கேரட் ஐஸ்கிரீம்

தேதி: June 6, 2006

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

கேரட் - 4
பால் - 1 கப்
சர்க்கரை - 1/4 கப்
மஞ்சள் பொடி அல்லது ஃபுட் கலர் - 1/2 சிட்டிகை
பிஸ்தா பருப்பு - 8
வெனிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்


 

கேரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேகவைத்து ஆறியதும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
இந்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி (அடிப்பிடிக்காமல்) நன்கு சூடுவந்ததும் அதில் பாலையும் சேர்த்து கலக்கவும்.
ஆறியதும் வெனிலா எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்து கலக்கி ஃப்ரீஸரில் வைக்கவும்.
அரைமணி நேரம் கழித்து எடுத்து மிக்ஸியில் போட்டு, ஒரு சுற்று சுற்றி அதில் ஒன்றிரண்டாகப் பொடித்த பிஸ்தா பருப்பையும் சேர்த்து கப்புகளில் ஊற்றி மீண்டும் ஃப்ரீஸரில் வைத்து ஐஸ்க்ரீம் ஆனதும் எடுத்து பரிமாறலாம்.
குழந்தைகளைக் குஷிப்படுத்தும் இந்த ஐஸ்கிரீம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வணக்கம் நித்யா
நான் கிரேஸ் ரவி குவைத்தில் இருக்கிறோம்.வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்ய முடிந்தது.சுவையானதும் கூட.மிக்க நன்றி.

விசுவாசமே உலகத்தை ஜெயிக்கும் ஜெயம்! கிரேஸ்ரவி

மிக்க நன்றி....