மொச்சை புளிக்குழம்பு | arusuvai


மொச்சை புளிக்குழம்பு

வழங்கியவர் : hameed fathima
தேதி : வெள்ளி, 03/06/2011 - 12:21
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
2.5
6 votes
Your rating: None

 

 • பச்சைமொச்சை - 300 கிராம்
 • மிளகாய் தூள் - ஒரு தேக்கராண்டி
 • தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி
 • சீரகத்தூள் - 1 1/2 தேக்கரண்டி
 • புளி - எலுமிச்சைஅளவு
 • மல்லி தழை - சிறிது
 • உப்பு - தேவைக்கு
 • அரைக்க:
 • தேங்காய் துண்டு - 2 (சிறியது)
 • வெங்காயம் - ஒன்று
 • தக்காளி - ஒன்று
 • பூண்டு - 5&7 பல்
 • தாளிக்க:
 • கடுகு - அரை தேக்கரண்டி
 • வெந்தயம் - கால் தேக்கரண்டி
 • மிளகு - அரை தேக்கரண்டி
 • வெங்காயம் - சிறிது
 • பச்சை மிளகாய் - ஒன்று
 • கறிவேப்பிலை - சிறிது
 • நல்லெண்ணெய் - அரை குழிக்கரண்டி

 

மொச்சையை கழுவி வைக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.

அரைக்க கொடுத்தவைகளை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவைகளைப் போட்டு தாளித்து அத்துடன் மிளகாய் தூள் மற்றும் அரைத்த விழுதை போட்டு நன்றாக வதக்கவும்

வதங்கியதும் மொச்சையை போட்டு வதக்கவும்.

புளியை கரைத்து அதில் தனியாதூள், சீரகத்தூள், உப்பு போட்டு கலந்துக் கொள்ளவும்.

அதை வதக்கிய மொச்சையில் ஊற்றி குக்கரில், 5 நிமிடத்துக்கு வேகவிடவும். வெந்ததும் மல்லி தழை தூவி பரிமாறவும்.
இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..ஹமீத் பாத்திமா

எனக்கு மொச்சைக்காய் ரொம்ப பிடிக்கும் அருமையான டிஷ் வாழ்த்துக்கள் ஹமீத் பாத்திமா

ஃபாத்தி

சூப்பரான மொச்சை குழம்பு. இங்கே கிடைத்தால் செய்து பார்க்கிறேன்
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மொச்சை புளிக்குழம்பு

சீராக தூள் சேர்த்து மொச்சை குழம்பு வித்தியாசமா இருக்கு. காய்ந்த மொச்சையில் செய்தால் இதே சுவை வருமா? எங்களுக்கு இங்கே பச்சை மொச்சை எப்போவாது தான் கிடைக்கும்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பாத்திமா

வழக்கம் போல உங்க ஸ்டைலில் ஒரு வித்தியாசமான குறிப்பு!!! கலக்கல்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாத்திமா அம்மா,

பாத்திமா அம்மா,

மொச்சை புளி குழம்பு ஆளை தூக்குது போங்க..

தேடி சீக்கிரம் பிடிக்கிறேன்

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

மொச்சை புளிக்குழம்பு

அன்பு ஃபாத்திமா,

மொச்சை எல்லோருக்குமே ரொம்பப் பிடிக்கும். புளிக்குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். அவசியம் செய்து பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

நன்றி

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

தேவி

தேவி முதல் ஆளாய் வந்து வாழ்த்தியதற்க்கு நன்றி வருகைக்கு மிக்க நன்றி

ரம்யா

ரம்யா கிடைத்தவுடன் செய்துபாருங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

லாவண்யா

காய்ந்த மொச்சையில் இந்த ருசி கிடைக்காது இது சீசனுக்குகிடைப்பது கிடைத்தவுடன் செய்துபாருங்கள் வருகைக்கு நன்றி