திருமணங்களுக்கு போடக்கூடிய சுலபமான டிசைன்

தேதி: June 10, 2011

5
Average: 4.3 (18 votes)

 

ஹென்னா கோன்

 

மணிக்கட்டில் நடுவில் வருவது போல் அரைவட்ட வளைவுகள் வரையவும். உள் வட்டத்தில் கட்டங்கள் வரைந்துக் கொள்ளவும்.
அந்த வட்டத்தை சுற்றி மீண்டும் 3 வளைவுகள் வரைந்து கொள்ளவும். அதன் மேலே இரண்டு வளைவுகள் வரைந்து உள்ளே கோடுகள் இட்டு நிரப்பவும்.
அதன் மேலே கோபுரம் போன்ற வளைவுகள் வரைந்து நிரப்பி விடவும்.
அடுத்து ஒரு சுழிகள் வரைந்து ஒரு வளைவும், சிறு சிறு முத்துக்கள் வைத்து ஒரு வளைவும் வரைந்துக் கொள்ளவும்.
இதே போல் தேவையான அளவு வித்தியாசமான வளைவுகள் வரைந்து கடைசியாக படத்திலுள்ள டிசைனை வரைந்து முடிக்கவும்.
கீழே வரைந்தது போல் மேலேயும் வளைவுகள் விரல் வரை வரைந்து விடவும்.
பின் விரல்களிலும் வளைவுகள் வருவது போலவே வரையவும்.
மருதாணி இட்டு நிரப்ப வேண்டிய இடைவெளிகளை நிரப்பி முடிக்கவும்.
இது முழுக்க முழுக்க வளைவுகள் நிறைந்த டிசைன். தேவையான அளவு பெரிதாகவோ, சிறிதாகவோ வரையலாம். இந்த டிசைன் வரைய கோனை சிறிதாக வரும்படி வெட்டினால் இன்னும் பெரிய டிசைனாக கொண்டு வரலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வனீ.... என்ன சொல்ல!! சூப்பர். எவ்வளவு அழகா போட்டிருக்கிறீங்க. அருமையா இருக்கு. பேசாம உங்க வீட்டுப் பக்கம் வீடு எடுத்து வந்துரலாமா என்று தோணுது. ;) வந்துரட்டா? ;)

‍- இமா க்றிஸ்

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//பேசாம உங்க வீட்டுப் பக்கம் வீடு எடுத்து வந்துரலாமா என்று தோணுது// - அதென்ன பக்கத்துல??? எங்க வீட்டுக்கே வந்துடுங்க... அது தான் எனக்கு சந்தோஷம் :)

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி இமா... முதல் ஆளாய் வந்து பதிவு போட்டு சந்தோஷப்படுத்திட்டீங்க. செபா ஆண்ட்டி நலமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க தாணு படத்த பார்த்தே நெனச்சேன் அக்கா எப்புடி இப்படிலாம் போட்டு அசத்துறிங்க ந இபோலம் உங்க டிசைன் ந தான் வீட்ல உள்ள சின்ன பிள்ளைகளுக்கெல்லாம் போட்டு பழகிட் இருக்கேன் ரொம்ப அழகா இருக்கு அக்கா by Elaya.G

அன்பு வனிதா,

வழக்கம் போலவே - “சிம்ப்ளி சூபர்ப்”, அசத்தலோ அசத்தல்!!

அன்புடன்

சீதாலஷ்மி

என்னத்த சொல்றது. வழக்கம் போல கலைவாணி கைகளில் கரகம் ஆடறாங்க.. இதேல்லாம் உங்களுக்கு சாதாரணமப்பா. புகழந்து புகழ்ந்து இனி என்னத்த சொல்றதுனு இருக்கு.. போங்க..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வனிதா,
டிசைன் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.எல்லா படங்களும் பளிச்,பளிச்.தெளிவா அழகா போட்டு,மெஹந்தி ஆசையை தூண்டி விட்டுட்டீங்க.(எனக்கு சுத்தமா மெஹந்தி போட தெரியாது.)

இன்னும் நிறைய டிசைன்ஸ் அனுப்பி அசத்துங்க.பாராட்டுக்கள்.

மிக்க நன்றி :) இந்த டிசைன் சின்ன பிள்லைகள் கையில் போட கோன் சின்னாதா வெட்டுங்க. இல்லன்னா டிசைன் போட இடம் இருக்காது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி :) எங்கே உங்களிடம் இருந்து மெயில் ஏதும் காணோம்??? ஊருக்கு கிளம்ப தயார் ஆகறீங்களா?? எப்படா வருவீங்கன்னு பார்த்துட்டு இருக்கேன்... பக்கத்திலேயே இருந்த யாரோ வெகு நாளா காணாம போன மாதிரி இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப நன்றி ரம்யா... ;) ஓட்டினது போதும்... உண்மையை சொல்லுங்க டிசைன் எப்படி இருக்குன்னு. இது கை வலி இருந்த நேரம் இடது கையால் வலது கையில் போட்டது... உங்ககிட்ட சொன்னனே அப்போ போட்டது. சரியா சொல்லுங்க, :( உங்களுக்கு மெயில் அனுப்பினப்போ சொன்னேன்னானு நினைவில்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அம்மாடி... வந்து என்னை ஓட்டாம பதிவு போடுறதுக்கே நன்றி சொல்லனும்... ;) [என்னை ஓட்டினதை நீங்களே சொல்லி மாட்டிக்கிட்டீங்க...]

ரொம்ப நன்றி ஹர்ஷா... குழந்தைகள் நலமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி,

மெஹந்தி டிசைன் எப்போதும்போல கலக்கிட்டிங்க! சிம்பிளி சூப்பர்! ரொம்ப அழகா இருக்கு!!

உங்களுக்கு பதிவுபோட வந்தபோது, ரம்யாக்கு உங்களோட பதில் படிச்சேன்...

//இது கை வலி இருந்த நேரம் இடது கையால் வலது கையில் போட்டது... உங்ககிட்ட சொன்னனே அப்போ போட்டது. சரியா சொல்லுங்க,... //

அப்ப, இது நீங்க இடதுக்கையால் போட்டதா?!! வாவ்... சான்ஸே இல்லை வனி, அசத்திட்டிங்க போங்க! நீங்க சொன்னதால‌தான் தெரியுது இது நீங்க இடக்கையால் போட்டதுன்னு. அவ்வளவு அழகா இருக்கு! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

மிகவும் அழகாக இருக்கிறது.

எனக்கும் போட ஆசைதான். நான் அழுத்தும்போது ஒன்றில் வருவதேயில்லை சிறிது அழுத்தம் கூட கொடுத்தால் மொத்தமாக வருகிறது. ஒரு கோடு போட முயற்சித்தால் தொடக்க இடம் தூக்கிக் கொள்கிறது. பேப்பரில் பேனாவால் படம் வரைந்தவுடன் என் பொண்ணு அம்மா அழகா வரைந்திருக்கிறீர்கள்(அவள் வயசுக்கு அது அழகு) என்று கையை நீட்டிவிட்டு பாவம் பரிதாபமாக உட்கார்ந்திருந்தாள்.

இப்ப இந்த கலையை கைசுத்து முருக்கு மாதிரி நினைத்துக் கொண்டேன். அதுவாவது ஆசைப் படும்போது வாங்கி சாப்பிடுவேன்.. இதுக்கு நம்ம பர்ஸ் ரொம்ப வீக். அதனால் உங்கள் கைவண்ணங்களை ரசிக்கிறேன். நிச்சயமாக சந்தோஷமாகவே.

மிக்க நன்றி சுஸ்ரீ. எங்கே கொஞ்ச நாளா காணோம் உங்களை?? இடது கையால் போட்டது தான் சுஸ்ரீ, கொஞ்சம் வித்தியாசம் இருக்கும், காரணம் இடது கையால் போட்டு வருஷம் ஆயிடுச்சு. அதை தான் ரம்யாவை தெரியுதான்னு கேட்டேன். வழக்கத்தை விட இந்த டிசைன் கொஞ்சம் பெரிசா வெட்டின கோன்ல போட்டது. நல்லா கவனிச்சா தெரியும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி. முயற்சி செய்து பாருங்க எல்லாம் சரியா வரும். :) உங்களுக்கு கோன் சரி இல்லன்னு நினைக்கிறேன், வீட்டில் மருதாணி பொடி வாங்கி முயற்சி செய்யுங்களேன்... சரியா வரும்னு நினைக்கிறேன். குழந்தை ஆசைப்பட்டு கேக்குறா இல்லையா.. அவளுக்காக போட ட்ரை பண்ணுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மெகந்தி மாஸ்டர் வனி எப்பவும் போல அசத்தல். ஈஸியான டிசைன் ரொம்ப அழகாக இருக்கு.

வனிக்கா என்னத்த சொல்ல வழக்கம் போல தான் அருமையா இருக்கு. இனிமேல் தமிழ் அகராதியில் இருந்து தான் உங்கள வாழ்த்த வார்த்தைகள் தேடனும்கா. இது இன்னும் ஸ்பெஷல் இடது கையால போட்டு இருக்கீங்க எந்த வித்தியாசமும் தெரியல ஒரு பிசகு கூட இல்லை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கா

சகலகலா வள்ளி அசத்தலோ அசத்தல் போங்க. ரொம்ப ரொம்ப அழகாக இருக்கு. இதோ நான் உங்கள் வீட்டிற்கு வந்துக் கொண்டிருக்கிறேன். எனக்கும் இரண்டு கைகளில் முழுவதும் மருதாணி போட்டு விடுங்கள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

உங்க கை வித்தியாசமாக இருக்கேன்னு நினைச்சேன்.வளைவுகளும் நேர்த்தியும் நீங்கள்தான் என்று உறுதியாகத் தெரிந்தன.

வசு கையோன்னு நினைச்சேன்.

அப்புறம்தான் தெரிந்தது இது உங்கள் வலக்கை என்று.

இடது கையாலேயே எப்படி இப்படி.. இங்க வலது கையாலேயே முடியல...

இருந்தாலும் எப்படி முடியாதுன்னு சொல்றது. எனவே பொடி வாங்கி அதையும் ஒரு ட்ரையல்.. பாவம் ஹெப்சி.

இப்ப லீவு. இப்பவே அவள் கையில் விளையாடிப் பாத்துட வேண்டியதுதான். நாளை மறுநாள் ரிசல்ட் சொல்கிறேன்.

ஹாய் வனி, என்ன சொல்லுரதுனெ தெரியல செமயா இருக்கு வாழ்த்துக்கள்..;) உங்களை போற்ற சிலரால் தான் இந்த அறுசுவை ரொம்ப வெற்றிகரமா போகுது. மீண்டும் வாழ்த்துக்கள் உங்களை புகழ வார்த்தைகள் இல்லை.;)

வலது கைய பார்த்தயுடனே நெனச்சேன் இது வனி போடல வேரயாரோ போட்டு விட்டு இருக்காங்கனு ஆனா எனக்கு மண்டையில கொட்டு வெச்சி இது நான் என் இடது கையால் போட்டேன்னு சொல்லிட்டிங்க.சூப்பர்..... வனி

உன்னை போல பிறரையும் நேசி.

வனி ரொம்ப அழகா இருக்கு. எனக்கு நேரமே இல்ல போடுவதற்க்கு..சுலபமான டிசைன் நல்லா இருக்கு.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வனி\\ இது கை வலி இருந்த நேரம் இடது கையால் வலது கையில் போட்டது.//
உண்மையிலே நம்ப முடியலை வனி இவ்ளோ அழகா இடதுகையாலும் உங்களால் மட்டுமேமுடியும் சூப்பர் சகலாகலா வல்லியே வாழ்த்துக்கள்

ஆஹா ரொம்ப அழகு!..எல்லாமே ஒரே டிஸ்டன்ஸ், எல்லா டிசைனும் ஒரே அளவுல, கொஞ்சம் கூட பிசிரு இல்லாம., அதுவும் ஒரு பத்து நிமிசத்துல போட்ட டிசைன் மாதிரி இருக்குன்னு ( கண்டிப்பா உங்களுக்கு அவ்வளவு நேரம்தான் ஆயிருக்கும்) பதிவு போட வந்தால் அட இன்னொரு ஆச்சரியம் இடது கையால் போட்டதுன்னு!! ... மூக்கு மேல விரல் வைச்சுட்டே டைப் பண்றேன்.. சூப்பர் வனி..;-)

Don't Worry Be Happy.

உங்க பதிவில்லாத கைவினையே இல்லை.. உங்கள் பதிவுகள் ஊக்கம் அளிக்கிறது. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யாழினி போங்க எனக்கு வெக்க வெக்கமா வருது ;) மிக்க நன்றி யாழினி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க வாங்க... உங்களுக்காக வாசல்லயே காத்திருக்கேன்... கை கால் எல்லாம் மருதாணி போட்டு விட தான். :) ரொம்ப நன்றி ரேவதி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கண்டிப்பா ட்ரை பண்ணுங்க. குச்சி இல்லாம நல்லா சுத்தம் பண்ணி செய்யுங்க. வாழ்த்துக்கள் அசத்த. எனக்கு இடது கையால் போடும் பழக்கம் உண்டு... வேறு ஒன்னுமே இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடடா... அறுசுவையில் சீனியர் ஆட்கள் அசத்தலான ஆட்கள் ஏகம் தேவி. நீங்களாம் வந்ததில் இருந்து அவங்களாம் அதிகமா வந்து நீங்க பார்க்கல, அதான் தெரியல. நான் முன்பே எங்கோ சொல்லிருக்கேன், நானே தான் 2 கைக்கும் போட்டுக்குவேன்னு. ஏன்ன எங்க வீட்டில் இதெல்லாம் பொறுமையா போட்டு விட ஆளில்லை. ரொம்ப நன்றி தேவி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நேரம் கிடைச்சா அவசியம் போட்டு எனக்கும் படம் அனுப்புங்க குமாரி :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க பதிவு மகிழ்ச்சியாய் இருக்கு பாத்திமா. ரொம்ப ரொம்ப நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//அதுவும் ஒரு பத்து நிமிசத்துல போட்ட டிசைன் மாதிரி இருக்குன்னு // - கண்டிப்பா இல்லை இம்முறை... நிச்சயம் வலதில் போடும் வேகம் இடதில் வராது எனக்கு. மெதுவா தான் போட்டேன். குறைஞ்சது 45 நிமிஷம் ஆச்சு. ரொம்ப ரொம்ப நன்றி ஜெய். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டிசைன பார்த்தவுடனே அது என் குரு வனிதாதான்னு என்னால் உறுதியா நினைக்க முடிஞ்சது,உள்ளே போய் பார்த்தா எல்லாரும் அவங்கவங்க மனசுபோல உங்களை வாழ்த்தி பாராட்டியாச்சி!இதுக்கு மேல நான் என்னத்த சொல்ல!!!!!!!!!!!!நானும் இடது கைய்யால் போடுவேன்,ஆனால் உங்க நேர்த்தி வருமான்னு தெரியல,இப்போ கைவசம் கோன் இல்ல,ஊரிலிருந்து வாங்கி வந்தபின் தான் போட்டு அனுப்பனும்,ஒரு முறை வலது கைய்யில் போட்டு அனுப்புகிறேன்,ஆனால் யாரும் சிரிக்க வேண்டாம்!!!!!!!!!!!!!

Eat healthy

ரசியா... உங்களுக்கு இடது கையில் போடுறதுலாம் ஒரு மேட்டரா???!!! சூப்பரா போடுவீங்க... இது நம்ம ரம்யாட பேசிட்டு இருந்தப்போ ஆச்சர்யமா கேட்டாங்க, அவங்களுக்காக போட்டு அனுப்பினது. மற்றபடி ஒன்னும் ஸ்பெஷல் இல்லை. நீங்க கலக்குவீங்கன்னு தான் அறுசுவைக்கே தெரியுமே. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இதெல்லாம் ரொம்ப ஓவர்.. ஹ்ம்ம்.. எனக்கு இடது கையில் ஒரு புள்ளிக் கூட வைக்கத் தெரியாது.. நீங்க மேரேஜ் டிஸைன் போட்டுட்டு ஓட்டாதிங்கனா சொல்றீங்க.. :(.. அத்தனை அழகு. உண்மையே “)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

//வழக்கம் போல கலைவாணி கைகளில் கரகம் ஆடறாங்க.. இதேல்லாம் உங்களுக்கு சாதாரணமப்பா// - ரம்யா... இதை தான் சொன்னேன்... ஓட்டாதீங்கன்னு ;) இதெல்லாம் ஓவரா இல்ல??? என்னை வம்பிழுக்கன்னே இப்போ எல்லாரும் முடிவா சுத்துறீங்க. உங்களுக்கு ஒரு மெயிலை தட்டி draft’ல கெடக்கு... அனுப்பறேன். பாருங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முகப்புல பாத்ததுமே உங்க கைவண்ணம்தான்னு நினைச்சேன்.இடது கையாலயும் மருதாணி போடுவீங்களாங்க?நான் எல்லாம் வலது கையால போட்டாலே சகிக்காது.எனக்கு போட்டுக்க மாட்டேன். என் பொண்ணுக்கு ரொம்ப புடிக்கும்.அவளுக்கு தான் போடுவேன்.அவளும் சூப்ப்ப்பரா இருக்கும்மா ந்னு சொல்லுவா???!!!ஹிஹ்ஹ்ஹிஹி....

ரொம்ப அழகா இருக்கு எப்பவும் போல...ஒங்க கைல கலைவாணியே குடியிருக்கா போல.வாழ்த்துக்கள்.

கவிதா.

anbe sivam

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி கவிதா. எல்லாரும் குட்டீஸ் கையில் தான் ஆரம்பிக்கறீங்க போல, பயிற்சியை?? ;) நம்மை நம்பி அவங்க தான் கை கொடுப்பாங்க, அதனால் துணிந்து போட்டு பார்த்துடனும். எனக்கும் கல்லூரி காலத்தில் சில தோழிகள் நம்பி கையை கொடுத்ததால் தான் இன்று இந்த அளவுக்காவது போட வருது... :D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிக்கா வழக்கம் போல கலக்குறீங்க....வாழ்த்துக்கள் வனிக்கா....

விடாம எல்லா கைவினையிலும் பதிவு போட்டு ஊகுப்படுத்தும் உங்களுக்கு மிகுந்த நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க பாட்டுக்கும் சுலபம்னு சொல்லிட்டீங்க....நீங்க அநாயாசமா போட்டு முடிச்சிட்டீங்க....நாங்கெல்லாம் பார்த்து ஜொள்ளு விட்டுட்டே இருக்கோம்....கண்டிப்பா அடுத்த தடவை இந்தியா வரும்போது உங்களை பார்த்து மெஹந்தி போட்டுக்கிட்டு தான் பிளைட் ஏறுவேனாக்கும் :)

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மிக்க நன்றி :) எப்போ வரீங்கன்னு சொல்லுங்க, உங்களுக்காக டஜன் கணக்கா கோன் வாங்கி வெச்சுடறேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) எப்போ வரீங்கன்னு சொல்லுங்க, உங்களுக்காக டஜன் கணக்கா கோன் வாங்கி வெச்சுடறேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா