கிரிஸ்பி சிக்கன் ப்ரை

தேதி: June 3, 2011

பரிமாறும் அளவு: 6 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

சிக்கன் - 1 1/2 கிலோ
இஞ்சி,பூண்டு - 1 1/2 மேசைகரண்டி
எழுமிச்சை பழம் - 2
மசாலாதூள் - 1 மேசைக்கரண்டி
மிளகு தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கேசரி கலர் - தேவைக்கு
தந்தூரி மசாலா பவுடர் - 1 மேசைக்கரண்டி
கடலை மாவு - 1 மேசைக்கரண்டி
அரிசி மாவு - 1 1/2 மேசைக்கரண்டி
கார்ன் மாவு - 3 மற்றும் 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
கருவேப்பிலை - மேலே தூவ


 

முதலில் கறியை சுத்தம் செய்து அதில் எழுமிச்சை சாறு ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்கவும் பின் அனைத்து பொருளையும் சேர்த்து நன்கு பிரட்டி வைக்கவும்.

3 மணி நேரம் ஊறவிடவும். பொரிக்கும் சமயம் மீதி உள்ள 1 மேசைக்கரண்டி கார்ன் மாவை சேர்த்து நன்கு பிரட்டி பொரித்து எடுக்கவும்.

எண்ணெயில் கருவேப்பிலை போட்டு பொரித்து மேலே தூவி பரிமாறவும்.

சுவையான கிரிஸ்பி சிக்கன் ப்ரை தயார்.


இந்த கிரிஸ்பி சிக்கன் ப்ரை நான் எல்லா முறையில் ட்ரை செய்துட்டு இந்த முறையில் செய்து பார்த்தேன் இதன் சுவை ரெம்பவும் நன்றாக இருந்தது.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கும் மிகவும் பிடித்து விட்டது.

மேலும் சில குறிப்புகள்


Comments

பசங்கலுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் குறிப்பு.இதில் cornflour 3 மற்றும் 1 tablespoon என்று பொட்டு இருக்கிர்கல்
அப்படிஎன்றால் 4 tablespoon ah புரியவில்லை மற்றவர்கலுகும் உதவியாக இருக்கும் சொல்லுகள்.

அன்புள்ள கதீஜா..மசாலா தூள் என்றால் எது?மிளகாய் தூள்தானே?

நலமா பேசி நாள் ஆகுது. மசாலாதூள் என்றால் மிளகாய் தூள் தாங்க.

அன்புடன் கதீஜா.

மீதி உள்ள 1 மேசைக்கரண்டி கார்ன் மாவை பொரிக்கும் சமயம் சிக்கனில் போட்டு நன்கு பிரட்டி அதன் பின் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

வேறு எதுவும் சந்தேகம்னா கேளுங்க பதில் தர தாமதமானதற்க்கு மன்னிக்கவும். எனக்கு ஒரு குட்டி பொண்ணு இருக்கா அவள் கூடவே எனக்கு நேரம் சரியா இருக்கு அதனால அறுசுவைக்கு வரவே நேரம் இல்லைமா.

அன்புடன் கதீஜா.