வெள்ளை பணியாரம்

தேதி: May 31, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (8 votes)

 

ப.அரிசி - 1 கப் (தலை தட்டி)
உ.பருப்பு - அரிசியின் மேல் கோபுரம் போல் குவித்து எடுக்கவும்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

ப.அரிசி 1 கப் தலை தட்டி எடுத்துக் கொள்ளவும்.அந்த கப்பின் மேல் கோபுரம் போல் உ.பருப்பை போட்டு ஒரு பாத்திரத்தில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் சிறிது உப்பு போட்டு நல்லா நைசா அரைத்துக் கொள்ளவும்.
ரொம்ப தண்ணியாகவும் இல்லாமல் ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல் மீடியமாக இருக்க வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெயில் விட்டு காய்ந்ததும் சிறிது சிறிதாகவும் ஒரு குழி கரண்டியில் எடுத்து ஊற்றவும்.
வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
சுவையான வெள்ளை பணியாரம் தயார்.


பணியாரம் கருகிவிட கூடாது.வெள்ளையாக தான் இருக்க வேண்டும்.இது செட்டிநாட்டு ஸ்பெஷல் டிஷ்

மேலும் சில குறிப்புகள்


Comments

இனிப்பு சேர்த்தும் இதே முறையில் செய்யலாமா

vetri nichayam

மீனா எனக்கு எக்கசக்க டவுட் வருது. அரிசியை தலை தட்டி எடுத்துக் கொண்டு அதிலேயே உளுந்தை கோபுரமாக குவித்து எடுத்துக்கனுமா? அதன் அளவு என்ன இருக்கும்? இரண்டையும் ஒன்றாக ஊற போட்டு ஒன்றாகவே அரைத்து எடுத்துக்கலாமா?

உங்களுக்கும் ரொம்ப சாரிபா நான் இப்ப தான் உங்க பதிவை பார்க்கிறேன்.// அரிசியை தலை தட்டி எடுத்துக் கொண்டு அதிலேயே உளுந்தை கோபுரமாக குவித்து எடுத்துக்கனுமா?//ஆமாம்பா அப்பிடி தான் எடுக்கணும்.அதன் அளவு அரிசி அதிகமாகவும் உளுந்து மிகவும் கொஞ்சமாகவும் இருக்கும்.அது தான் அளவு.// இரண்டையும் ஒன்றாக ஊற போட்டு ஒன்றாகவே அரைத்து எடுத்துக்கலாமா?//ஆமாம் அரைக்கலாம்.

Expectation lead to Disappointment

ஹாய் மீனா எனக்கு ஒரு சந்தேகம் வெள்ளை பணியாரம் எண்ணெயில் தான் பொரித்தெடுக்க வேண்டுமா.பணியாரக்கல்லில் செய்யலாமா?

ஹாய் சுந்தரி வெள்ளை பணியாரம் எண்ணெயில் தான் பொரித்தெடுக்க வேண்டும்.

Expectation lead to Disappointment

ரொம்ப சாரிபா உங்க பதிவை இப்ப தான் பார்க்கிறேன்.இனிப்பு பணியாரத்தில் உளுந்து வேண்டாம்.அரிசியை நல்லா கழுவி ஒரு வேஷ்டி துணியில் காய வைத்து அதன் ஈரம் இருக்கும்போதே மிக்ஸியில் அரைத்து சலித்து கொண்டு வெல்லம் அல்லது கருப்பட்டி பாகு காய்ச்சி ஊற்றி கிளறி பணியாரம் செய்யலாம்.

Expectation lead to Disappointment

Very easy, simple and super. dont we need paniyara stand for this??

theedum nandrum pirarthara vaara