தேதி: June 10, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
புழுங்கலரிசி - ஒரு கப்
கோழி எலும்பில்லாதது - 300 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி
மல்லி பொடி - இரண்டு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒன்று
மல்லி தழை, கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் உப்பு - தேவையான அளவு
தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.

அரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து நன்கு ஊறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிரைண்டரிலோ, மிக்ஸியிலோ நன்றாக அரைத்து எடுத்து, ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து அரைத்த மாவை ஊற்றவும்.

அடுப்பில் வைத்து மாவை கைவிடாமல் கிளறிக் கொண்டே வரவும். மாவு நன்கு கைகளில் ஒட்டாமல் கெட்டியாக உருண்டு வரும் போது அடுப்பை அணைக்கவும்.

கோழியை சிறுத் துண்டுகளாக்கி வைக்கவும்.

வேறு ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை, கறிவேப்பிலை, நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின் தக்காளி சேர்த்து வதக்கவும். அடுத்து மல்லி தழை சேர்த்து மேற் சொன்ன அனைத்து பொடிகளையும் போடவும்.

வதங்கியதும் கோழியை போட்டு கிளறி உப்பு சேர்க்கவும். அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கோழியை வேக விடவும்.

மாவு ஆறியதும் கையில் எண்ணெய் சிறிது தொட்டுக் கொண்டு கோலிகுண்டு அளவுக்கு மாவை எடுத்து உருண்டைகளாக உருட்டி விரலை நடுவில் வைத்து அழுத்தவும். இதுபோல் அனைத்து மாவையும் செய்து இட்லி தட்டில் வைக்கவும்.

அதை இட்லி பானையில் வைத்து அவித்து எடுக்கவும். பத்து நிமிடத்தில் வெந்துவிடும்.

வெந்து கொண்டிருக்கும் சிக்கன் கிரேவி திக்காக சுருண்டு வந்ததும் அதில் அவித்த அடையை கொட்டி கிளறவும்.

சிறிது நேரம் கிளறி பின் அடுப்பை நிறுத்தவும்.

மாலை இரவு நேர டிபனுக்கு ஏற்ற சிக்கன் அடை தயார். சுவை நன்றாக இருக்கும்.

Comments
ருக்சனா
நான் உருளை என்றே நினைத்தேன்... சம சூப்பரா இருக்கு. கண்டிப்பா ட்ரை பண்றேன். பார்ட்டிக்கு அட்டகாசமா இருக்கும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நானும் உருளை நு தான்
நானும் உருளை நு தான் நெனச்சேன் வனி அக்கா சொணமாத்ரி வித்தியாசமான குறிப்பு பார்க்கவே ரொம்ப சுபெரர்கு byElaya.G
ருக்ஸி
படத்தைவிட பேரு அழகா இருக்கு ;)
காணாம போயிட்டிங்க? குறிப்பு மட்டும் வருது ?
வாழ்த்துக்கள்
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ருக்சானா
ருக்சானா ,
அருமையான குறிப்பு ..
விரைவில் செய்து பார்க்கிறேன்
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
ருக்சானா,
ருக்சானா,
பேருக்கேத்த மாதிரியே, புதுமையா செய்திருக்கிங்க சிக்கன் குட்டிஅடை! படங்கள் பார்க்க அழகா இருக்கு! வாழ்த்துக்கள்!
அன்புடன்
சுஸ்ரீ
ருக்சானா
ருக்சானா அருமையான குறிப்பு வாழ்த்துக்கள்
ருக்ஸ்
ருக்ஸ் இது மாதிரி வெஜிடரியனல பண்ணி பார்த்து இருக்கேன். பேர் தக்கடினு நினைக்கிறேன். குட்டிஸ்க்கு இதுமாதிரி செஞ்சு கொடுத்தா பிடிக்கும். வித்தியாசமான குறிப்பு.
ருக்ஸானா
நான் கூட நீங்க ஜம்போ ப்ரான் சேர்த்து தான் செய்திருக்கீங்கன்னு நினைச்சேன்....வித்தியாசமான டிஷ். எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
லாவண்யா
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!