உளுந்து சீரகப்பொடி

தேதி: June 1, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

சீரகம் - 4 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம் பருப்பு - 8 தேக்கரண்டி
மண்டை வெல்லத்தூள் - 4 தேக்கரண்டி
பனங்கற்கண்டு - 8 தேக்கரண்டி
நெய் - தேவையான அளவு


 

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் சீரகத்தைப் போட்டு வறுக்கவும். சீரகத்தைத் தனியாக வைக்கவும்.
அதே வாணலியில் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும்.
பொரித்த சீரகத்தையும் வறுத்த உளுத்தம் பருப்பையும் (சிறிது சூடு ஆறிய பின்) மிக்ஸியில் ஒன்றாகப் போட்டு நன்றாகத் திரிக்கவும்.
இத்துடன் வெல்லத்தூள், பனங்கற்கண்டு இவற்றையும் ஒன்றாகப் போட்டு மாவாகத் திரிக்கவும்.
இந்தப் பொடி ஆறியதும் ஈரமில்லாத ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது, ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி பொடியைப் போட்டு ஒரு தேக்கரண்டி நெய்யை அதில் ஊற்றி கலந்து சாப்பிடலாம்.

இந்த மாவில் நெய்யை உருக்கி ஊற்றி உருண்டைகளாகவும் பிடித்து வைத்துக் கொள்ளலாம். இளம்தாய்மார்களுக்கு, தாய்ப்பால் நன்றாக சுரக்கவும், உடல் நலம் சீக்கிரம் தேறவும், இந்தப் பொடியை ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிடக் கொடுக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சீதாலக்ஷ்மி

நல்ல சத்துள்ள பயனுள்ள குறிப்பு. மருமகளுக்காக புது புது குறிப்பா செய்து அசத்துறீங்க போங்க....வாழ்த்துக்கள் :)

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நல்ல சத்தான குறிப்பு தந்து அசத்திடிங்க வாழ்த்துக்கள் by Elaya.G

சீதாலக்ஷ்மி அம்மா,
குறிப்பு செய்தே காட்டிட்டீங்க.சூப்பர்.விருப்ப பட்டியலில் சேர்த்துட்டேன்.ஒரு சந்தேகம்.பனங்கற்கண்டு ஏன் சேர்க்கிறோம்?பனங்கற்கண்டு இல்லாமல் இந்த பொடியை செய்யலாமா?

நல்ல குறிப்பு.. மருத்துவ குணமுள்ள ஆரோக்கியமான குறிப்பு கொடுத்து இருக்கிங்க
வாழ்த்துக்கள். கண்டிப்பாக செய்து வைத்து கொள்கிறேன்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் சீதாலக்ஷ்மி எல்லோருக்கும் தேவையான குறிப்பு கொடுத்து இருக்கீங்க..வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சீதா அம்மா,

எனக்கு ரொம்ப உதவியான குறிப்பு
கண்டிப்பாக திரித்து வைக்கிறேன்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிகவும் நன்றி.

அன்பு லாவண்யா,

மருமகளுக்காக செய்ததுதான். தெரிந்தவங்க ஃபோனில் சொல்லி, செய்தோம். நன்றாக இருக்கு.

அன்பு இளையா,

உளுந்து, சீரகம் இரண்டுமே சத்தானது ஆச்சே.

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

அன்பு ஹர்ஷா,

கண்டிப்பாக செய்து பாருங்க. பனங்கற்கண்டு குளிர்ச்சி என்பதால்தான் சேர்க்கிறோம். அது கிடைக்கலைன்னா, வெல்லம் கூட சேத்துக்கலாம். உங்களுக்குத் தேவையான இனிப்பு அளவுக்கு சேருங்க.

அன்பு ரம்யா,

அவசியம் செய்து பாருங்க. சீரக வாசனை ரொம்பத் தெரியலை. மா லாடு மாதிரிதான் டேஸ்ட் இருக்கு.

அன்பு குமாரி,

ஸ்வீட் வகையாகவே செய்துக்கலாம் இதை.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

அன்பு கவிதா,

அவசியம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் கொடுத்திருக்கும் அளவுப்படி செய்தீங்கன்னாலே, 2-3 நாளைக்கு வரும். நெய் டேஸ்ட் பிடிக்கும் என்றால், அதிகமாகவே சேர்த்துக்கலாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாம்மா நல்ல பயனுள்ள குறிப்பு. என் தோழிகள் மூன்று பேர் புது வரவுக்காக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும். அவர்களிடம் இந்த குறிப்பை பற்றி கூறியுள்ளேன்.

அன்பு வினோஜா,

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

அவசியம் செய்து வைத்துக் கொள்ள சொல்லுங்க. உடல் நலத்துக்கு மிகவும் நல்லது இந்தப் பொடி.

அன்புடன்

சீதாலஷ்மி

பயனுள்ள குறிப்பு கொடுத்திருக்கீங்க... எப்படியோ இது என் கண்ணில் படாம டிமிக்கி கொடுத்திருக்கு... கண்டுவிட்டேன் இன்று :) பயன்படும்... வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா