முட்டைகோஸ் சட்னி

தேதி: June 14, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (7 votes)

 

நறுக்கிய முட்டைகோஸ் - அரை கப்
புதினா - கால் கப்
உளுந்து, கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 8
கடுகு, சீரகம், பெருங்காயம், எண்ணெய் - தாளிக்க
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பானில் எண்ணெய் விட்டு சூடானதும் உளுந்து, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
பின்பு முட்டை கோஸ் சேர்த்து நன்கு வதக்கவும்.
புதினா இலைகளை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஆற வைத்து அரைக்கவும்.
பின்பு கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து சேர்க்கவும்.
எளிமையாக செய்யக்கூடிய முட்டை கோஸ் சட்னி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முட்டைக்கோஸ் ல சட்னி யா ஹ்ம்ம் நல்ல இருக்கே செய்து பார்த்துவிட்டு சீக்கிரமா எப்படி இருந்ததுன்னு சொல்லுறேன் by Elaya.G

சூப்பர். முட்டைகோஸ் சட்னி.. பார்க்க படங்களும் நல்ல தெளிவு... அழகு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவி முட்டைகோஸ்ல ச்ட்னியா? புதுவிதமான குறிப்பு சீக்கிரமே செய்துடுறேன் வாழ்த்துக்கள்

இப்போ தான் முதன் முறை கேள்விபடறேன்
கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கவிதா,
முட்டைகோஸ் சட்னி,இப்படி எல்லாம் யோசிக்க உங்களால் மட்டும்தான் முடியும்.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.புதினாவும் சேர்த்தது வித்தியாசமான முயற்சி.வாழ்த்துக்கள்.

அன்பு கவிதா,

சூப்பராக இருக்கு குறிப்பு. சீக்கிரமே செய்து பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கும்,குழுவினர்க்கும் எனது நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

இளையா ,

செய்து பாருங்க..
வாழ்த்திற்கும்,பதிவிற்கும் நன்றி ..

என்றும் அன்புடன்,
கவிதா

வனிதா மேடம் ,

வாழ்த்திற்கும்,பதிவிற்கும் நன்றி ..

என்றும் அன்புடன்,
கவிதா

பாத்திமா அம்மா ,

வாழ்த்திற்கும்,பதிவிற்கும் நன்றி ..

என்றும் அன்புடன்,
கவிதா

ரம்யா ,

ஹோட்டல்களில் செய்யும் வெங்காய சட்னியில் பாதிக்கு பாதி முட்டைகோஸை வதக்கி சேர்ப்பாங்க என்று கேள்விபட்டேன் உடனே தான் இந்த ஐடியா..

செய்து பாருங்க ..வாழ்த்திற்கும்,பதிவிற்கும் நன்றி ..

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பரசி,

புதினா சேர்த்தால் கொஞ்சம் கூட பச்சை வாசனை வரவில்லை..செய்து பாருங்க ..வாழ்த்திற்கும்,பதிவிற்கும் நன்றி ..

என்றும் அன்புடன்,
கவிதா

சீதா அம்மா ,

செய்து பாருங்க ..வாழ்த்திற்கும்,பதிவிற்கும் நன்றி ..

என்றும் அன்புடன்,
கவிதா

முட்டைகோசில் சட்னி கூட அறைக்கலாமா? அப்போ ஹோட்டலில் செய்யும் சட்னியின் ரகசியம் இது தானோ :) உங்களுக்கு மட்டும் எப்படி இந்த விஷயம் எல்லாம் தெரிகிறது....ரகசியமா எனக்கு மட்டும் சொல்லுங்க...என்ன ஓகேவா?

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நேற்று உங்க புளியோதரை குறிப்பு செய்து பதிவிட்டேன், நீங்க பார்க்கல போல... இன்று இந்த குறிப்பு தான் செய்ய போறேன்... :)

-- செய்துட்டேன் கவிதா செய்துட்டேன். ரொம்ப சுவையா இருந்தது... ஹோட்டல்ல சாப்பிடும் சட்னி போல, ஆனா அதை விட சுவையா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வித்தியாசமான recipe .செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள் கவிதா.

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

லாவண்யா,

எல்லாமே செவி செல்வம் தான்..தெரிந்தால் கண்டிப்பாக சொல்கிறேன்..

ட்ரை பண்ணுங்க வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

வனிதா மேடம்,

ஹையோ நன்றி உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப ரொம்ப சந்தோசம்

என்றும் அன்புடன்,
கவிதா

சங்கரி,

ட்ரை பண்ணுங்க வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

என் தங்கை பெயரும் கவிதாதான். :)

கவிதா, புதினாவுக்குப் பதிலாக கொத்தமல்லி சேர்க்கலாமா?

அன்புடன்,
குரு

குரு அண்ணா,
கொத்தமல்லி சேர்த்து ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் பச்சை வாசம் வரும்னு நினைக்கிறன்..
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா