வெண்டைக்காய் மசாலா

தேதி: June 14, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (5 votes)

திருமதி. தளிகா அவர்களின் குறிப்பைப் பார்த்து சிறு மாற்றங்களுடன் செய்தது.

 

வெண்டைக்காய் - 15
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - 3/4 தேக்கரண்டி
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பூண்டு - 3 பல்
கறிவேப்பிலை - 10 இலைகள்
கரம் மசாலா பொடி - கால் தேக்கரண்டி
தேங்காய் பால் - கால் கப்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தாளிக்க:
சீரகம் - கால் தேக்கரண்டி


 

வெண்டைக்காய் மற்றும் தேவையான மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், உப்பு அனைத்தையும் தயாராக வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை நறுக்கி கொள்ளவும். பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்.தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.
வெண்டைக்காயை கீழிலிருந்து மேலாக கீறி காம்பு பகுதியில் கீறாமல் வைக்கவும். எல்லா பொடிகளையும் ஒன்றாக கலந்துக் கொண்டு அதை நடுவே வைக்கவும். இதேப் போல் மீதமுள்ள வெண்டைக்காய்களில் தேய்த்து வைக்கவும்.
ஒரு தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் வெண்டைக்காயை போட்டு 5 நிமிடம் வதக்கி வேறு பாத்திரத்தில் வைக்கவும்.
வேறு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து தட்டி வைத்துள்ள பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இதனுடன் கலந்து வைத்துள்ள பொடியில் மீதமானதையும் சேர்த்து கிளறவும். சிறிது கரம் மசாலா பொடி சேர்க்கவும்.
இப்போது வதக்கி வைத்துள்ள வெண்டைக்காய்களை சேர்க்கவும்.
இதனுடன் தேங்காய் பால் ஊற்றவும். கறிவேப்பிலையை சேர்க்கவும்.
மூடியிடாமல் கொதிக்க விட்டால் தேங்காய் பால் நன்கு வற்றி மசாலா வெண்டைக்காயில் பிடிக்கும். உப்பு சரிப் பார்த்து தேவையெனில் சேர்க்கலாம். விரும்பினால் கிரேவியாகவும் விடலாம்.
தொக்கு பதம் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
சுவையான வெண்டைக்காய் மசாலா தயார். இது தயிர் சாதத்துக்கு நல்ல காம்பினேஷன். சாம்பார் சாதம், ரசம் சாததுக்கும் ரொம்ப நல்லா இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்க்கவே சாப்பிடனும் போல ஆசையா இருக்கு எனக்கு வெண்டைக்காய் ல பண்ற எல்லாமே ரொம்ப பிடிக்கும் நல்ல குறிப்பு தந்து அசத்திடிங்க வாழ்த்துக்கள் by elaya.G

ஹர்ஷா வெண்டைக்காய் மசாலா சூப்பர். குறிப்பின் சிறு மாற்றம் பூண்டு சேர்த்து இருக்கீங்க. தாளிகா அக்கா குறிப்பில் பார்த்தேன் தேங்காய் எண்ணெய் சேர்த்து இருக்காங்க. நீங்களும் தேங்காய் எண்ணெய்தான் பயன்படுத்தி இருக்கீங்களா.வெறும் குறிப்ப படத்தோட பார்க்கும்போது செய்து பார்க்க வேண்டுமென்ற ஆவலை தூண்டுகிறது.

ம்ம்ம்ம் எம்மிமிமிமி

வெண்டைக்காய் மசாலா சூப்பரோ சூப்பர் வாழ்த்துகள்!

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

உங்க குறிப்பு போல் எனக்கு தளிகா குறிப்பு எப்பவுமே ரொம்ப விருப்பம்... வித்தியாசமா சூப்பரா இருக்கும். நீங்க வேறஅசத்தலா செய்து காட்டி இருக்கீங்க... இனி சும்மா இருக்க முடியுமா??? வெண்டைக்காய் வாங்கி செய்து சாப்பிட்டா தான் நிம்மதி!!! :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹர்ஷா வெண்டைக்காய் மசாலா சூப்பர் சீக்கிரமே செய்துடுறேன் வாழ்த்துக்கள்

எனது விளக்கப்பட குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கும்,அறுசுவை குழுவினருக்கும் எனது நன்றிகள்.

குறிப்பை வழங்கிய ரூபீனாவுக்கும் எனது நன்றிகள்.

பார்த்தாவே செய்து சாப்பிடனும்னு தூண்டுது.. ;)
கண்டிப்பா செய்துட்டு வந்து எப்படி இருக்குனு சொல்றேன் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இளையா,
முதலாவதாக வந்து பதிவு போட்டதற்கு ரொம்ப நன்றி.இது ரொம்ப சுவையான குறிப்பு.கண்டிப்பா செய்து பாருங்க.

வினோ,
இந்த குறிப்பில் சீரகம் போட்டு தாளித்து இருக்கிறேன்.பூண்டு தட்டி போட்டு இருக்கிறேன்.தேங்காய் எண்ணெய்க்கு பதில் வெஜிடபிள் ஆயில் யூஸ் பண்ணேன்.அவங்க குறிப்பில் வெண்டைக்காயை வதக்கி தனியே எடுத்து வைத்துவிட்டு அதே எண்ணெயில் செய்ய சொல்லி குறிப்பிட்டிருந்தார்.கடைசியில் மசாலா போல் வர வேண்டும். நான் கொஞ்சம் ட்ரையாக்கி சொதப்பிட்டேன்னு நினைக்கிறேன்.இவை தான் நான் செய்த மாற்றங்கள்.
ஆர்வத்துடன் கேட்டதற்கு ரொம்ப நன்றி,வினோ.

ரேவதி,
ஆமாங்க,இது ரொம்பவே சுவையான குறிப்பு.இத்தனை நாட்களாக மிஸ் பண்ணிட்டேன். நீங்களும் செய்து பாருங்க.பதிவுக்கு நன்றி.

வனிதா,
ஆமாம்,தளிகாவின் குறிப்புகள் எல்லாமே அருமையாக இருக்கும்.தளிகாவின் இந்த குறிப்பு ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது.இவ்வளவு சுவையான குறிப்பை செய்து சாப்பிட்டு சும்மா இருந்தால் எப்படி? அதான் படங்களுடன் அனுப்பிவிட்டேன்.வெண்டைக்காய் வாங்கியதும் செய்துட்டு சொல்லுங்க.உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி.

ஃபாத்திமா அம்மா,
கண்டிப்பா செய்து பாருங்க.சுவைக்கு நான் கேரண்ட்டி.உங்க அன்பான பதிவுக்கு நன்றி.

ரம்ஸ்,
கண்டிப்பா ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

அன்பு ஹர்ஷா,

தெளிவான படங்களும் விளக்கங்களும் ரொம்ப நல்லா இருக்கு. விருப்பப் பட்டியலில் சேர்த்துட்டேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பரசி,

கமகம வெண்டைக்காய் மசாலா!!!
வெண்டைக்காய் இன்னும் இங்கு காணக்கிடைக்கவில்லை ..கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

சீதாலக்ஷ்மி அம்மா,
உங்க அன்பான பின்னூட்டத்துக்கும்,விருப்ப பட்டியலில் சேர்த்ததற்கும் ரொம்ப நன்றி.
புது கேமரா.அதான் ஃபோட்டோஸ் பளிச்சுனு இருக்கு;-))).அதையும் கவனித்து குறிப்பிட்டதற்கு நன்றி.

கவிதா,
குட்டீஸ் நலமா?முழு வெண்டைக்காய் கிடைக்கும் போது செய்து பாருங்க.பதிவுக்கு ரொம்ப நன்றி.

தேங்காய் பால் சேர்த்து இது வரையில் வெண்டைக்காய் செய்ததில்லை. நல்லதொரு குறிப்பை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

குறிப்பை தந்த தளிகாவுக்கும் நன்றி.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா,
நானும் இதுவரை வெண்டைக்காயில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்ததில்லை.இதுதான் முதல்முறை.உங்க பதிவுக்கு நன்றி.

சூப்பரா இருக்குது ஹர்ஷா.வெண்டைக்காயிலிருந்து ஒரு கொழ கொழப்பாக வருமில்லையா அதற்கு என்ன செய்யலாம்.வெண்டைக்காய் எனக்கு மிகவும் பிடித்த காய்கறி.உங்க டிஷ் கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.

Expectation lead to Disappointment

எதிர்பார்க்காமல் இப்படி கிடைக்கும் பாராட்டுக்கள் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்..அதுக்கு ஹர்ஷாவுக்கு நன்றி.பார்க்கும்போதே செய்து சாப்பிட தூண்டுகிறது படங்கள்..எல்லோரும் செய்து பாருங்க நாக்கில் சுவை நிற்கும்

Thank you Vanitha&Lavanya.

மீனாள்,
உங்க பதிவுக்கு நன்றிங்க.வெண்டைக்காயை அலசி,ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது துணியால் தண்ணீரை துடைத்த பின் கட் பண்ணுங்க.எண்ணெய் கொஞ்சம் அதிகமா ஊற்றி வதக்கினால் கொழ கொழப்பு போய்டும்.ட்ரை பண்ணி பாருங்க.

தளிகா,
குறிப்பை கவனித்து,வந்து பதிவு போட்டதற்கு ரொம்ப நன்றி,தளிகா.வெண்டைக்காய் மசாலாவின் சுவை ரொம்ப நல்லா இருந்தது.உங்க குறிப்புக்கு நன்றி.

அன்பரசி ,

வெண்டைக்காய் மசாலா ரொம்ப நன்றாக இருந்தது..நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா,
வெண்டைக்காய் மசாலா செய்து பார்த்துட்டீங்களா?பின்னூட்டம் தந்ததற்கு ரொம்ப நன்றி.

அன்பு ஹர்ஷா,

வெண்டைக்காய் மசாலா செய்தாச்சு, சாப்பிட்டாச்சு!! சூப்பர் டேஸ்ட்!!

குறிப்பைத் தந்த தளிகாவுக்கும், செய்து காண்பித்த உங்களுக்கும் நன்றியும் பாராட்டுக்களும்.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாலக்ஷ்மி அம்மா,
வெண்டைக்காய் மசாலா உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி.