சோயா 65

தேதி: June 23, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

சோயா - ஒரு கப்
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கடலை மாவு - அரை கப்
தயிர் - கால் கப்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
ஆரஞ்சு கலர் (விருப்பப்பட்டால்) - ஒரு பின்ச்
சிக்கன் 65 பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க


 

முதலில் மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துக் கொள்ளவும்.
சோயாவை கொதிக்கும் நீரில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.
பின் நீரில்லாமல் மிக்ஸியில் வடித்து போட்டு அரைத்துக் கொள்ளவும். அல்லது கையிலேயே பொடியாக உதிர்க்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர மற்ற பொருட்களை சேர்த்து பிசைந்து கால் மணி நேரம் ஊற விடவும்.
பின் சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான சோயா 65 ரெடி. மாலை நேர சிற்றுண்டியாகவும் குழம்புகளுடன் பக்க உணவாகவும் சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனக்கு சோயா ல செய்ற உணவு எல்லாமே ரொம்ப பிடிக்கும் ந ஒரு டைம் மிக்சி ல அரைச்சு செய்துருக்கேன்.இத செய்து பார்த்துவிட்டு சொல்லுறேன் எப்படி இருந்ததுன்னு வாழ்த்துக்கள் by ELaya.G

ஈஸி வெஜ் 65 நல்லா இருக்கு. கோலா உருண்டை மாதிரியும் இருக்கு.

soya65 nallaruku................senchu pathtu solren..........

ஆமினா சிஷ்டர் , சோயா 65 சுவையாக இருந்தது. குறிப்புக்கு நன்றி. வாழ்த்துக்கள்.