ஸைலன்ஸ்

என்ன பாக்கறீங்க.. இது நம்ம அரட்டைக்கு துளியும் சம்மந்தமில்லாத வார்த்தை.. கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனு தான் நானே சிந்திச்சு வெச்சேன்.. ஹீஹீஹீ எப்படி இருக்கு ?

அப்பாடா நான் தான் அரட்டை அடுத்த இழை துவங்கி இருக்கேன்.. கடமை முடிந்தது.. எத்தனை நாள் ஆச்சு.. இழை துவங்கி :)

எல்லாரும் ஓடி வாங்கனு கூப்பிடவே வேண்டாம்..என்னவோ அரட்டைக்கு நாம கூப்பிட்டாத் தான் வருவோம் மாதிரி... :)
எல்லாரும் சேர்கிற களமே இது தானே ....

தோழிகள் அனைவரும் நலமா?

என்னப்பா காலையிலேயே இப்படி கறிகுழம்பு,கோழிகுழம்பு என்று சொல்லி ஆசையை தூண்டி விடுறீங்க....

அன்புடன்
மகேஸ்வரி

வாங்க வாங்க.. உங்க வீட்டில் என்னக் குழம்புனு சொல்லலையே.. ;)
சாப்பட்டை பற்றி பேசுவதில் எனக்கு அத்தனை மகிழ்ச்சி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஷேக்:

எங்க வீட்டிலேயும் எல்லாரும் நல்ல சுகம்;) இதோ இனி இரண்டு மாதம் ரோஹித் ஸ்கூல் லீவு... இனி அறுசுவையே கதின்னு வந்துருவேன்;-)

வனி:

இப்பதான் கறிக்குழம்பு சாப்பிட்டத ஒருத்தங்க சொல்லி புகை வர வச்சாங்க அதுக்குள்ள நீங்க கோழிக்கறின்னு சொல்லி கண்ணுல தண்ணி வர வைக்கிறீங்க;(
எங்க வீட்டில இன்னிக்கு வெறும் சாதம் பருப்புதான்;(

ரம்ஸ்:

நீங்க பண்ணி அனுப்புங்க எப்படியும் ரோஹித்த சாப்பிட வைச்சிடறேன்;)

Don't Worry Be Happy.

தவமணி அண்ணா என்ன வந்ததும் வராததுமா இப்படி சொல்றீங்க...?சில நாட்களாகவே திருப்பூர் சுற்றி,இப்படி கேள்விப்பட்டோம்..இப்போது அங்கையுமா?அங்கு விவசாயம்தானே அதிகம் பின் எப்படி?என்ன காரணமென யாராவது கண்டுபிடித்தாகளா?நிலமை சகஜமாகிவிட்டதா?

அதான் எனக்கும் நம்ப முடியல... எந்த பாதிப்பும் இல்லை. சேலம் மாவட்டத்தை சார்ந்த ஆத்தூர்தான் பூகம்பத்தின் மையம். அங்கே சுவர்கள் விரிசல் அடைந்தன என்று செய்திகளில் பார்த்தேன். மற்றபடி யாருக்கும் பாதிப்பு இல்லை. இங்கேல்லாம் பூகம்பம் வரப்போகுதான்னு நினைத்த காலம் போய் இப்போ பூகம்பத்தை நேரடியாகவே அனுபவித்தாச்சு. தென்னிந்தியாவை பூகம்ப அபாய பகுதிகளாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
வாங்க ஷேக் நலமா, எங்கே ரொம்ப நாளா காணவில்லை.
ரேனுகா நல்லாருக்கீங்களா. ஊட்டில குளுகுளுன்னு இருப்பீங்க ஹீம் என்ன பண்றது... இங்கே பயங்கர வெயில் கொளுத்துது.

அன்புடன்
THAVAM

அடத் தோழிகளே உங்களுக்காக நான் தெரிந்து கொண்டதை பதிவிடுகிறேனே.......பார்த்து படித்து,அவை பற்றி உங்களுக்கு தெரிந்ததை பகிர்ந்து கொண்டால் நன்மை விளையுமல்லவா?போய் பாருங்கள் அறிவோம் ஆயிரம் பகுதியை....இல்லைன்னா நான் அழுதுடுவேன்...ம்...ம்...ம்ம்:(

மகி:

பாருங்க எல்லாரும் ரவுண்டு கட்டி அடிச்சிட்டு இங்க வந்து எப்படி பெருமையா சொல்லிக்கிறாங்க;( இருங்க இருங்க நாம இரண்டு பேரும் நாளைக்கு வான்கோழி சமைச்சு சாப்பிடலாம்;-)

ரேணு:

கண்டிப்பா போர் போட்டு நிலத்தில இருக்கிற தண்ணியெல்லாம் எடுத்ததினால் இருக்கலாம்;( ஆனா நீங்கதான் என்கூட பேசவே மாடேங்கிறீங்களே;((

Don't Worry Be Happy.

திருநாவுக்கு அரசர் தவமணி அண்ணா!புதுப் பெண் புதுமை பெண் ரம்யா மேம் இருவருக்கும்..காலை மதிய இடையே உள்ள கால வணக்கம்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

//இன்று எங்கள் பகுதியில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 2.9 என்று அரசு அறிவித்துள்ளது.
ஏதோ பெரிய பொருள் ஒன்று பூமியில் மோதிய உணர்வு... இது பூகம்பம் என்பதை உணரவே கொஞ்ச நேரம் ஆய்ட்டது// - அடடா.... ஒன்னும் பிரெச்சனை இல்லையே...

நான் தர்மபுரி மாவட்டத்தில் இருந்த போது ஒரு முறை இரவு நேரம் உணர்ந்திருக்கேன்... அப்போது 4. சந்திங்.... ஆனா அதை உணர்ந்து நாங்க வெளியே வரும் முன் நின்னுட்டுது. நான் தான் தூங்கின எல்லாரையும் எழுப்பி சொன்னேன்... ஆடுது ஆடுதுன்னு... :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமாம் தவம்ஸ் அண்ணா.......அங்கு இங்கென கேள்விப்பட்டு இப்போது நம்மிடமே வந்துவிட்டது......இதற்கெல்லாம் காரணம்,புவி வெப்பமடைதலும்,பூமியை நோண்டி தண்ணியெடுக்கிறேனென்று கூறி ஓட்டை போட்டுட்டு தண்ணியில்லைன்னதும் அதைப் பற்றி கவலைப்படாமல் குழியை மூடாத பல மூடர்களால் வந்தது....அந்த குழிக்குள் வளிமண்டல வெப்பக் காற்று சென்று பூமியை கோவப்படுத்துகின்றாது......
அண்ணா இங்கு ஒரே மழை......விடாமல் பெய்தது .நேற்றும் இன்றும்தான் வெய்யில் வந்தது......துணிகளை அலசி காயப் போட்டுள்ளேன்.........

மேலும் சில பதிவுகள்