Black Grapes Nallatha

<!--break-->

பொதுவாகவே grapes இந்த நேரத்தில் கூடாது .. inku நேரடி யாக பூச்சி கொல்லி adipathaal நமக்குநல்லது ு அல்ல.
black grapes கூடாது என்று தெரியும். வேண்டாம் ...

கருப்பு திராட்சை:
************************

1.திராட்சை சதைகளில் கிடைக்கும் மிகப் பெரிய சத்து புரோஆன்தோ சயனிடின் என்பதாகும். இதையே புரோசயனிடின், பைக்னோஜெனால் என்பதுண்டு.

2.இந்த புரோஆன்தோ சயனிடின் திராட்சை சதைகளில் 20 உள்ளது. ஆனால் அதன் விதைகளில் 80 உள்ளது. இந்த வியக்கத்தக்க செய்தியை தெரிந்த பின்பு
சதைகளை விட்டு விதைகளை உண்ணத் துவங்கிவிடுவோம்.

3.உலகில் மாரடைப்பு நோய் குறைவாக உள்ள நாடு பிரான்ஸ் என ஆய்வுச் செய்திகள் கூறுகின்றன. அதற்குக் காரணம் திராட்சைப் பழத்தின் ஒயினை அவர்கள் அதிகம் பயன்படுத்துவது என்பதும் தெரியவந்துள்ளது.

4.அமெரிக்க நாட்டில் பயன்படுத்தும் மூலிகை மருந்துகளில் திராட்சை விதைகள் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. வருடத்திற்கு நான்கு மில்லியன் யூனிட்டு கள் பயன்படுத்துகின்றனர்.

5.`ரெஸ்வெரட்டால்' என்கிற ஒருவகை இயற்கை அமிலம் திராட்சையில் அதிகமாக காணப்படுகிறது. இந்த அமிலம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுப்பதுடன், தேவையில்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.

6.திராட்சைச் சாறுடன் சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மட்டும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரியாகும்
வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆற திராட்சை சிறந்த மருந்தாகும்.

7.இதை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள், பற்கள் கெட்டிப்படும். மேலும் இருதயம் பலப்படும் .

8.அனைத்து வகை திராட்சைகளும் உடல் நலத்திற்கு மிக மிக நல்லது திராட்சையை தினமும் உண்ண வேண்டும். திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம் உள்ளது .
9.கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் மற்றும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன.

10.நாற்பது வயதிற்கு மேல் பெண்களுக்கு மாதவிடாய்த் தொல்லை தீர திராட்சை ஜூஸ் தினமும் குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து குடித்து வந்தால் மாதவிடாய்த் தொல்லை வராது.

கருப்பு திராட்சை விதைகளின் மருத்துவப் பணிகள்:
**************************************************************************

1.கருப்பு திராட்சை விதைகளில் புரோ ஆன்தோ சயனிடின் 80 உள்ளது. திராட்சை விதைகளின் சத்தில் எவ்விதமான பக்கவிளைவுகளும் கிடையாது

2.வைட்டமின்-சியை விட இருபது மடங்கு சக்தியுள்ளது.

3.ரத்தக் கொதிப்பு நோய்க்கு அரு மருந்தாகப் பயன்படுகிறது.

4.ரத்தக் குழாய்களில் அடைப்பு, ரத்தக் குழாய்களின் வீக்கம் ஆகியவற்றை திராட்சைப் பழவிதை குறைக்கிறது.

5.ரண சிகிச்சையின் காயத்தை விரைந்து ஆற்றுகிறது. மூலநோய் உள்ளவர்களின்
ரத்தப் போக்கை துரிதமாகக் கட்டுப்படுத்துகிறது.

6.ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்டிராலை கரைக்கிறது. சர்க்கரை
நோயாளிகளுக்கு காலில் மரத்துப்போகும் தன்மை, கண் புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது. கண் புரை வந்தாலும் நீக்குகிறது.

7.சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்யப் பயன்படுகிறது.

8.மாலைக்கண் நோய் நீக்கி கண்களில் ஒளியைத் தருகிறது.

9.பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் நோய்களிலிருந்து தடுக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.

10.நினைவாற்றலை மேலும் வளர்க்கிறது. வயதான நாட்களில் ஆண்களுக்கு தொல்லை தரும் புராஸ்டேட் புற்று வராமல் தடுக்கிறது.

நன்றி Renuka.

மேலும் சில பதிவுகள்