கத்திரிக்காய் சட்னி

தேதி: May 30, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (5 votes)

 

கத்திரிக்காய் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை
மல்லி - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 4
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
உப்பு
புளி - ஒரு எலுமிச்சை அளவு
கடுகு - 1 ஸ்பூன்
பெருகங்காய பொடி - 1/4 ஸ்பூன்
எண்ணை - 2 ஸ்பூன்


 

கத்திரிக்காயை வெட்டி வேகவைத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும். பெரிய வெங்காயத்தினை பொடியாக நறுக்கவும்
பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்
புளியை கரைத்து வைக்கவும்
வரமிளகாடய்,கடலைபருப்பு,மல்லி இவற்றை வெறும் வானலியில் வறுத்து பொடிக்கவும்

கடாயில் எண்ணை விட்டு கடுகு,கறிவேப்பிலை, பெருங்காயப்பொடி தாளித்து, வெங்காயம்,பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். பின் அரைத்த கத்திரிக்காய்,புளி தண்ணீர், மஞ்சள் பொடி,உப்பு, அரைத்த பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும்

இட்லி, தோசைக்கான கத்திரிக்காய் சட்னி ரெடி


மேலும் சில குறிப்புகள்


Comments

மஞ்சுளா மேடம்,

சுவையான,வித்தியாசமான குறிப்பு..
வாழ்த்துக்கள் !!!
கத்திரிக்காய் தோல் சேர்த்தால் கசப்பு தராதா?

என்றும் அன்புடன்,
கவிதா

நன்றி கவி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு