ப்ரைட் மேகி

தேதி: June 11, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

மேகி - ஒரு பார் (1 பாக்கெட்)
முட்டை - ஒன்று
கேரட், பீன்ஸ், வெங்காயம் தாள், காலிப்ளவர், பட்டாணி - ஒரு கப்
டேஸ்ட் மேக்கர் - ஒரு பாக்கெட்
வெள்ளை பூண்டு - 5 பல்
வெங்காயம் - ஒன்று
எண்ணெய் அல்லது பட்டர் - ஒரு மேசைக்கரண்டி


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கொதிக்கும் நீரில் மேகி பாரை போட்டு ஒரு நிமிடம் மட்டும் வைத்து விட்டு வடிகட்டவும். பின் குளிர்ந்த நீரில் அலசவும் (மேகியில் இருக்கும் ஒரு வித ரசாயன மெழுகு நீங்குவதற்காக)
வாணலியில் பட்டரை உருக்கி தட்டிய வெள்ளை பூண்டு போட்டு வதக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.
பிறகு காய்கறிகளை கொட்டி உப்பு சேர்த்து வதக்கவும். சிறிது நீர் தெளித்து வேக விடவும்
பின்னர் சுத்தம் செய்த மேகியை சேர்த்து எல்லாம் ஒன்றாக சேர கிளறவும்.
டேஸ்ட் மேக்கரை சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்கு கிளறி இறக்கவும்.
சுவையான ப்ரைட் மேகி ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எளிமையான செய்முறையில் சுவையான குறிப்பு வாழ்த்துக்கள் அமினா

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

எல்லோருக்கும் பிடித்தமான குறிப்பு தந்து இருக்கீங்க வாழ்த்துக்கள் by Elaya.G