முருங்கைக்காய் மசாலா

தேதி: June 13, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (5 votes)

 

முருங்கைக்காய் - நான்கு
பல்லாரி - ஒன்று
பூண்டு - 10 பல்
தக்காளி - ஒன்று
உப்பு - தேவைக்கு
அரைக்க:
தேங்காய் - அரை மூடி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
சோம்பு - அரை தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
பட்டை - 3 துண்டு
கிராம்பு - மூன்று
சோம்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

முருங்கைக்காயை நறுக்கவும். வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் காய வைத்து பட்டை, கிராம்பு, சோம்பு தாளித்து வெங்காயம் பூண்டு சேர்க்கவும்.
அதில் தக்காளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கியதும் அரைத்த தேங்காய் விழுது, முருங்கைக்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து சிவக்க வறுக்கவும்.
சுவையான முருங்கைக்காய் மசாலா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்க்க நல்ல காரசாரம தெரிது சூப்பர் வாழ்த்துக்கள் by elaya.G

அன்பு ஸ்வர்ணா,

மசாலா பொருட்களுடன் நல்லா வாசனையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

சூப்பர்!!! முருங்கைகாய் மசாலா... நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை. இன்னைக்கே ட்ரை பண்ணிடுவோம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுவர்ணா சூப்பரான மசாலா ரசச்சாதத்துக்கு நல்ல ஜோடி. பூண்டு சேர்த்து செய்தது இல்லை. நாளைக்கு செய்து பார்த்து விடுகிறேன்.

ஹய்யா!! ஸ்வர் வந்தாச்சு..!!

படம் பார்த்தவுடனே நினைச்சேன் நீங்கதான்னு.கரெக்ட்டா கண்டு பிடிச்சுட்டேன் ஸ்வர்.வரும் போதே சூப்பர் குறிப்போட வந்திருக்கீங்க.முருங்கைக்காய்,இப்படி சாப்பிட்டதில்லை ஸ்வர்.பார்க்கவே ஆசையாயிருக்குமா,செஞ்சு பார்த்திட்டு பதிவு போடறேன் ஸ்வர்.குறிப்பும் சூப்பர்,போட்டோஸ் எப்பவும் போல சூப்பர்.வாழ்த்துக்கள் தங்கப்பெண்ணே..

அன்புடன்
நித்திலா

இந்த மாசாலா பார்க்கவே சூப்பாரா இருக்கு....நான் பிரெஷ் முருங்கைக்காய்க்கு எங்கே போவேன்....சரி பிரோசனில் செய்து பார்க்கிறேன்....

வாழ்த்துக்கள்
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஸ்வர்ணா,

முருங்கைக்காய் மசாலா வாசம் இங்கே வருது போங்க..

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் ஸ்வர், நீங்க வரலனா என்ன உங்க குறிப்பு தொடந்து வருது ரொம்ப சந்தோஷம் ஸ்வர். நீங்க சீக்கிரம் வாங்க. முருங்கைகாய் மசாலா சூப்பரா இருக்கு. தேங்காய் சேர்த்து செய்து இல்ல செய்து பார்க்குரேன் வாழ்த்துக்கள்....

உன்னை போல பிறரையும் நேசி.

ஸ்வர்ணா நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்

என்ன கல்யாண வீட்டுகாரங்களே கல்யாணம் எல்லாம் நல்ல படியா முடிஞ்சதா. கிச்சன் கிள்ளாடியே வருக வருக. முருங்கைக்காய் என் விருப்பமான காய்களில் ஒன்று. சூப்பர் குறிப்பு வாழ்த்துகள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

சூப்பர் மசாலா.. ;)
எனக்கு மிகவும் பிடிக்கும்.ஆனால் பல்லாரினா என்ன?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

//ஆனால் பல்லாரினா என்ன?// - பெரிய வெங்காயம்... எங்க அம்மா கூட இந்த பேரை பயன்படுத்துவாங்க... கொஞ்ச நாளா இதை அவங்க சொல்றதில்லை, சென்னையில் புரியாது போலும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஓஹ்..அப்படியா?
இது முதன்முதலா கேள்விபடறேன் வனி
அடுத்த குறிப்பில் இந்த பேரு தான் நான் யூஸ் பண்ணப் போறேன் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இப்ப தான் மதிய சமையல்ல உங்க முருங்கைக்காய் மசாலா சமைச்சு ருசியும் பார்த்துட்டு வரேன்... ரொம்ப சூப்பர்ங்க. செய்ய சுலபமாவும் இருந்தது, சுவையாகவும் இருந்தது. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்க்கு நன்றிகள்......

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இளையா முதலாய் வந்து வாழ்த்து கூறியமைக்கு மிக்க நன்றி.....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சீதாம்மா தங்கள் வருகைக்கு மிக்க நன்றிம்மா....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி மிக்க நன்றி......
எனக்காக வந்து ரம்ஸ்க்கு பதில் அளித்ததற்க்கு மிக்க நன்றி வனி...

இன்னிக்கு இந்த மசாலா செய்து சாப்டீங்களா மிக்க சந்தோசம் வனி....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வினோ ஆமாம்ப்பா இந்த மசாலா ரசம் சாதம்,தயிர்சாதத்துக்கு சரியான ஜோடி கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்கப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நித்தி படம் பார்த்ததும் நான்னு கண்டுபிடிச்சியா எப்படிடா?
நித்தி வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிப்பா....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

லாவண்யா மிக்க நன்றி. அடடா உங்களுக்கு பிரெஷ் முருங்கை கிடைக்காதா சரி பரவால்ல நான் அனுப்பிருக்கரதை எடுத்துக்கோங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கவி வாசனை அங்க வந்துடுச்சா ஆஹா மிக்க நன்றிப்பா....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தேவி வாழ்த்துக்கு மிக்க நன்றிடா.....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பாத்திமா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரே எப்படிடா இருக்க? கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதுடா..

முருங்கைக்காய் உனக்கும் பிடிக்குமா பா எனக்கும் ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கு மிக்க நன்றிப்பா...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரம்ஸ் எனக்கும் பிடிச்ச மசாலா :) பல்லாரின்னா பெரிய வெங்காயம் பா சாரிப்பா தாமதமான பதில் :(

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.