சோயாபீன்ஸ் தோசை

தேதி: June 10, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

சோயாபீன்ஸ் - 2 கப்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - 1 அங்குல துண்டு
வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
பொடியாக நறுக்கிய தக்காளி - 1/4 கப்
துருவிய காரட் - 1 tbsp
துருவிய முள்ளங்கி - 1 tbsp
சீரகம் - 1 tsp
அரிசி மாவு - 2 tsp
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


 

சோயாபீன்ஸ்சை எட்டு மணி நேரம் ஊறவைத்து மிளகாய் இஞ்சிவுடன் அரைத்துவைக்கவும்.
அரைத்த மாவுடன் உப்பு, அரிசி மாவு, சீரகம், வெங்காயம், தக்காளி, காரட் மற்றும் முள்ளங்கி சேர்த்து கரைத்து உடனே தோசையாக வார்த்தெடுக்கவும்.


சோயாபீன்ஸ்சை ஊறவைத்ததோடு மட்டுமல்லாமல் முளைகட்டியபின் அரைத்தால் அதிகப்படியான வைட்டமின் இ நமக்கு கிடைக்கும்.

மேலும் சில குறிப்புகள்