பிண்டி மசாலா

தேதி: June 15, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (6 votes)

 

வெண்டைக்காய் - கால் கிலோ
சாட் மசாலா - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கடலை மாவு - ஒரு மேசைக்கரண்டி
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
மசாலா செய்வதற்கு:
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 4
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
புதினா - ஒரு கைப்புடி
கரம் மசாலா - 2 தேக்கரண்டி
கசூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - ஒன்று
முந்திரி - 15
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி - அலங்கரிக்க
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


 

வெண்டைக்காயை கழுவி வில்லையாக நறுக்கி நன்கு பரப்பி காய வைக்க வேண்டும். மாலையில் செய்வதென்றால் காலையிலே வெட்டி காய வைத்து விட வேண்டும்.
அதனுடன் பொரிப்பதற்கு கூறியவை அனைத்தையும் சேர்த்து கிளறி வைக்க வேண்டும். கடலை மாவு ஏதாவது சிறிதளவு ஈரம் இருந்தாலும் எடுத்து விடும்.
எண்ணெய் காய வைத்து பொரித்தெடுத்து எண்ணெய் உறுஞ்சும் பேப்பரில் போட்டு வைக்கவும். வெண்டைக்காய் பச்சையாக இருக்கும் போதே எடுத்து விட வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய தக்காளி, புதினா, கரம் மசாலா, பொடித்த காய்ந்த மிளகாய், கசூரி மேத்தி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.
எண்ணெய் சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் ஓரளவிற்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வாசம் போகும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கும் போது நேரிடையாக வாணலியில் சேர்த்து வதக்கவும்.
இப்பொழுது தக்காளி கலவையை சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும். மசாலாவிற்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கினால் சீக்கிரமே வதங்கி விடும்.
அதனுடன் அரைத்து வைத்துள்ள முந்திரி விழுது மற்றும் வெண்ணெய் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். முந்திரி சேர்த்தவுடன் தீயை குறைத்து வைக்கவும். இல்லையென்றால் அடிபிடிக்கும். சிறிதளவு தண்ணீர் கூட தெளித்துக் கொள்ளலாம்.
பிறகு பொரித்து வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும். மசாலா வெண்டைக்காயில் நன்கு ஏறியதும் இறக்கவும்.
இறக்கியதும் கொத்தமல்லி தூவி பரிமாறவும். சூடு சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடலாம். முந்திரி மற்றும் வெண்ணெய் சேர்க்காமலும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப சுவையான குறிப்புன்னு பார்த்தாலே தெரிது அப்டியே எனக்கு அனுப்பி வையுங்க கொஞ்சமா சாப்ட் எப்படி இருந்ததுன்னு சொல்லுறேன். கசூரி மேத்தி எதற்காக சேற்குறது ? அது இல்லாமா செய்யமுடியுமா ? இங்க கிடைக்குமா? by Elaya.G

எனக்கும் குறிப்பு பிடிச்சு இருக்கு. மறக்காமல் இருக்க 'புக்மார்க்' செய்து வைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

சூப்பர்... பேரை பார்த்து ஆமினா குறிப்போன்னு நினைச்சேன்... அசத்துறீங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லாவண்யா நீங்களும் வெண்டைக்காய்ல சூப்பர் ரெசிப்பி செஞ்சு காண்பிச்சு இருக்கீங்க. அங்க தேங்காய் பால் சேர்த்து, இங்க முந்திரி, வெண்ணெய் எல்லாம் சேர்த்து நல்லா ரிச்சா செஞ்சு இருக்கீங்க. வாழ்த்துக்கள்

அன்பு லாவண்யா,

முந்திரி, வெண்ணெய் போட்டு சுவையோ சுவையாக செய்திருக்கீங்க. செய்து பார்த்து விடுகிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

பேரு ரொப்ம சூப்பர்.. பிண்டினா என்ன? வெண்டைக்காயா?
குறிப்பும் புதுமையா இருக்கு .வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

லாவண்யா,
பிந்தி மசால் சூப்பரா இருக்கு.செய்முறையும் நல்லா இருக்கு.டயட் என்னாச்சு?முந்திரியும்,வெண்ணையும் சுண்டி இழுக்குது.வாழ்த்துக்கள்.

லாவண்யா,

பிண்டி மசாலா சுண்டி இழுக்குது
அன்பரசி கேட்ட அதே கேள்வி தான்.. டயட் என்னாச்சு?
எப்படியும் செய்து தான் பார்க்க போறேன் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

இருந்தாலும் என்னை வெச்சி இப்படி காமெடி பண்ணக் கூடாது இளையா.......பொதுவாக வட நாட்டில் செய்யும் பல கிரேவி வகைகளுக்கு கசூரி மேத்தி சேர்ப்பார்கள். அது ஒரு வகையான வாசம் மற்றும் சுவையை கொடுக்கும். கசூரி மேத்தி என்றால் உலர்ந்த வெந்தைய கீரை தான்.

சுட்டிப்பெண் இமாவுக்கும் பிடித்ததில் ரொம்பவே சந்தோஷம். (இருந்தாலும் நான் இந்த பதிவை அழுதுகிட்டே தான் அடிக்கிறேன் :(

ஆமினா ஆந்திரா குறிப்பை தான் மொத்த குத்தைகைக்கு எடுத்துட்டாங்களே.....இனி அதில் செய்ய ஒண்ணுமே இல்லை...அதான் வட இந்தியா பக்கம் தாவிட்டேன். நன்றி வனி :P

வாழ்த்துக்கு நன்றி வினோஜா. எந்த ஒரு க்ராவியிலும் முந்திரி விழுது சேர்த்தால் அதன் சுவை (மற்றும் கலோரியும் !?) கூடும் ;)

சீதாலக்ஷ்மி, இந்த குறிப்பு உங்களின் மகளுக்காக தான் :))

ஹிந்தியில் பிண்டி என்றால் வெண்டைக்காய். இது மகாராஷ்ட்ராவில் நான் சாப்பிட்டு எனக்கு ரொம்பவும் பிடித்து போன டிஷ். செய்து பாருங்க ரம்மி....ரொம்பவே பேஷா இருக்கும் :)

அன்பரசி...டயட் எல்லாம் ஒரு தனி ட்ராக்குல ஓடிட்டு தான் இருக்கு.....இதை மாதிரி ஏதாவது அப்போ அப்போ செஞ்சிட்டு சாப்பிடவா வேண்டாமான்னு மனசுக்குல பட்டிமன்றம் நடத்தி....கடைசியில் சாப்பிடு கட்சி தான்.....பிறகு என்ன மறுபடியும் மாங்கு மாங்குன்னு டயட் தான் :P

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இப்படியா நான் டயட்டில் அப்போ அப்போ இல்லாத விஷயத்தை பப்ளிக்குட்டி பண்றது :( செய்து பாருங்க. வாழ்த்துக்கு நன்றி.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அன்பு லாவண்யா,

சென்ற வாரம், பிண்டி மசாலா செய்து சாப்பிட்டாச்சு. சூப்பர் டேஸ்ட்.

முதல் நாள் ஹர்ஷாவின் குறிப்பும், மறு நாள் இந்தக் குறிப்பும் செய்தோம்.

எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது.

அன்புடன்

சீதாலஷ்மி