மொச்சைகொட்டை புளிக்குழம்பு

தேதி: May 30, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

மொச்சைகொட்டை - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
சாம்பார் பொடி - 2 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
புளி - பெரிய எலுமிச்சை அளவு
உப்பு
நல்லெண்ணை - 50 மில்லி
கடுகு - 1/2 ஸ்பூன்
வெந்தியம்- 1/2 ஸ்பூன்


 

மொச்சையை 1 ஸ்பூன் எண்ணை விட்டு வறுக்கவும். வாசனை வந்ததும் குக்கரில் போட்டு 3 விசில் விடவும்
கடாயில் எண்ணை விட்டு கடுகு,வெந்தயம், நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு தாளித்து சாம்பார் பொடி,மஞ்சள் பொடி,உப்பு கரைத்த புளி சேர்த்து கொதிக்க வைக்கவும்
பச்சை வாசனை போனதும் வேக வைத்த மொச்சைகொட்டையை சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். மீதியுள்ள நல்லெண்ணை, சிறு துண்டு வெல்லம் சேர்த்து இறக்கவும்

கம்பு சாதத்திற்க்கான சுவையான காம்பினேஷன் ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

மஞ்சுளா மேடம்,

சுவையான குறிப்பு..மொச்சையை தான் தேடி பிடிக்கணும்

வாழ்த்துக்கள் !!!

என்றும் அன்புடன்,
கவிதா

நன்றி கவி
மொச்சை எல்லா டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ்லெயும் கிடைக்கும்பா

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு