கத்திரிக்காய் சம்பல்

தேதி: June 15, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (5 votes)

 

கத்திரிக்காய் - ஒன்று (பெரியது)
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று (பெரியது)
பச்சை மிளகாய் - 4
புளித் தண்ணீர் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
மல்லி தழை - சிறிது
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி


 

வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
கத்திரிக்காயின் மேல் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் வைத்து சுடவும்.
கத்திரிக்காயை சுட்டு தோல் எடுத்து அதில் புளி தண்ணீர் உப்பு போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் வெங்காயம், தக்காளி, மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். (வெங்காயம் சிவக்க வதக்கவும்)
வதக்கிய கலவையை பிசைந்த கத்திரிக்காயில் போட்டு நன்கு கிளறி விடவும்.
மேலே மல்லி தழை தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப வித்யாசமா இருக்கே இந்த குறிப்பு சூப்பர் வாழ்த்துக்கள்

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

இளையா முதல் ஆளாய் வந்து வாழ்த்தியதற்க்கு மிக்க நன்றி

எனக்கு அறுசுவையில் கேள்வி கேட்பது எப்படி என்று தெரியவில்லை,எப்பட அனுப்புவது சொல்லுங்கள் ...

malachikkal udhavungal

எனக்கு அறுசுவையில் கேள்வி கேட்பது எப்படி என்று தெரியவில்லை,எப்பட அனுப்புவது சொல்லுங்கள் ...

malachikkal udhavungal

சம்பல்ன்னு பார்த்ததும் யார் குறிப்புன்னு குழம்பிட்டேன்... நீங்களா??? நல்ல குறிப்பு... நல்ல கலர். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பெயரும் வித்தியாசமாக இருக்கு குறிப்பும் வித்தியாசமாக இருக்கு. நான் இதுவரை கேள்விபடாத பெயர் செய்முறை. வாழ்த்துகள். இன்னும் இது போல் புதுவிதமான குறிப்புகளை கொடுக்க வாழ்த்துகள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

பாத்திம்மா கத்திரிக்காய் சம்பல் ஈஸியா இருக்கு. இது எதற்கெல்லாம் மேட்ச்சாக இருக்கும்.

மேலே மன்றம்ன்னு இருக்கும் அதுல போய் கிளிக் பண்ணுங்கள் புதிய கேள்வி சேர்க்கன்னு வரும் அதை கிளிக் பண்ணி கேளுங்கள்

வனி யாருன்னு நினைச்சீங்க? நானேதான் வருகைக்கு நன்றி

ரேவதி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

என்பெயர் பார்த்திமா இல்லை (பாத்திமா)

வினோ இது சாதம் பிரியாணி தோசை எல்லாத்துக்கும் மேட்ச்சாக இருக்கும் வருகைக்கு நன்றி

அன்பு ஃபாத்திமா,

அருமையான சைட் டிஷ் செய்து காண்பித்திருக்கீங்க, பாராட்டுக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

சூப்பர் குறிப்பு.
கத்தரிக்காய் நான் தவறாமல் வாங்கும் காய்
அவசியம் செய்து பார்க்கிறேன்
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஃபாத்திமா அம்மா,
கத்தரிக்காய் சுட்டு சமைப்பதை கேள்விப்பட்டு இருக்கேன்.
செய்ததில்லை.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

இந்த சம்பல் எனக்கு மிகவும் பிடித்த ஒரு டிஷ். வெகு நாட்களாய் செய்யாமல் மறந்தே விட்டது. உங்களின் குறிப்பை பார்த்ததும் ஆசை வந்து விட்டது. குறிப்பிற்கு மிக்க நன்றி.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சீதா உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

ரம்யா அவசியம் செய்து பாருங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

ஹர்ஷா கண்டிப்பா செய்து பாருங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

லாவண்யா இப்போ ஞாபகப் படுத்திட்டேனா சீக்கிரம் ஆசையை நிறை வேற்றுங்கள்
வருகைக்கு நன்றி

பாத்திமா அம்மா,

கத்திரிக்காய் சம்பல் நல்லா இருக்கு இங்கு எலெக்ட்ரிக் burner தான் இருக்கு சுட்டு எடுக்க வேற எந்த முறையில் செய்யலாம் தெரிந்தால் சொல்லுங்க

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிஎலெக்ட்ரிக் burner ல சுடகூடாதா?அவனில் சுடலாமான்னு தெரியலை
வருகைக்கு நன்றி

பாத்திமா கத்திரிக்காய் சம்பல் நல்லா இருக்கு..எனக்குதான் கத்திரிக்காய் பிடிக்காது என கணவருக்கு பிடிக்கும் செய்து பார்கிறேன் வாழ்த்துக்கள் .

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ரொம்ப புதுசா இருக்கு, கத்ரிக்காய் இருக்கு செய்து பாக்கா போறேன்.