புளிக்குழம்பு

தேதி: June 6, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புளி - எலுமிச்சை அளவு
துருவிய தேங்காய் - முக்கால் கப்
சீரகம் - அரைத் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
தனியாத் தூள் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
உப்பு - தேவையான அளவு


 

ஒரு கடாயில் நல்லெண்ணெய் சிறிது ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, பூண்டைப் போட்டு வதக்கவும்.
பிறகு அதில் புளியைக் கரைத்து ஊற்றி மிளகாய்ப் பொடி, தனியாத் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன் தேங்காய் மற்றும் சீரகத்தை அரைத்து அதில் விடவும்.
குழம்பு நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்