங்காயுடன் பொட்டுக்கடலை, மிளகாய், புளி, பெருங்காயம் முதலியவற்றைச் சேர்த்து மிக்ஸியிலோ அல்லது அம்மியிலோ இட்டு அரைக்கவும்.
பாதி அரைப்பட்டவுடன் அதில் காம்பு நீக்கி நறுக்கி வைத்துள்ள மல்லித்தழைகளைச் சேர்த்து நன்கு மையாக அரைத்தெடுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்துவைத்துள்ள விழுதில் கொட்டவும்.


மேலும் சில குறிப்புகள்