கடாய் மஷ்ரூம் சமையல் குறிப்பு - படங்களுடன் - 19237 | அறுசுவை


கடாய் மஷ்ரூம்

வழங்கியவர் : Vr Scorp
தேதி : Sat, 04/06/2011 - 13:20
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
5
3 votes
Your rating: None

 

 • மஷ்ரூம் - ஒரு பாக்கெட்
 • குடை மிளகாய் - ஒன்று
 • பூண்டு - ஒரு தேக்கரண்டி(பொடியாக நறுக்கியது)
 • இஞ்சி - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
 • கொத்தமல்லி - 2 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
 • சில்லி ப்ளேக்ஸ் - அரை தேக்கரண்டி
 • தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
 • தக்காளி - 4
 • பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
 • கசூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி
 • கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
 • உப்பு - தேவையான அளவு
 • எண்ணெய் - 3 தேக்கரண்டி

 

தக்காளி, மஷ்ரூம், குடைமிளகாயை படத்தில் உள்ளது போல் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு மஷ்ரூம் மற்றும் குடை மிளகாயை வதக்கி வேக விடவும். பத்து நிமிடம் கழித்து இறக்கி தனியே கொட்டி வைக்கவும்.

மீதமுள்ள எண்ணெயை சூடு செய்து அதில் பூண்டு சேர்த்து பொன்னிறமானதும் கொத்தமல்லி மற்றும் சில்லி ப்ளேக்ஸ் சேர்க்கவும்.

சிறிது வதங்கியதும் அதனுடன் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.

பிறகு தக்காளி, தனியா தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பத்து நிமிடம் வதக்கவும்.

தக்காளி நன்கு குழைந்ததும் வேக வைத்துள்ள மஷ்ரூம் மற்றும் உப்பு சேர்க்கவும். வேக வைத்த தண்ணீருடன் சேர்க்கவும்.

கிரேவி கொஞ்சம் கெட்டியானதும் கசூரி மேத்தி சேர்க்கவும்.

இரண்டு அல்லது மூன்று நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான கடாய் மஷ்ரூம் ரெடி. சப்பாத்தி, பரோட்டா, புலாவ் எது கூடவும் பொருந்தும்.

எப்பொழுதுமே மஷ்ரூமை கழுவியவுடன் சமைத்தால் அதிகப்படியான தண்ணீர் விடும். அதனால் மஷ்ரூமை கழுவி ஒரு துணியில் காய வைக்க வேண்டும், அல்லது ஒரு ஈர துணியை கொண்டு மஷ்ரூமை அழுந்த துடைத்தால் அழுக்கு எல்லாம் வந்து விடும் அப்படியே நறுக்கி கொள்ளலாம். துணியை மட்டும் அடிக்கடி கழுவி பிழிந்துக் கொள்ளவும். எப்பொழுதுமே கசூரி மேத்தியை கடைசியாக தான் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் அது கிரேவியை கருப்பாக்கி விடும்.ரொம்ப அழகான குறிப்பா செய்து

ரொம்ப அழகான குறிப்பா செய்து காட்டி இருக்கீங்க சுபெர்ப் .கசூரி மேத்தி என்றால் என்ன sister? by elaya.G

vrscorp

very easy and nice recipe.keep it up.i will try your recipe regards.g.gomathi.

லாவண்யா

லாவண்யா படங்கள் தெளிவாக உள்ளது.பார்க்கும் போதே எடுத்து சாப்பிடணும் போல இருக்குது.இதே போல் பன்னீர்ல செய்யலாமா.வாழ்த்துக்கள் லாவண்யா.

Expectation lead to Disappointment

லாவண்யா

ரொம்ப ரொம்ப சுவையான குறிப்பு. அடுத்த முறை இதை ட்ரை பண்ணிட்டு வரேன்... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லாவண்யா,

லாவண்யா,

மஷ்ரூம் கிராவி நல்லா இருக்கு கூடவே டிப்சும்..

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கடாய் மஷ்ரூம்

அன்பு லாவண்யா,

குறிப்பு நல்லா இருக்கு. மஷ்ரூம் இந்த வாரம் வாங்கிட்டு வந்திருக்கோம். இந்த முறையில் செய்து பார்க்கிறோம்.

அன்புடன்

சீதாலஷ்மி

கசூரி மேத்தி என்றால் என்ன

கசூரி மேத்தி என்றால் என்ன மேடம் ?

கடாய் மஷ்ரூம்

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

இளையா உங்களின் அன்பான வாழ்த்திற்கு நன்றி. கசூரி மீதி என்றால் உலர்ந்த வெந்திய கீரை தான்... இப்போ தெரிஞ்சிருச்சு இல்ல வீட்டில் செஞ்சு அசத்துங்க.

வாழ்த்துக்களுக்கு நன்றி கோமதி.

நன்றி மீனாள். எடுத்துகோங்க.... உங்களுக்கு இல்லாதா? இருந்தாலும் இது சூடா சாபிட்டால் தான் நன்றாக இருக்கும். அதனால் வீட்டுக்கு வாங்க உங்களுக்கு செய்து தரேன். பனீரிலும் செய்யலாம். நான் இது வரை செய்தது கிடையாது. நீங்கள் செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

வனி ஆமாம் சுவையாக இருக்கும். செய்து பார்த்து விட்டு கண்டிப்பா எப்படி இருந்ததுன்னு சொல்லணும்.

இத்தனை வேலைகளுக்கு நடுவிலும் வந்து உங்களின் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி கவிதா.

சீதாலக்ஷ்மி செய்து சாப்பிட்டு பார்த்துவிட்டு சொல்லுங்க.

சௌம்யா கசூரி மீதி என்றால் உலர்ந்த வெந்திய கீரை தான். இருந்தாலும் மேடம் எல்லாம் வேண்டாம்...ஒகே வா ;)

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

hi lavanya

இன்று கடாய் மஷ்ரும் தான் செய்தேன். நன்றாக இருந்தது. சிறிது கெட்டியான தேங்காய் பால் சேர்த்து செய்தேன். வாழ்த்துக்கள்.

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

லாவண்யா,

லாவண்யா,
முகப்பில் பார்த்ததும் உங்க ரெசிப்பிதான்னு கண்டுபிடிச்சுட்டேன்.உங்க ப்ரெசன்ட்டேஷனே தனி அழகு தான்.
கடாய் மஷ்ரூம் வித்தியாசமா இருக்கு.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.