How to clean mushroom

நான் இதுவரை காளானை உபயோகபடுத்தியதில்லை.அதனால் யாரவது எப்படி கழுவி உபயோகிபது என கூறவும் plz

எனக்கு தெரிந்த முறையை நான் கூறுகிறேன்.நான் பயன்படுத்துவது பட்டன் மஷ்ரூம்.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சுட வைத்து காளானை போட வேண்டும்.நல்லா கொதித்து வரும் போது அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் கழித்து அந்த தண்ணீரை ஊற்றி விட்டு பச்சை தண்ணீரில் நல்லா இரண்டு முறை கழுவினால் அதில் உள்ள மண் போன்றவை போய்விடும்.பின் நமக்கு வேண்டிய விதத்தில் கட் பண்ணி உபயோகிக்கலாம்.

காளான் பிரியாணி,பொரியல்,குருமா போன்றவை செய்யலாம்.

Expectation lead to Disappointment

எப்பொழுதுமே மஷ்ரூமை கழுவியவுடன் சமைத்தால் அதிகப்படியான தண்ணீர் விடும். அதனால் மஷ்ரூமை கழுவி ஒரு துணியில் காய வைக்க வேண்டும், அல்லது ஒரு ஈர துணியை கொண்டு மஷ்ரூமை அழுந்த துடைத்தால் அழுக்கு எல்லாம் வந்து விடும் அப்படியே நறுக்கி கொள்ளலாம். துணியை மட்டும் அடிக்கடி கழுவி பிழிந்துக் கொள்ளவும்.

http://arusuvai.com/tamil/recipes/271

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நம்முடைய மல்லிகா பத்ரினாத் ஒரு நிகழ்ச்சியில் சொன்னார் காளானை எப்பொழுதுமே சீக்கிரமாக கழுவி எடுக்க வேண்டுமாம்...மற்ற பொருட்களை போல நீண்ட நேரம் தண்ணீரில் விடாமல் சீக்கிரமாக கழுவி உடனே ஒரு பருத்தி துணியால் துடைத்து விட வேண்டுமாம் இல்லையெனறால் தண்ணீர் விடும்..அதன் பிறகு செய்து பார்த்தேன் சரிதான்

உங்க இரண்டு பேருக்கும் ரொம்ப நன்றி.இனிமேல் நீங்க சொன்னபடி காளானை சமைக்கிறேன்.நான் செய்யும் முறையில் தண்ணீர் விட்டு கொண்டே வரும்.இனி சரியான முறையில் செய்கிறேன் .

Expectation lead to Disappointment

பதில் சொன்னது நானில்லையே... லாவண்யா, தளிகா... மாற்றுங்க பதிவில் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்