புளி இல்லாக் குழம்பு

தேதி: June 6, 2006

பரிமாறும் அளவு: 6

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
பூண்டு - 2 பல்
அரைக்க:
சாம்பார் பொடி - ஒன்றரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 சிட்டிகை
எண்ணெய் - 3 டீஸ்பூன்
மல்லிதழை - சிறிது


 

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பூண்டை நசுக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும்.
இரண்டரை கப் தண்ணீரில் அரைத்த விழுதைக் கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
பிறகு, கரைத்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி, நசுக்கிய பூண்டைப் போட்டு, கொதித்ததும் இறக்கி, மல்லித்தழை தூவி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று மதியம் இந்தக் குழம்புதான். செய்வதற்கு ஈஸியாக இருந்தது. சுவையும் அருமை. இதையே காய்கறிகள் சேர்த்து செய்யலாமா?

தாராளமாக செய்யலாம்....அஸ்ஸார்டட் காய்கறிகளை சேர்த்தால் சுவையாக இருக்கும்..

சிட்டிகை பெருங்காயம் என்பதே மிகவும் குறைவான அளவுதான். 1/4 சிட்டிகை என்பது மிகவும் குறைவு அல்லவா? அவ்வளவு போதுமா அல்லது கால் தேக்கரண்டி என்பது தவறாக கால் சிட்டிகை ஆகிவிட்டதா? கால் சிட்டிகை எப்படி எடுப்பது :)

மன்னிக்கவும்...1 சிட்டிகை என்பதே சரி....தவறாக 1/4 சிட்டிகை என்று சேர்த்துவிட்டென்....தவறை சுட்டிகாட்டியதற்கு நன்றி...

Hello Anusha!

அது என்ன பெருங்காய அளவை மட்டும் அவ்வளவு துல்லியமாக கவனிக்கிறீங்க? இதுக்கு முன்னாடி கூட ஒரு ரெஸிபியில தவறு கண்டுபிடிச்சீங்கன்னு நெனைக்கிறேன். முக்கால் சிட்டிகை குறைவாய் போட்டாலும் குற்றம் குற்றமே ன்னு சொல்ற நக்கீர பரம்பரையோ! (சும்மா தமாசுதான். கோவிச்சுக்காதீங்க.)

by the way, Nithya madam, இன்னைக்கு ஆத்துக்காரி இந்தக் குழம்பைத்தான் கொஞ்சம் காய்கறியெல்லாம் சேர்த்துப் போட்டு பண்ணி ஜமாய்சுட்டா. பேஸ்.. பேஸ்.. கொஞ்சம் குருமா டேஸ்ட்ல இருந்தாலும், வித்தியாசமான ருசிதான்.

Due to my bad cold, i just wanted to make milagu rasam and after seeing your kuzhambu without puli wanted to try and while making the ingrediants to grind, i just replaced jeera with milagu roasted in nalennai and the final outcome tasted good and was sure an relief for my bad cold and throat.

thanks for the receipe :)

Hi நித்யா கோபால்,இன்று உங்க புளி(பருப்பும்) இல்லா குழம்பு தான் சூப்பர். இதே மாதிரி தான் நானும் சூப் செய்வேன் ஆனால் பூண்டு இல்லாமல்,சீரகத்திற்கு பதில் sombu சேர்ப்பேன். ரொம்ப சிம்பிளா செய்ய ஈசியாவும் இருந்தது.

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

புளி இல்லாக் குழம்பு மிகவும் நன்றாக இருந்தது செய்வதற்கு எளிமையாக இருந்தது நன்றி

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. லக்ஷ்மிஷங்கர் அவர்கள் தயாரித்த புளி இல்லா குழம்பின் படம்

<img src="files/pictures/aa337.jpg" alt="picture" />