மோர் குழம்பு

தேதி: June 6, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (10 votes)

 

தயிர் - ஒரு கப்
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
வெள்ளை பூசணிக்காய் - அரை கப்(சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்)
உப்பு - தேவையானளவு
தாளிக்க:
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு, உளுந்து - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
மிளகாய் வத்தல் - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
அரைக்க:
துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடலைப் பருப்பு - அரை தேக்கரண்டி
பச்சரிசி - அரை தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி


 

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பச்சரிசி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து தேங்காய், சீரகம் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும். (பருப்பு ஊற வைத்த தண்ணீரை கீழே ஊற்ற வேண்டாம்). பூசணிக்காயை வேக வைத்து தண்ணீரோடு எடுத்து வைத்து கொள்ளவும்.
தயிரில் பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து பீட்டரால் நன்கு அடிக்கவும்.
இதில் அரைத்த மசாலா, மஞ்சள் தூள், பருப்பு ஊற வைத்த தண்ணீர் சேர்த்து நன்கு அடிக்கவும். பிறகு வேக வைத்த பூசணிக்காய் தேவையானளவு உப்பு சேர்த்து கிளறவும்.
அடுப்பில் வைத்து கொதிக்காமல் நுரை வரும் போதே இறக்கி விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
பிறகு குழம்பில் சேர்க்கவும். சுவையான மோர் குழம்பு ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மிக சுவையான குழம்பு. எனக்கு ரொம்ப பிடிக்கும். செய்துட்டு வரேன். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு சங்கரி,

மோர் குழம்பு அடிக்கடி செய்வதுண்டு. பூசணிக்காய் போட்டு செய்திருக்கிறேன். ஆனால், வெங்காயம் வதக்கிப் போட்டதில்லை. செய்து பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

சங்கரி,

எப்படி இருக்கீங்க?பேசி நாளாச்சு..

நானும் இது போலே செய்வேன் ஆனால் வெங்காயம் முதலிலேயே சேர்த்து விடுவேன்..உங்கள் முறையிலும் செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

எனக்கு ரொம்ப பிடித்த உணவு. இதுவரை செய்தது கிடையாது. செய்து பார்த்து விடுகின்றேன். உங்கள் குறிப்பு செய்வற்கு ஈசியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். வாழ்த்துகள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நன்றி வணிதா. செய்து பார்த்து விட்டு வாருங்கள்.

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

வெங்காயம் வதக்கினால் ஒரு சுவை இருக்கும். செய்து பாருங்கள்.

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

நலம். நீங்கள் நலமா. இடைவெளி சிறிது நீண்டு விட்டது. இனி attendance இருக்கும். நன்றி கவிதா

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

எனக்கும் இது ரொம்ப பிடிக்கும். செய்து பாருங்கள் சுலபமாக தான் இருக்கும்

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

சூப்பரான மோர் குழம்பு. எங்கம்மா அடிக்கடி செய்வாங்க.
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ரம்யா. எனக்கும் ரொம்ப பிடிக்கும்

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்