புதினா சம்பால்

தேதி: June 7, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிறிய தேங்காய் - பாதி
புதினா - ஒரு பிடியளவு
புளி - சிறிய எலுமிச்சையளவு
காய்ந்த மிளகாய் - 4 அல்லது 5
சிறிய வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு


 

முதலில் காய்ந்த மிளகாயை நெருப்பில் சுட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் தேங்காய், புதினா இலை, புளி, உப்பு அனைத்தையும் வைத்து அரைத்து, வழிக்கும் முன்பு வெங்காயத்தை சேர்த்து நசுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
புதினா சேர்ந்திருப்பதால் இது மிகவும் உற்சாகம் தரக்கூடிய ஒரு துவையலாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நன்றி அஸ்மா!
மாசிக் கருவாடு சம்பலுக்கான குறிப்பும் தாருங்களேன்.....குறிப்பிட்ட அந்தக் கருவாட்டு வகையில் தான் செய்ய முடியுமா? அல்லது எல்லா வகை கருவாடுகளிலும் செய்ய இயலுமா?... விளக்குங்கள்...

Vazhga Tamil!!!

Dear சித்ரா,
நீங்கள் கேட்ட மாசிக் கருவாட்டு சம்பாலின் செய்முறையை இன்றைய அல்லது நாளைய எனது குறிப்பில் உங்களுக்காக சேர்ப்பேன். படித்து, செய்து பாருங்கள்!
மாசிக் கருவாட்டில் மட்டும்தான் நாங்கள் சம்பால் செய்வோம். மற்ற கருவாடு வகைகளில் சம்பால் செய்தது கிடையாது! sorry!

சம்பல் என்றால் துவையலா? சம்பல் என்று குழம்பு வகையில் ஏதோ சாப்பிட்டதாக ஞாபகம்.

ஆம்! துவையலை இஸ்லாமியர்கள் சம்பால் என்று சொல்வோம்.ஆனால் இந்த மாசிக்கருவாட்டு சம்பால் தண்ணீர் சேர்க்காமல் செய்யப்படும் துவையலாக இருப்பதால், கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்!