ஸ்பெஷல் சிக்கன் வறுவல்

தேதி: June 1, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

சிக்கன் - 1 கிலோ
எண்ணை - 5 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 8
இஞ்சி&பூண்டு விழுது - 2 ஸ்பூன்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
ஜீரகத் தூள் - 1/4 ஸ்பூன்
சோம்பு தூள் - 1/4 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
கறுவேப்பிலை - 10 இலைகள்


 

முதலில் சிக்கனை கழுகி தண்ணீர் போக வடித்து வைக்கவும்
எண்ணை காயவைத்து சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொந்நிறமாக வதக்கவும்
பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை அடங்கும் வரை வதக்கவும்
பின்பு தக்காளி தொடங்கி கரம் மசாலா தூள்கள் வரை அனைத்தையும் சேர்த்து சிக்கனும் தேவைக்கு உப்பும் சேர்த்து கிளறி இளம் தீயில் 15 நிமிடம் மூடி வைக்கவும்
பின்பு தீயை மிதமாக வைத்து 30 நிமிடம் வேக வைத்து வற்ற விட்டு கறுவேப்பிலை சேர்த்து இறக்கவும்
சுவையான சிக்கன் வறுவல் தயார்


இதில் சின்ன வெங்காயமும் பச்சை மிளகாயும் சேர்ப்பதால் கிடைக்கும் சுவை அலாதியாக இருக்கும்.தந்துள்ள அனைத்து பொடிகளையும் தவறாமல் போடவும்..எண்ணை குறைவாக பயன்படுத்தலாம்.சிறிது குழம்பாக வேண்டும் என்பவர்கள் பெரிய வெங்காயம் இரண்டு சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்